Actress Radhika: வாவ் ராதிகா.. வாரே வாவ் ராகுல்.. கலக்கல் சரத்.. 3 டிவீட்.. ஹேப்பி செய்தி!

சென்னை: ராதிகா என்றால் எனர்ஜி.. எந்த வேலையாக இருந்தாலும் சரி சுருதி சுத்தமாக முடிப்பதில் அவருக்கு நிகர் அவரே.. இதோ இப்போதும் கூட பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறார். ஒரு புதிய இலக்கை நோக்கி.

பிரிக்க முடியாதது எதுவோ சன் டிவியும் ராதிகாவும். இப்படித்தான் இத்தனை காலமாக அத்தனை பேரும் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் இந்த ஜோடி பிரியப் போகிறது போல. ராதிகாவின் ஒரு டிவீட் அதைத்தான் உணர்த்துகிறது.

சந்திரகுமாரி சீரியலின்போது ஏற்பட்ட உரசல் பெரிதாகி இப்போது சன் குழுமத்தை விட்டே ராதிகா வெளியேறும் முடிவுக்கு வந்து விட்டதாக சொல்கிறார்கள். அதை உறுதிப்படுத்துவது போல அவரும் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.

எல்லா சானல்களிலும்

ராதிகா போட்டுள்ள ஒரு டிவீட்டில் எப்போதுமே கன்டென்ட்தான் ராஜா. ரடான் புதுப் பொலிவுடன் மேலும் முன்னேறும் நோக்கில் நடை போடவுள்ளது. அனைத்து சானல்களிலும் இனி ரடானைப் பார்க்கலாம். விரைவில் எங்களது நிகழ்ச்சிகள் குறித்த விவரத்தை வெளியிடவுள்ளோம். எங்களது சிறந்ததை கொடுக்க முயல்வோம். தொடர்ந்து ஆதரவாக இருங்கள் என்று கேட்டுள்ளார் ராதிகா.

எந்தெந்த சானல்களோ

எந்தெந்த சானல்களோ

ராதிகா கூறியிருப்பதைப் பார்த்தால் மேலும் பல டிவிகளில் ரடான் தொடர்கள் வரப் போவது உறுதியாகியுள்ளது. அவை தொடர்களா அல்லது ரியாலிட்டி நிகழ்ச்சிகளா. டாக் ஷோவா என்று தெரியவில்லை. ஆனால் இதுவரை எந்த நிறுவனமும் செய்யாத வகையில் கலந்து கட்டி கலக்கப் போகிறார் ராதிகா என்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது. இது மிகப் பெரிய செய்தியாகும்.

ராகுல் பிறந்த நாள்

அடுத்த செய்தி.. ராதிகாவின் மகன் ராகுல் குறித்தது. ஆமாங்க, ராகுலுக்குப் பிறந்த நாள். லண்டனில் வைத்து ஜாலியாக கொண்டாடியுள்ளனர். மகன் குறித்து ராதிகா பெருமை பொங்க டிவீட் போட்டுள்ளார். அதில், என் அன்புக்குரிய ராகுலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். நீல நிறக் கண்ணனாக இருந்து இன்று மீசை முளைத்த பையனாக மாறியுள்ளாய். ஐ லவ்யூ. உன் கனவுகள் எல்லாம் நனவாகட்டும் என்று கூறியுள்ளார் ராதிகா. ஆயிரம் இருந்தாலும் மகன் மீது தாய்க்குத்தான் பாசம் ஜாஸ்தி.

கிரிக்கெட் கிரிக்கெட்

இது கிரிக்கெட் அப்டேட். ஆமாங்க, குடும்பத்தோடு லண்டன் போய் விட்டார் ராதிகா. இன்று இந்தியாவுக்கும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கும் கிரிக்கெட். அதைப் பார்க்கத்தான் கணவர் சரத்குமார், மகன் ராகுலுடன் டேரா போட்டுள்ளார் ராதிகா. அதுகுறித்த அப்டேட்தான் இது.

சீக்கிரம் வந்து சிலிர்க்க வைக்கும் சீரியல்களை ஆரம்பிங்கம்மா ராதிகாம்மா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X