ராஜா உடன் நான்… ரேடியோ மிர்ச்சி செந்திலின் அனுபவங்கள்

By Mayura Akilan

சென்னை: இரவு நேரங்களில் அழுகை சீரியல்களை பார்த்துக் கொண்டு டிவிகளில் மூழ்கிக் கிடப்பவர்களுக்கு எப்.எம் ரேடியோவில் பாடல் கேட்டு பழக்கம் இருக்காது.

சரவணன் மீனாட்சி ஹீரோ செந்தில் ரேடியோ மிர்ச்சியில் இரவு நேரத்தில் தொகுத்து வழங்கும் நீங்க நான் ராஜாசார் நிகழ்ச்சி இளையராஜாவின் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது. மெலோடி ரசிகர்களுக்கு பிடித்தமானது.

அலுத்து களைத்து உறங்கச் செல்லும் போது காதில் ஹெட் போன் மாட்டிக்கொண்டு நீங்க, நான், ராஜா சார் நிகழ்ச்சியை கேட்டுக்கொண்டே உறங்குவது பலருக்கு பழக்கமாகிவிட்டது.

ரேடியோ ஜாக்கியாகவும், டிவி சீரியலில் ஹீரோவாகவும் பங்களிப்பை கொடுத்து வந்த செந்தில் தற்போது சினிமாவில் நடித்து வருகிறார். நிகழ்ச்சிக்காக இளையராஜா உடனான தனது அனுபவங்களை குமுதம் இதழில் பகிர்ந்துள்ளார்.

ராஜாவின் ரசிகன்

ராஜாவின் ரசிகன்

ராஜா சாரின் வெறி பிடித்த ரசிகன் நான். அவரையும், அவரது இசையையும் ரொம்ப பிடிக்கும். அதனாலேயே நீங்க நான் ராஜா சார் நிகழ்ச்சியின் மீது தனி ஈடுபாடு ஏற்பட்டது.

தேசிய விருது கிடைத்து போல

தேசிய விருது கிடைத்து போல

நான் நடித்த செங்காத்து பூமி படத்திற்கு இளையராஜா தான் இசை. படம் பார்த்து விட்டு நடிப்பை பாராட்டினார். எனக்கு தேசிய விருது கிடைத்தது போல இருந்தது.

ராஜா கொடுத்த புத்தகம்

ராஜா கொடுத்த புத்தகம்

நிகழ்ச்சியில் அவரைப்பற்றி தகவல்களை நான் கூறுவதைக் கேட்ட ராஜா, அவர் எழுதிய இரண்டு புத்தகங்களை எனக்கு பரிசளித்தார்.

அம்மாவுக்கு நகை

அம்மாவுக்கு நகை

அம்மாவை அழைத்துக்கொண்டு போய் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். அம்மாவுக்கு நகை வாங்கிக் கொடுத்தியா, மகிழ்ச்சியாக பார்த்துக்கோ என்று கூறி தட்டிக்கொடுத்தார்.

எளிமையான ராஜா

எளிமையான ராஜா

ரேடியோவில் எப்படி பேசவேண்டும் என்று ராஜா எனக்குக் கற்றுக்கொடுத்தார். அவரை பக்கத்தில் இருந்து பார்ப்பவர்களுக்குத்தான் ராஜா இத்தனை எளிமையானவரா?என்று நினைக்கத் தோன்றும். வெள்ளந்தியாகப் பேசுபவர்களிடம் மனம் ஒன்றிப் போவார் ராஜா என்று கூறியுள்ளார் ரேடியோ மிர்ச்சி செந்தில்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X