அடேங்கப்பா... ராஜாவும் பயங்கர வில்லனா இருக்கானே....!
சென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியலில் ரோஜா போலவே ராஜாவும் பயங்கர வில்லனா இருக்கான்.
ரோஜா ராஜாவை அடைய செய்த சதி வேலைகள் போல, ராஜா சூர்யாவை கல்யாணம் செய்துக்க பல சதி வேலைகளை செய்கிறான்.
கடைசியா கல்யாணம் கூட வேண்டாம்...அவளை கல்யாணம் செய்துக்கற மாதிரி செய்து அவளை சீரழிக்கணும்னு நினைக்கிறான்.

சூர்யா கோபி
சூர்யாவும் கோபியும் காதலிச்சாங்கன்னு மட்டுமே தெரிஞ்ச ராஜாவுக்கு, சூர்யா மேல அளவில்லாத கோபம் வருது. அதனால,அவளை கல்யாணம் செய்துக்கற மாதிரி செய்து, அவளை நிம்மதியா வாழ விடாம செய்யப்போறேன்னு ராஜா கோபி குடும்பத்துக்கிட்ட பேசினதை சூர்யாவின் அப்பா கேட்டுடறார்.

கல்யாண பத்திரிகையை
சூர்யாவின் அப்பா வீட்டுக்கு வந்த கையோடு, பத்திரிகையை கிழிச்சு போட்டு, மண்ணெண்ணெய் ஊத்தி தீயையும் வச்சுடறார். ஏன்ப்பான்னு சூர்யா ஒண்ணும் தெரியாதவள் போல கேட்க, அந்த ராஜா ஒரு அயோக்கியன் மான்னு சொல்றார்.

எனக்கு தெரியும்ப்பா
எனக்கு ஏற்கனவே தெரியும்ப்பா...ரோஜா கூட வேலை செய்த பையன் சொன்னான்.ஆனா நீங்க நம்ப மாட்டீ ங்கன்னுதான் உங்க கிட்ட சொல்லலை. ரோஜாவோட கடைசி ஆசை நானும் கோபியும் கல்யாணம் செய்துக்கணும்னுதான்ப்பா...எங்கே ரோஜா கண் முழிச்சா அந்த உண்மை தெரிஞ்சுரும்னு ஆஸ்பத்திரியில ஓரு மேல் நர்ஸை வச்சு மயக்க மருந்து குடுக்க சொல்லி இருக்கன்ப்பா...

கொலை செய்ய திட்டம்
ரோஜாவை கொலை செய்யக்கூட திட்டம் போட்டு இருக்கான்ப்பா...விட்ட இந்நேரம்கொலை செய்து இருப்பான்னு சூர்யா சொல்ல...ஐயோ இதை நினைக்கவே இல்லம்மா நான்...வா உடனே ஆஸ்பத்திரிக்கு போலாம்னு சொல்றார். இல்லைப்பா...அங்க போலீஸ் காவல் போட்டாச்சு. ஸ்வேதாவும், அனுசூயாவும் காவலுக்கு இருக்காங்கன்னு சொல்லிட்டு திரும்பினா....
அங்கே வில்லன் மாதிரி ராஜா நிக்கறான்... பார்க்கவே பயமா இருக்கு....


Click it and Unblock the Notifications











