chithi 2 serial: சித்தி ஆக்ஷனில் இறங்கிட்டாங்க.. இனி அடிச்சு துவம்சம்தான்!
சென்னை: ரொம்ப சாஃப்டான சித்தியையே பார்த்து திமிர் என்ன விலைன்னு கேட்கும் ஆட்டிடூடில் இருந்த நந்தினி, சித்தியின் இன்னொரு முகத்தை பார்க்கப்போறா. இதோ சித்தி ஆக்ஷனில் இறங்கிட்டாங்கல்ல...! ஐயோ பாவம்னு இருக்கறதுக்கு அவங்க அம்மா இல்லையே... சித்தீதீ!
சன் டிவியின் சித்தி 2 சீரியலில் போலீஸ் ஸ்டேஷனில் சித்தி சாரதாவுக்கு கோவம் வந்துருது. ரவுடிங்க தனது மகன் அன்புவை அடிப்பதை பொறுத்துக்க முடியாமல், ரவுடியை அடிக்க ஆரம்பிச்சு இருக்காங்க. ஸ்தம்பித்து நிக்கறாங்க ரவுடிகள். போலீஸ் ஸ்டேஷனிலேயே உங்க ரவுடித்த தனத்தை காண்பிக்கறீங்களான்னு கோபம் கொப்பளிக்க பார்க்கறாங்க.
நந்தினி இப்போதாவது திருந்துவாளா, சித்தியின் இன்னொரு முகத்தைப் பார்த்து நந்தினிக்கு பயம் வருமா? காதலித்து கரம் பிடித்த அன்பு திரும்ப வீட்டுக்கு வருவானா, இல்லை ஜெயிலுக்கு போய்விடுவானா என்று எதிர்பார்ப்பு நிறைந்த வகையில் சித்தி 2 பயணம் இருக்கு.

சின்னத்திரை சினிமா
சினிமாவில் ஹீரோக்களுக்கு மவுசு...ஆனால், சின்னத் திரையில் ஹீரோயின்களுக்குத்தான் மவுசு என்று ராதிகா ஒரு மேடையில் பேசி இருந்தார். எப்போதும் எங்க முகத்தில் ஆரம்பிச்சு எங்க முகத்தில்தான் எபிசோட் முடிப்பாங்கன்னும் சொல்லி இருந்தார். அதே மாதிரி ராதிகா சீரியல்களில் மட்டும், ஆரம்பிக்கும்போதும் ராதிகா முகம்தான், முடிக்கும்போதும் ராதிகா முகத்தில்தான் முடிப்பார்கள்.

நடை பின்னர் முகம்
சினிமா ஹீரோக்களில் மாஸ் ஹீரோ என்றால் முதலில் முகத்தைக் காண்பிக்க மாட்டார்கள். அவர் ஒடி வரும்போது கால் காண்பித்து பின்னர் முகத்தை காண்பிப்பார்கள். சித்தி 2 சீரியலில் ராதிகா பட்டுப்புடவை சரசரக்க நடந்து வருவார். யானை மாலை போடும்.. அப்போது ராதிகாவின் முகத்தை காண்பிப்பார்கள். சின்னத்திரை ஹீரோயின்கள் ஆசை எல்லாம் தீரும்படி ராதிகாவின் சீரியல் அத்தனையும் இருக்கும்.

கொலை அன்பு
அன்புவை காதலித்து கல்யாணம் செய்து கொண்டு இருக்கும் நந்தினி, அன்பு கொலை செய்து இருக்கான்னு என்கிட்டே சொல்லாம இருந்து இருக்கீங்க.. அப்போ நான் இந்த குடும்பத்துக்கு யார் ஆன்ட்டி என்று கேட்பதில் மட்டும் நியாயம் இருக்கிறது.பதட்டப்படுவாங்கன்னு சொல்லாம விடுவதில் என்ன நியாயம் இருக்க முடியும்? தெரிந்தால்தானே, அன்புவை இனியும் கல்யாணம் செய்துக்கணுமா, இல்லை யோசித்து செய்யலாமா என்று ஒரு பெண் முடிவெடுப்பாள்?

அக்யூஸ்ட் என்றாலும்
என்னதான் அன்பு தள்ளிவிட்டு அவன் இறந்து போனான் என்றாலும் அதற்கும் தண்டனை என்று ஒன்று இருக்கும்தானே...அவன் அக்யூஸ்ட்டாக இருந்தாலும் அன்பு செய்தது தவறுதான் என்று கதையை கொண்டு போவார்களா, இல்லை சித்தி பவர் இதுக்கெல்லாம் யூஸ் ஆகுமா? பார்க்கலாமே... லாஜிக் இல்லாத சித்தி 2... மாஸ் சித்தி 2 இங்கு எப்படி வேலையைக் காட்டுகிறது பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











