தாய்மையின் பூரிப்பில் ஸ்ரீதேவி.. கால் அமுக்கி விட்ட கணவர்.. என்ன ஒரு சந்தோஷம்!

By Velsamy

சென்னை: தாய்மையின் பூரிப்பை ரசிகர்களுக்காக பகிர்ந்து கொண்ட ஸ்ரீதேவி அசோக்கின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.

இவர் சீரியல்களில் வில்லத்தனத்தை காட்டும் மிரட்டலான வில்லியாக இருந்தாலும், இவரது மறுபக்கம் ரொப்வே ஹேப்பியானது. ஒரு உற்சாக பூங்கொத்து இவர்.

ஸ்ரீதேவி தற்போது ஒரு குழந்தைக்கு தாயாக போகிறார் என்னும் செய்தியை கேட்டதும் அவருடைய ரசிகர்களும் திரைத்துறையினரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறிவருகிறார்கள்.

காதலர்களின் கொண்டாட்டம்

காதலர்களின் கொண்டாட்டம்

பிப்ரவரி மாதம் வந்தாலே காதலர்களுக்கு கொண்டாட்டம் தான் ஒவ்வொரு நாட்களுக்கும் ஒவ்வொரு தினங்களை விதவிதமான பெயர்களில் வைத்து ஒவ்வொரு நாளும் கொண்டாடி வருகின்றனர். அந்த மாதிரி பிப்ரவரி14 யாராலும் மறக்க முடியாது. இது உலக காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வந்தாலும் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கம் சென்றாலே சின்னத்திரை நடிகர் நடிகைகளும் தங்களுடைய காதலர்களை பகிர்ந்து வருகிறார்கள்.

அழகான ஸ்ரீதேவி

அழகான ஸ்ரீதேவி

அந்த மாதிரிதான் தற்போது ராஜா ராணி சீரியலில் வில்லியாக நடித்த அசோக் ஸ்ரீதேவி தொடர்ந்து தனது கணவரின் மீது இருக்கும் பாசத்தை வெளிக்காட்டி வந்தார். ப்ராமிஸ் டேயில் தனது கணவருக்கு திருமணத்தின் போது இவர் செய்த சத்தியத்தையும் அவர் இவருக்காக செய்த சத்தியத்தையும் வைத்து அப்படியே வீடியோவாக வெளியிட்டிருந்தார்.

ரசிகர்கள் கொண்டாட்டம்

ரசிகர்கள் கொண்டாட்டம்

அதனை பார்த்து அவருடைய ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வந்த நிலையில் காதலர் தின அன்று அவருடைய ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தியை வெளியிட்டிருக்கிறார். திருமணம் முடிந்து பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த இவர் தற்போது கன்சீவ் ஆக இருக்கும் போட்டோக்களையும் செய்தியையும் ரசிகர்களுக்கு இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருக்கிறார்.

காதல் திருமணம்

காதல் திருமணம்

காதல் திருமணம் செய்துகொண்ட ஸ்ரீதேவி அசோக் மகிழ்ச்சியாக தங்களது காதல் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் போது தற்போது தான் இவர் கன்சீவ் ஆக இருக்கும் செய்தியை இணையதளங்களில் வெளியிட்டிருக்கிறார். அதுவும் அவரும் அவரது கணவரும் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை பார்த்ததும் அதில் அவருடைய மேடிட்ட பெரிய வயிறைப் பார்த்து அவருடைய ரசிகர்களும் சந்தோஷம் அடைந்து வருகிறார்கள் .

ஷூட்டிங் ஸ்பாட்டில் மகிழ்ச்சி

ஷூட்டிங் ஸ்பாட்டில் மகிழ்ச்சி

ரசிகர்கள் மட்டுமல்லாமல் சின்னத் திரை நடிகர்களும் அவருக்காக வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள் .நட்சத்திரா, ஸ்வேதா என பலர் அவருக்காக தொடர்ந்து வாழ்த்துக்களை கூறி வந்து கொண்டிருக்கின்றனர். இவர் எப்போதுமே தனது கணவருடன் செய்யும் குறும்புகளையும் சக நடிகர்களுடன் சூட்டிங் ஸ்பாட்டில் செய்யும் சேட்டைகளையும் இன்ஸ்டாகிராமில் அப்லோட் பண்ணி கொண்டிருக்கிறார்.

தாய்மை அழகு

தாய்மை அழகு

அதற்குத்தான் அவருடைய ரசிகர்கள் கமெண்ட் பண்ணி கொண்டு இருப்பார்கள். ஆனால் தற்போது தாய்மையின் அழகோடு தற்போது இவர் வெளியிட்டிருக்கும் வீடியோவை பார்த்து இவருக்கு அவருடைய ரசிகர்களும் வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் வழங்கி வருகின்றனர். ஸ்ரீதேவி மட்டுமல்லாமல் அவருடைய கணவரும், தனது மனைவி கர்ப்பமாக இருப்பதால் மனைவியை அப்படி கவனித்துக் கொள்கிறாராம்.

மனைவிக்கு மரியாதை

மனைவிக்கு மரியாதை

மனைவிக்கு கால் அமுக்கி மனைவியின் தேவைகளை புரிந்து நடந்து கொள்பவர் சிறந்த கணவர். மனைவி கர்ப்பமாக இருக்கும் போது அவர்களின் தேவை மற்றும் அன்பையும் அள்ளிக் கொடுப்பவர்கள் அன்பான கணவர் என்று ஸ்ரீதேவி அவருடைய கணவரின் பாசத்தை வெளிக்காட்டி ஒரு கேப்ஷன் போட்டு தற்போது ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

இனிய தம்பதி

இனிய தம்பதி

அதனை பார்த்து அவருடைய ஒரு ரசிகர் என்ன ஒரு அழகான அன்பான இனிமையான தம்பதியர் நீங்கள் என் இனிய சகோதரி மற்றும் சகோதரர் உண்மையிலே மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது .அவரது உண்மையான காதல் எப்போதும் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒரு போதும் தவற விடாது. உங்களுக்கான சிறந்த எடுத்துக்காட்டுக்கு நீண்டகாலம் சந்தோசமாக வாழ வேண்டும் என் அழகான சகோதரி என்று கூறியிருக்கிறார்.

பாப்பா நல்லா பிறக்கட்டும்

பாப்பா நல்லா பிறக்கட்டும்

அதுவுமில்லாமல் உங்கள் பாப்பா ஆசீர்வதிக்கப்பட்ட பாப்பா இப்படி ஒரு அப்பாவும் அம்மாவும் கிடைப்பதற்கு என்று பலர் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். தற்போது இவர் காற்றுக்கென்ன வேலி என்னும் சீரியலில் நடித்துக் கொண்டிருந்தாலும் தனது குழந்தையின் மீதும் கவனமாக இருக்கச்சொல்லி இவருடைய ரசிகர்களும் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X