தேவிக்ருபா சொல்லும் வெள்ளித் திரை செய்திகள்
சினிமா செய்திகளை படிப்பதற்கு ரசிகர்கள் எத்தனை ஆர்வம் காட்டுகின்றனரோ அதேபோல அதை பார்ப்பதிலும் ஆர்வம் காட்டுகின்றனர். எனவேதான் தொலைக்காட்சிகளில் சினிமா செய்திகள் இடம் பெறுவது அவசியமாகிவிட்டது.
சன் டிவியில் சினிமா செய்திகள், புதிய தலைமுறையில் சினிமா 360 என பல பெயர்களில் சினிமா செய்திகள் ஒளிபரப்பாகின்றன. ராஜ் டிவியில் தற்போது வெள்ளித்திரை என்ற பெயரில் சினிம செய்திகள் ஒளிபரப்பாகிறது.
வெள்ளித்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் சின்னத்திரை நட்சத்திரம் தேவிக்ருபா. கொஞ்சிப் பேசும் குரல் வளத்தை நம்பி தொகுப்பாளினியாக களம் இறங்கிவிட்டார் தேவிக்ருபா.

வெள்ளித்திரை
செய்திகளைப் போல தலைப்புச் செய்திகள் வாசித்து சினிமா செய்திகளை சொல்கிறார் தேவிக்ருபா. சினிமா உலகின் பரபரப்பான செய்திகள், புதிதாக வெளியாகும் படங்கள் பற்றி இயக்குனர்களின் கருத்து ஆகியவையும் இந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகின்றன.

சினிமா தகவல்கள்
இந்த நிகழ்ச்சியில் புதுமுகங்கள் பற்றி விபரங்கள், தினமும் ஒரு சினிமா தகவல் என சினிமா சம்பந்தமான பிரச்சனைகள் குத்த விவாதங்கள் என பல சினிமா தகவல்களை சுவாரஸ்யமாக தொகுத்து வழங்குகிறார் நடிகை தேவி கிருபா.

சினிமா விழாக்கள்
வெள்ளித்திரை'. கலைஞர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து, திரையுலக திருமண விழாக்கள், பட துவக்க விழா, பாடல் வெளியீட்டு விழா, ஆகியவையும் வெள்ளித்திரையில் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சி ராஜ் டிவியில் திங்கள் முதல் வியாழன் வரை மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.


Click it and Unblock the Notifications











