முருகனை சரணடைந்த ராஜ் டிவி: காக்க... காக்க.... பக்தித் தொடர்

By Mayura Akilan

சென்னை: பல டிவி சேனல்களில் ஆவி, பேய், பாம்பு என்று பயமுறுத்தி வரும் நிலையில் ராஜ் டிவியில் பக்தி மயமான ஒரு தொடர் தொடங்கியுள்ளது. 'காக்க காக்க' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரை திரைப்படங்களுக்கு நிகரான பிரம்மாண்டத்தோடு உருவாகியுள்ளனராம். வித்தியாசமான நவீன மர்மத்தொடரான 'காக்க காக்க' ராஜ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பாகிறது.

குடும்ப சீரியல்களை மட்டுமே ஒளிபரப்பி பெண்களின் கண்களை குளமாக்காமல், வித்தியாசமான நெடுந்தொடர்களை ஓளிபரப்பி வரும் ராஜ் டிவியின் மற்றொரு சிறப்பு தொடராக ஒளிபரப்பான முதல் நாளே மக்களை கவர்ந்துள்ள இத்தொடர் முருகப்பெருமான் பற்றியது தான், என்றாலும், இதுவரை யாரும் சொல்லாத ஒரு விஷயத்தை இந்த தொடரில் காட்சிப்படுத்தியுள்ளார்கள்.

தமிழகர்களின் கடவுளாக விளங்கும் முருகப்பெருமானின் ஆயுதமாக கருதப்படும் வேல், அசுரன் சூரபதுமனை அழிப்பதற்காக பார்வதி, தனது சக்தி முழுவதையும் கொண்டு உருவாக்கியதும், அதைக்கொண்டு அசுரனை முருகப்பெருமான் அழித்த கதையும் அனைவரும் அறிந்த புராண கதை.

அந்த சம்பவத்திற்கு முன்பும், பின்பும் தெரியாத சில சுவாரஸ்யமான தகவல்களை 'காக்க காக்க' தொடரில் பார்க்க முடியும். இதுவரை மக்கள் அறியாத முருகப்பெருமானின் அதிசய செயல்கள் சொல்லப்பட்டுள்ளன.

நவபாஷண வேல்

நவபாஷண வேல்

பழனியில் உள்ள முருகனின் நவபாஷண சிலையை உருவாக்கிய போகர், இரண்டாவதாக ஒரு சிலையை செய்ததாகவும், அதை இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த தொடரின் கதையிலும் அதுபோன்ற தேடல் தொடர்கிறது. ஆனால், இங்கே அனைவரும் தேடுவது முருகனின் சிலையை அல்ல, முருகனின் வேல்.

வேலை தேடும் மனிதர்கள்

வேலை தேடும் மனிதர்கள்

நவபாஷணத்தால் உருவான ஒரு வேல், அதை காலம் காலமாக தேடிவரும் சில மனிதர்கள், அவர்களுக்குள் நிகழும் போராட்டங்கள், போட்டிகள், துரோகங்கள், மரணங்கள், தேடல்கள், எல்லாவற்றுக்கும் சாட்சியாக நிற்கும் முருகன், தனது ஆயுதமான, அதுவும் நவபாஷணத்தால் செய்யப்பட்ட வேலை அவர்களுக்கு அத்தனை எளிதாக விட்டுக்கொடுக்கிறாரா அல்லது என்ன செய்கிறார்? முடிவில் வெல்வது மனித சக்தியா, தெய்வ சக்தியா, அல்லது இவை இரண்டும் அல்லாத மூன்றாவது அமானுஷ்ய சக்தியா? இதை பரபரப்பு குறையாத சம்பவங்களோடும், கதாப்பாத்திரங்களோடும், தெய்வீகத்தோடும் மர்மங்களோடும் சொல்லப்பட்டுள்ளது.

இலங்கையில் படப்பிடிப்பு

இலங்கையில் படப்பிடிப்பு

இலங்கையில் உள்ள கதிர்காமம், கொழும்பு ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இத்தொடர், சூரசம்ஹாரம் நிகழ்ந்த திருச்செந்தூரிலும் படமாக்கப்பட்டுள்ளது. டிஐ பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் அஜய் கிருஷ்ணா தயாரிக்கும் இத்தொடரை. விஜய் டிவியில் பெரும் வரவேற்பு பெற்ற ‘மீனாட்சி சரவணன்' தொடரை இயக்கிய அழகர் இயக்குகிறார்.

சூசன் நடிக்கும் சீரியல்

சூசன் நடிக்கும் சீரியல்

செப்டம்பர் 5 ஆம் தேதி முதல், திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ராஜ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த ‘காக்க காக்க' தொடரில், தீபா, சூசன், ஜீவரவி, எஸ்.வி.எஸ்.குமார், அகில், கிஷன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். கதை, திரைக்கதை, வசனம் ஜெய் கிருஷ்ணன் எழுத, கோபால் ஒளிப்பதிவு செய்துள்ளார். டிவி சீரியல் டைட்டில் பாடலுக்கான இசையை ஹரி கிருஷ்ணா அமைத்துள்ளார். நித்யஸ்ரீ மகாதேவன் பாடியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X