'ஐ நோ.. ஐ நோ..ஐ நோ..' வியாழன் இரவு ரகுவரனின் கலக்கல் ஹிட் படம்!

By Sudha

சென்னை: ரகுவரன் பேசிய அட்டகாசமான வசனத்துக்காகவே பிரபலமான புரியாத புதிர் படம் சன் டிவியில் வியாழக்கிழமை இரவு ஒளிபரப்பாகிறது.

வாராவாரம் ஒவ்வொரு தீம் வாரமாக கடைப்பிடித்து வரும் சன் டிவி இந்த வாரத்தை சஸ்பென்ஸ் வாரமாக கொண்டாடப் போகிறது.

24 மணி நேரம்

24 மணி நேரம்

திங்கள்கிழமை இரவு 11 மணிக்கு ஒளிபரப்பாகவிருப்பது 24 மணி நேரம். மோகன், நளினியின் ஜோடியில் உருவாகி வெளியான திரில்லர் படம் இது. சத்யராஜின் வில்லத்தனம் அனைவரையும் அப்போது உலுக்கியது. இளையராஜாவின் இன்னிசையில் பாடல்களிலும் கலக்கிய படம் 24 மணி நேரம்.

வெள்ளை ரோஜா

வெள்ளை ரோஜா

சிவாஜி கணேசன், பிரபு நடித்த சூப்பர் ஹிட் திரில்லர் படம் இது. இதிலும் இளையராஜாவின் இசை பின்னிப் பெடலெடுத்திருக்கும். இது செவ்வாய்க்கிழமை இரவு 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

ஊமை விழிகள்

ஊமை விழிகள்

புதன்கிழமை இரவு 11 மணிக்கு ஊமை விழிகள். தமிழ்த் திரையுலகில் பல வரலாறுகளைப் படைத்த படம் இது. விஜயகாந்த்தின் அட்டகாசமான புலனாய்வு நடிப்பு. படம் நெடுகிலும் கலக்கலாக அமைந்த பரபரப்பு. காட்சிகளின் படமாக்கம். பாடல்கள் என அனைத்திலும் புதுமை படைத்த படம் இது.

ஐ நோ.. ஐ நோ... புரியாத புதிர்

ஐ நோ.. ஐ நோ... புரியாத புதிர்

வியாழக்கிழமை இரவு போடப்படும் படம் புரியாத புதிர். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இது அகதா கிறிஸ்டியின் நாடகத்தைத் தழுவி உருவாக்கப்பட்ட படம். ரகுவரன் இப்படத்தில் பேசிய ஐ நோ ஐ நோ என்ற வசனம் இன்றளவும் சிலாகித்துக் கூறப்படும் அளவுக்கு பிரபலமானது. ரகுவரன், சித்தாரா, ரேகா, சரத்குமார் நடித்த இப்படம் 90ல் ஹிட்டான படமாகும்.

விசில்

விசில்

வெள்ளிக்கிழமை ஒளிபரப்பாகிறது விசில். பெரிய அளவில் பேசப்பட்டாலும் கூட பெரிதாக ஓடாத ஒரு திரில்லர் படம் இது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X