ராய் லட்சுமி நடிப்பில் ‘சிண்ட்ரெல்லா’..திகிலைப் பரவவிடும் தருணங்கள்.. எந்த சேனல்? எப்போது ஒளிபரப்பு?
சென்னை : தமிழக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ராய் லட்சுமியின் நடிப்பில் வெளிவந்த 'சிண்ட்ரெல்லா' திரைப்படத்தை ஒளிபரப்புகிறது கலர்ஸ் தமிழ்
இருக்கையின் நுனிக்கே உங்களை வரவைக்கும் திகிலும், பயங்கரமும் கலந்த சிண்ட்ரெல்லா திரைப்படத்தின் ப்ரீமியரை வரும் ஞாயிறு இரவு 7.00 மணிக்கு கலர்ஸ் தமிழில் கண்டு மகிழுங்கள்
தமிழகத்தில் வளர்ந்து வரும் பொது பொழுதுபோக்கு தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழ், இந்தவார ஞாயிறன்று வழங்கவிருக்கும் திகில் விருந்துக்கு தயாராகுங்கள்.

சினி ஜம்போ
ராய் லட்சுமியின் நடிப்பில் வெளிவந்து, திகில் திரைப்படமான சிண்ட்ரெல்லா தமிழ் தொலைக்காட்சி ப்ரீமியர், 2022 பிப்ரவரி 27 வரும் ஞாயிறன்று இரவு 7.00 மணிக்கு அதன் சிறப்பு சண்டே சினி ஜம்போ நிகழ்வின் ஒரு அங்கமாக தொலைக்காட்சி திரைகளில் கலர்ஸ் தமிழ் வழங்குகிறது. எஸ் எஸ் ஐ புரொடக்ஷன்ஸ்-ன் தயாரிப்பில் வினு வெங்கடேஷின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவான திகில் திரைப்படமான சிண்ட்ரெல்லாவில் முதன்மை கதாபாத்திரமாக ராய் லட்சுமி நடித்திருக்கிறார். சாக்ஷி அகர்வால், ரோபோ சங்கர், கல்லூரி வினோத் மற்றும் மோகன் ராமன் ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

சிண்ட்ரெல்லா ஆடையைக் கண்டு
சவுண்டு இன்ஜினியராக பணியாற்றும் அகிரா (ராய் லட்சுமியின் நடிப்பில்) என்ற இளம்பெண், ஒரு ஹாலிவுட் திரைப்படத்திற்காக அரிதான சில பறவைகளின் சப்தங்களை பதிவு செய்வதற்காக ஒரு மலைவாச ஸ்தலத்திற்கு செல்லும்போது ஏற்படும் நிகழ்வுகளை இத்திகில் திரைப்படம் சித்தரிக்கிறது. பழமையான புராதனப்பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் சிண்ட்ரெல்லா ஆடையைக் கண்டு, அதை வாங்கி தனது தங்குமிடத்திற்கு கொண்டு வரும்போது அகிராவிற்கு அமானுஷ்ய அனுபவங்கள் ஏற்படுகின்றன. இதற்குப் பிறகு என்ன நிகழ்கிறது என்பதை படத்தின் எஞ்சிய பகுதி நேர்த்தியாக சொல்கிறது. நகைச்சுவையான அதே நேரத்தில் திகிலைப் பரவவிடும் தருணங்களோடு சிறந்த காமெடி விருந்தாகவும் இந்த நிகழ்வுகள் இருக்கின்றன.

ரோபோசங்கர், சாக்ஷி அகர்வால்
இத்திரைப்படம் குறித்து நடிகை ராய் லட்சுமி பேசுகையில், "கலர்ஸ் தமிழ் போன்ற தமிழ்நாட்டின் முன்னணி சேனலில் நான் நடித்த திரைப்படமான சிண்ட்ரெல்லாவிற்கு ப்ரீமியர் வாய்ப்பு கிடைத்திருப்பது எனக்கு பெரும் உற்சாகமளிக்கிறது. இத்திரைப்படத்தின் ஒரு அங்கமாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருப்பது அளவற்ற மகிழ்ச்சியை எனக்குத் தந்தது. அதுவும் ரோபோசங்கர், சாக்ஷி அகர்வால் மற்றும் இன்னும் பல நடிகர்களோடு முதன்முறையாக சேர்ந்து இத்திரைப்படத்திற்காக பணியாற்றியது மறக்க முடியாத இனிய அனுபவமாக இருந்தது. இத்திரைப்படத்திற்காக நடித்தது எனக்கு மகிழ்ச்சியை தந்ததைப் போலவே கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் இத்திரைப்படத்தை பார்வையாளர்களும் ரசித்து மகிழ்வார்கள் என்று நான் நம்புகிறேன்," என்று கூறினார்.

லட்சக்கணக்கான ரசிகர்களை
தனது திரைப்படம் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவது குறித்து பேசிய இதன் இயக்குனர் வினு வெங்கடேஷ் கூறியதாவது: "ஒரு திரைப்பட இயக்குனராக எனது பயணத்தின் முதலடியை எடுத்து வைக்க வகை செய்திருப்பதால், சிண்ட்ரெல்லா திரைப்படம் எனது மனதிற்கு எப்போதும் மிகவும் நெருக்கமானதாகவே இருக்கும். எனது அறிமுகத் திரைப்படம் கலர்ஸ் தமிழில் ப்ரீமியர் நிகழ்வாக லட்சக்கணக்கான ரசிகர்களை சென்றடையும் என்பது எனக்கு மகிழ்ச்சியும், உற்சாகமும் தருகிறது. ஒரு குழுவாக இத்திரைப்படத்திற்கு நடிகர்களும், தொழில்நுட்ப பணியாளர்களும் கடும் உழைப்பை வழங்கியிருக்கின்றனர். இத்திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்தோடும் பார்வையாளர்களும், அவர்களை தொடர்புபடுத்தி இணைத்துப்பார்க்க இயலும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்." என்று பெருமையாக கூறி உள்ளார்.


Click it and Unblock the Notifications











