காதலும், கல்யாணமும் நிறைவேறுமா? கருத்தம்மா பதில் சொல்வாள்!

By Mayura Akilan

ராஜ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் 'கருத்தம்மா' தொடர், 500-வது எபிசோடை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

பாட்டிக்கும், பேரன், பேத்திகளுக்கும் இடையேயான பாசப்போராட்டம்தான் இந்த தொடர்.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஒளிபரப்பிவரும் இந்த டப்பிங் தொடர் ரசிகர்களிடம் வரவேற்பினை பெற்றுள்ளது.

சகோதரிகளின் சந்திப்பு

சகோதரிகளின் சந்திப்பு

பாட்டி ராஜம்மாவின் பேத்திகளான தியா, ஜானவி (ராகவ்-சந்தியாவின் பிள்ளைகள்) தனித்தனியாக வெவ்வேறு இடங்களில் வளர்ந்து வந்தாலும், சகோதரிகள் என்று தெரியாமலேயே ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்கள்.

பேரனின் காதல்

பேரனின் காதல்

இந்த நிலைமையில், தனது பேரன் ஆதித்யா, இந்திய வம்சாவளி பெண்ணை விரும்புவதை பாட்டி ராஜம்மாள் அறிகிறார். இது நமது கலாசாரத்திற்கு ஒத்துவராது என்று எச்சரிக்கிறார்.

பாட்டியின் எச்சரிக்கை

பாட்டியின் எச்சரிக்கை

இதைகேட்க மறுக்கும் ஆதித்யா, தன் வெளிநாட்டு காதலியையே திருமணம் செய்ய முடிவு செய்கிறான். ஆனால் அந்த வெளிநாட்டுப் பெண்ணோ பார், ரெஸ்டாராண்ட் என்று உல்லாசமாக உலா வருகிறாள். இதை அறிந்த ராஜம்மாள், நமது குடும்பத்திற்கு மிகவும் அவமானச் செயல் என்று பேரன் ஆதித்யாவிடம் அறிவுறுத்துகிறார்.

தியாவிடம் கண்டிப்பு

தியாவிடம் கண்டிப்பு

அதேசமயம் பேத்தி தியா மீதும் பாட்டியின் கவனம் திரும்புகிறது. கல்லூரியில் படிக்கும் தனது சகதோழி ஜானவியை (சகோதரி) சந்திக்கவோ, பேசவோ கூடாது என்கிறார், பாட்டி. மீறி சந்தித்தால் கல்லூரி படிப்பை நிறுத்திவிடுவதாக குடும்பத்தினர் அனைவரின் முன்பும் மிரட்டுகிறார்.

பதக்கம் வெல்லும் தியா

பதக்கம் வெல்லும் தியா

இந்த நிலையில் கல்லூரியில் நடைபெற்ற போட்டி ஒன்றில் முதல் மாணவியாக தேர்வு செய்யப்பட்டு பதக்கம் பெறுகிறாள் தியா. இதனால் சந்தோஷமடைந்த குடும்பத்தினர் ஒட்டு மொத்தமாக தியாவை பாராட்ட, பாட்டி ராஜம்மாள் மட்டும் ‘இதெல்லாம் சாதனையா என்ன?' என்கிற ரேஞ்சுக்கு ஏளனம் காட்டுகிறார்.

தியாவின் காதல்

தியாவின் காதல்

பாட்டியின் இம்மாதிரியான அனுதின டார்ச்சரில் நொந்து போகும் தியாவுக்கு ஆறுதலாக அமைகிறது, இளைஞன் ஒருவனின் நட்பு. ரேடியோ நிகழ்ச்சித் தொகுப்பாளரான அவனுடன் தியாவின் நட்பு இறுகி ஒரு கட்டத்தில் காதலாக மாறுகிறது. காதல் தந்த தைரியத்தில் காதலனுடன் தைரியமாக ஊர் சுற்றுகிறாள் தியா.

கருத்தம்மாவில் பதில்

கருத்தம்மாவில் பதில்

இந்தக்காதல் தியாவின் வீட்டுக்குத் தெரியவரும்போது அவளது கல்லூரிப் படிப்பு நிறுத்தப்படுமா? அல்லது காதலை குடும்பத்தினர் ஏற்றுக்கொள்வார்களா? ஆதித்யாவின் காதல் திருமணம் நடைபெறுமா? கருத்தம்மா தொடரில் வெளியாகும் எபிசோடுகளில் விடை கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X