பிரம்மாண்ட நெடுந்தொடர் “வாணி ராணி“… ஜூலை 19 முதல் கலைஞர் தொலைக்காட்சியில் !
சென்னை : மக்களின் மனம் கவர்ந்த பிரம்மாண்ட நெடுந்தொடரான வாணி ராணி கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.
ஜூலை 19ந் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
ராதிகா சரத்குமார் எழுத்தில், ஓ என் ரத்தினம் இயக்கத்தில் இத்தொடர் உருவாகி உள்ளது.

புதிய புதிய தொடர்கள்
பெருகி வரும் தொழில்நுட்ப வளச்சியின் காரணமாக திரைப்படங்களை விட தொலைக்காட்சி சீரியல்களே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறன. அதனை கருத்தில் கொண்டு திரைப்படங்களுக்கு நிகராக சீரியல்களை கொண்டு வர தொலைக்காட்சிகள் நாள்தோறும் புதிய புதிய முயற்சிகளில் களமிறங்கி வருகின்றன.

சீரியலை விரும்பும் மக்கள்
அனைத்து சீரியல்களும் குடும்ப உறவுகளுக்குள் ஏற்படும் முன்விரோதம், பொறாமை ஆகியவற்றை மையமாக கொண்டு கதை நகர்ந்தாலும், அடுத்த நாள் எபிசோட்டில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பே ரசிகர்களை சீரியல் பக்கம் திருப்பி விடுகிறது.
Recommended Video

இரட்டை வேடத்தில்
அந்த வகையில், ராதிகா சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்து மாபெரும் வரவேற்பை பெற்ற நெடுந்தொடர் வாணி ராணி. அக்கா தங்கையான வாணி ராணி, அண்ணா தம்பிகளை திருமணம் செய்து கொண்டு ஒரே குடும்பத்தில் வாழ்க்கையை தொடங்குகிறார்கள். அக்கா வாணி பெரிய வழக்கறிஞராக இருக்க, தங்கை ராணி படிப்பறிவு இல்லாத பெண்ணாக நடித்துள்ளார். அதேநேரம் குடும்பத்தை கெட்டிக்காரத்தனமாக நடித்தி நற்பெயர் எடுக்கிறாள்.

ஜூலை 19ந் தேதி முதல்
இத்தொடர் ஜூலை 19ந் தேதி முதல் இரவு 8.30 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. வாணி ராணி தொடரில் ராதிகா சரத்குமார், வேணு அரவிந்த், பப்லு பிரித்விராஜ், நீலிமா ராணி, அருண் குமார் ராஜன், விக்கி கிரிஷ், சாந்தி வில்லியம்ஸ், மமீலா ஷைலாஜா பிரியா உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதையடுத்து கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த திருமதி செல்வம் வரும் 19ந் தேதி முதல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











