இரண்டாவது குழந்தையை வரவேற்க தயாரான ஆலியா மானசா... பேரு கூட ரெடி

சென்னை : விஜய் டிவியின் ராஜா ராணி சீசன் 2 தொடரில் நடித்து வருபவர் ஆலியா மானசா.

முதல் சீசனிலும் இவரே நடித்த நிலையில் இவர் தற்போது சித்துவுடன் இணைந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார்.

நடிகை ஆலியா மானசா

நடிகை ஆலியா மானசா

விஜய் டிவியின் பிரபலமான தொடர் ராஜா ராணி. இந்த தொடரின் சீசன் 2 தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனில் நடித்த ஆலியா மானசா இந்த சீசனில் நடிகர் சித்துவுடன் இணைந்து நடித்து வருகிறார். தற்போது இந்த சீசன் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

காதல் திருமணம்

காதல் திருமணம்

ராஜா ராணி சீரியலில் நடித்த போது சக நடிகர் சஞ்சீவை காதலித்து மானசா மணந்து கொண்டார். இவர்களுக்கு ஐலா என்ற பெண்குழந்தை உள்ளது. இந்நிலையில் தற்போது இரண்டாவது முறையாக அவர் கர்ப்பமாக உள்ளார். ஆயினும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

ஆலியா மானசா கர்ப்பம்

ஆலியா மானசா கர்ப்பம்

தன்னுடைய கர்ப்பம் குறித்து அவர் அறிவித்தவுடனே ரசிகர்களின் முதல் கேள்வி அவர் தொடர்ந்து நடிப்பாரா என்பதாகத்தான் இருந்தது. ஆனால் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறி அவர் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். தொடர்ந்து நடித்தும் வருகிறார்.

7 மாத கர்ப்பம்

7 மாத கர்ப்பம்

இந்நிலையில் அவர் தற்போது 7 மாத கர்ப்பமாக உள்ளார். இதனால் சீரியலில் இருந்து அவர் விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து அவர் ராஜா ராணி 2 தொடரிலிருந்து விலகுகிறாரா என்று ரசிகர் ஒருவர் அவரிடம் கேள்வி கேட்டார். இதற்கு சுவாரஸ்யமான பதிலை அளித்திருந்தார் மானசா.

ஒரேயொரு சந்தியாதான்

ஒரேயொரு சந்தியாதான்

அது ஒரேயொரு சந்தியாதான், அது இந்த ஆலியாதான் என்பதாக இருந்தது. இந்த தகவல் அவரது ரசிகர்களுக்கு மீண்டும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. ஏற்கனவே பாரதி கண்ணம்மா தொடரின் பரீனா, தொடர்ந்து கடைசி மாதம் வரையில் அந்த சீரியலில் நடித்து சில நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார்.

Recommended Video

Sun Tv Serial நடிகை Sruthi Shanmugapriya Engagement Video | Deepak Shivanya
குழந்தைக்கு பெயர் ரெடி

குழந்தைக்கு பெயர் ரெடி

அதேபோல மானசாவும் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தங்களின் இரண்டாவது குழந்தையை வரவேற்க இந்த ஜோடி தயாராகி விட்டது. பிறக்கும் குழந்தைக்கு பெயரும் ரெடி என்று அறிவித்துள்ளது. பையனாக இருந்தால் அர்ஷ் என்றும் பெண்ணாக இருந்தால் லைலா என்றும் பெயர் வைப்போம் என்று இவர்கள் கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X