பாண்டிய நாட்டை கைப்பற்றிய 'ராஜ்': ஜில்லா, வீரத்தை அள்ளிய சன் டிவி!
சென்னை: விஷாலின் பாண்டிய நாடு படத்தின் சாட்டிலைட் உரிமையை ராஜ் டிவி பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளது.
தீபாவளிக்கு அஜீத்தின் ஆரம்பம், கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜா, விஷாலின் பாண்டிய நாடு ஆகிய படங்கள் ரிலீஸாகின. இதில் அஜீத் படம் வசூலை அள்ளியுள்ளது. மேலும் பாண்டிய நாடு படமும் நல்ல வசூலை பார்த்துள்ளது.
இதனால் தயாரிப்பாளர் விஷால் மகிழ்ச்சியாக உள்ளார்.

கடும் போட்டி
பாண்டிய நாடு படம் ஹிட்டானதை அடுத்து அதன் சாட்டிலைட் உரிமத்தை பெற தொலைக்காட்சி சேனல்கள் போட்டி போட்டன.

ராஜ் டிவி
பல சேனல்கள் போட்டி போட்ட போதிலும் பாண்டிய நாடு படத்தின் சாட்டிலைட் உரிமத்தை பெரிய தொகை கொடுத்து ராஜ் டிவி வாங்கியுள்ளது. இதனால் விஷால் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

அள்ளிய சன் டிவி
விஜய்யின் ஜில்லா, அஜீத்தின் வீரம் மற்றும் லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் ஆகியவற்றின் டிவி உரிமத்தை சன் டிவி வாங்கியுள்ளது என்று கூறப்படுகிறது.

பொங்கல்
பொங்கல் பண்டிகைக்கு விஜய்யின் ஜில்லாவும், அஜீத்தின் வீரமும் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











