தமிழ் பேசும் கதாநாயகிகளைத் தேடி ஒரு பயணம்

By Mayura Akilan

Kadhanayagi
பாடகிகளை தேடி பயணம் செய்தாகிவிட்டது. நடனமாடுபவர்களை தேடி நாடு முழுவதும் சென்றாகிவிட்டது. இனி கதாநாயகிகளை தேடி புறப்பட்டுள்ளது தொலைக்காட்சிக்குழு ஒன்று. ராஜ் டிவியின் ரியாலிட்டி ஷோவான 'தமிழ் பேசும் கதாநாயகி'க்காக தமிழகம் மட்டுமல்லாது வெளிநாட்டிலும் தேடல் தொடங்கியுள்ளது.

தமிழ் திரைப்படங்களில் தமிழ் பேசும் கதாநாயாகிகளை காண்பது அரிது. வடஇந்திய நடிகைகளும், மலையாள மங்கைகளும் கோலோச்சும் தமிழ் திரைப்பட உலகில் தமிழ் நாயகிகளுக்கு மேடை போட்டுத் தருகிறது ராஜ் தொலைக்காட்சி.

தமிழ் பேசும் நாயகிகளைத் தேடி பெங்களூர், மும்பை, சென்னை, கோயம்புத்தூர், மதுரை, பாலக்காடு மற்றும் மலேசியா வரை செல்கிறது ராஜ் டிவி குழு. ஐந்து கட்டங்களாக நடைபெற உள்ள இந்த கதாநாயகி தேடலில் ஒவ்வொரு ஊரிலிருந்தும் 16 முதல் 25 வயது வரை உள்ள இளம் அழகிய பெண்கள் தலா 10 பேர் வீதம் 70 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இரண்டாம் கட்டத்தில், மேடை மற்றும் திரை அனுபவம் பெற்ற எஸ்.வி.சேகர், ஒய்.ஜி.மகேந்திரா, கிரேசி மோகன் ஆகியோர் நடிப்பு பயிற்சி முகாம் மூலம் இந்த அழகிய பெண்களுக்கு அடிப்படை நடிப்பு பயிற்சி அளிக்க உள்ளனர். முடிவில் நடிப்புத்திறமை அடிப்படையில் 40 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மூன்றாவது கட்டமாக தன்னம்பிக்கை அளிக்கும் பயிற்சி, நடிப்பு, நடனம், நேர மேலாண்மை ஆகியவற்றுக்கான பயிற்சியும் திரை பிரபலங்கள் மூலம் அளிக்கப்படும். இந்த கட்டத்தில் 30 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இதை அடுத்து போலீஸ் பயிற்சி முகாம். இதில் அவர்கள் உடல் ஆரோக்கியத்தோடும் எந்நேரமும் புத்துணர்வோடு இருக்கவும் பழகுவார்கள். இதற்குப்பின் ஐந்தாம் கட்டம் செல்பவர்கள் 20 பேர் மட்டுமே. இந்த 20 பேரும் மலேசியா அழைத்து செல்லப்படுவார்கள். அங்கு வீடியோ ஆல்ப நடிப்பு பயிற்சியில் கேமரா பயம் நீங்கி அதற்கும் பழக்கப்படுவார்கள். பயிற்சிகளும் திரையுலக பிரபலங்கள் மூலம் சொல்லித்தரப்படும்.

இதன்பின் இந்த 20 பேரும் ஒரு மாபெரும் மேடையில் வர, திரையுலக பிரபலங்கள் பார்வையிட்டு 5 பேரை தேர்ந்தெடுப்பார்கள். வென்றவர்களுக்கு வைர நகைகள், மற்றும் வீடியோ கேமரா போன்ற எண்ணற்ற பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இந்த 5 பேருக்கும் சினிமா கதாநாயகி வாய்ப்பு மட்டுமின்றி விளம்பர மாடல், தொடர் நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.

கதாநாயகி தேடலில் இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், கே.வி.ஆனந்த், வெற்றி மாறன், ராஜேஷ். நடிகர்கள் ஜீவா, கார்த்தி, ஸ்ரீகாந்த், அருண்விஜய் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். ஜான் விஜய் மற்றும் ராஜ் டிவியின் மாலா மணியன் ஆகியோர் தயாரித்து வழங்கும் இந்த 'தமிழ் பேசும் கதாநாயகி' நிகழ்ச்சி ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9.30 முதல் 10.30 மணி வரை ராஜ் டிவியில் ஒளிபரப்பாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X