twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சைபர் குற்றங்களுக்கு கட்டப் பஞ்சாயத்து? ராஜ் டிவியின் கோப்பியம் நிகழ்ச்சியில் அதிர்ச்சி!

    By Mayura Akilan
    |

    Chinmayi
    இணையதளங்கள், செல்போன், சமூகவலைத்தளங்களில் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்கள் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தால் பெரும்பாலான இடங்களில் கட்டப்பஞ்சாயத்து செய்யப்படுவதாக வழக்கறிஞர் ஒருவர் ராஜ்டிவியின் கோப்பியம் நிகழ்ச்சியில் கருத்து கூறியுள்ளார்.

    சமூகவலைத்தளங்களில் கருத்து கூறினால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவிப்பதும், அதற்காக கைது செய்யப்படுவதும் கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டில் வாடிக்கையாகிவிட்டது.

    இதனை அடிப்படையாகக் கொண்டு பிரபலபின்னணி பாடகி சின்மயி குறித்த சம்பவம் ராஜ் டிவியின் கோப்பியம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது.

    குற்றமும், அது பற்றிய உண்மை நிகழ்வுகளும் கோப்பியம் நிகழ்ச்சியில் அலசப்படுகிறது.

    தன்னைப் பற்றி அவதூறாக கருத்து பரப்பியதற்காக சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தார் பாடகி சின்மயி டுவிட்டரில் 2 ஆண்டுகளாக கொச்சையாக பேசினார், தமிழ் கலாச்சாரத்துக்கு எதிராக இருப்பதாக 10 பேர் சொல்கின்றனர் அதற்காகவே தான் போலீசை நாடியதாகவும் கூறினார் சின்மயி. தன்னை ரொம்ப கேவலமான வார்த்தைகளால் இழிவு படுத்தினர். தன்னை மட்டுமல்ல பல பெண்களை இழிவு படுத்தினர் என்றும் அவர் புகார் கூறவே இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இந்த நிகழ்வு பற்றி கருத்து கூறிய வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான சல்மா, பிரபலமான பெண்களை பாலியல் ரீதியாக வர்ணிப்பதும், கருத்துக்களை பகிர்வதும் இன்றைக்கு அதிகரித்து வருவதாக கூறினார். ஆண்களின் ஈகோதான் இதுபோன்று பாலியல் ரீதியாக கருத்துக்களை கூற காரணமாகிறது என்றும் கூறினார்.

    பெண் குறித்த தாழ்வான எண்ணம்தான் இதற்குக் காரணம். எனவே பாலியல் ரீதியாக பெண்களை விமர்சனம் செய்வது கண்டனத்திற்கு உரிய விசயம் என்றும் வழக்கறிஞர் சல்மா கூறினார். ஆண்கள் மனதளவில் மாறவேண்டும் அப்பொழுதுதான் இதுபோன்ற இழிநிலைக்கு மாற்று கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

    மற்றொரு வழக்கறிஞரான பிரசன்னா, சமூகவலைத்தளங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாலியல் சார்ந்த தாக்குதலை கைவிடவேண்டும். ஆபாசமான கருத்துக்களால் பெண்களை தாக்க கூடாது என்றார். மேலும் சைபர் குற்றத்திற்காக கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது என்று அதிர்ச்சி தகவலை கூறிய அவர்

    சைபர் கிரைம்க்கு ஸ்பெசல் கோர்ட் வேண்டும் தண்டனை உடனடியாக கிடைக்கவேண்டும் அப்பொழுதுதான் இதற்கு தீர்வு கிடைக்கும் என்றார். இதில் பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்பதால் சைபர் குற்றத்திற்கான நீதிமன்றத்தில் பெண் அரசு வழக்கறிஞர் பெண் நீதிபதியும் நியமிக்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    சம்பந்தப்பட்டவர்கள் யோசிப்பார்களா?

    English summary
    Raj TV telecasted Koppiyam program to Singer Chinmayi cyber crime complaint.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X