அறிமுக நாயகர்களுக்கு விருது வழங்கும் ராஜ் டிவி
அறிமுக நாயகர்களுக்கு விருது கொடுத்து கவுரவிக்கிறது ராஜ் டிவி. அதேபோல் ஆண்டு தோறும் வெளியாகும் திரைப்படங்களில் இருந்து சிறந்த அறிமுகக் கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கிறது.
2012-ம் ஆண்டு அறிமுகக் கலைஞர்கள் பட்டியலில் இருந்து ராஜ் டிவி ரசிகர்கள் முதல் சுற்றில் தேர்ந்தெடுத்துள்ள கலைஞர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த பட்டியலில் இருந்து முதல் மூவரை தங்கள் வாக்குப் பதிவின் மூலம் ரசிகர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். அதற்கு வசதியாக வாக்குப் பெட்டியுடன் 'முதல் மூவர் சிறப்பு வேன்' தமிழ்நாடு முழுவதும் வலம் வந்து ரசிகர்களின் வாக்கினை பதிவை செய்துள்ளது.

உதயநிதி ஸ்டாலினுக்கு பரிசு
கடந்த ஆண்டு அறிமுக நடிகர்கள் பட்டியலில் சிவகார்த்திகேயன், விஷ்வா, உதயநிதி ஸ்டாலின், தினேஷ், விஜய் ஆண்டனி, விக்ரம் பிரபு, விஷ்ணு பிரியன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

லட்சுமி மேனனுக்கு பரிசு கிடைக்குமா?
அறிமுக நடிகைகள் பட்டியலில் ஸ்வாதி, நந்திதா, லட்சுமிமேனன், வரலட்சுமி, மனிஷா, ராதிகாஆப்தே, காயத்ரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அறிமுக இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ்
கடந்த ஆண்டு புத்தம் இயக்குநர்கள் புயலாய் படங்களை கொடுத்துள்ளனர். இவர்களில் ஐஸ்வர்யா தனுஷ், ரஞ்சித், பிரபாகரன், எம்.அன்பழகன், கார்த்திக் சுப்புராஜ், பாலாஜி தரணீதரன், ஜீவா சங்கர் ஆகியோர் விருதுக்கு பரிந்துறைக்கப்பட்டுள்ளனர்.

கொலைவெறி அனிருத்
இசையமைப்பாளர்கள் வரிசையில் அனிருத், கார்த்திக், சந்தோஷ் நாராயணன், டேனியல், பிரசன்னா, கிரிஷ் இடம்பெற்றுள்ளனர். அதேபோல் நகைச்சுவை நட்சத்திரங்கள் பட்டியலில் அர்ஜூன், பகவதி, கர்ணா, செந்தில், வித்யு, மதுமிதா இடம் பெற்றுள்ளனர்.

கே.பாக்கியராஜ் தலைமையில் குழு
ரசிகர்கள் தேர்வுக்குப் பின்னர் விருதுக்குரிய அறிமுகக் கலைஞர்களை கே.பாக்யராஜ் தலைமையிலான நடுவர் குழு தேர்ந்தெடுக்கிறது.
இந்த குழுவில் நடிகர்கள் பார்த்திபன், தம்பி ராமையா, இயக்குனர் சீனு ராமசாமி, தயாரிப்பாளர்கள் தனஞ்செயன், கதிரேசன், கமீலா நாசர் இடம் பெற்றுள்ளனர்.

ரசிகர்களுக்கும் பரிசு உண்டு
தேர்வுக்குழுவினரின் இறுதிப் பட்டியலோடு ஒத்துப்போகிற மூன்று ரசிகர்களுக்கு ராஜ் டிவியின் பரிசாக தலா ஒரு லட்சம் ரூபாய், ஐம்பதாயிரம் ரூபாய், இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் என 3 பரிசுகள் வழங்கப்படுகிறது. ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சரியான விடையை எழுதியிருந்தால் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

பாரதிராஜா தலைமையில் விழா
பிப்ரவரி 23-ந் தேதி அன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் பரிசளிப்பு விழாவுக்கு இயக்குனர் பாரதிராஜா தலைமையேற்கிறார். சினிமாபிரபலங்கள் பங்கேற்கும் இந்த விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மூவருக்கு பரிசு வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











