எப்படி இருந்த புருஷன் பொண்டாட்டி இப்படி ஆயிட்டாங்களே... இனிமே எப்போ ரொமான்ஸ் பண்ணுவாங்களோ!

சென்னை: விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் வினோதினி காதலனோடு ஓடிப்போயிட்டா. இங்க செம்பாதான் அனுப்பிவிட்டான்னு வீட்டுல எல்லார்கிட்டயும் மாட்டிகிட்டு முழிக்கறா.

நான் ஒண்ணும் செய்யலீங்க.. பெரிய அம்மான்னு சொல்ல வந்தாலே.. சீ என்னை இனி அப்படி உன் வாயால கூப்பிடாதேன்னு பெரியம்மா கத்தறாங்க. பெரிய அண்ணி மட்டும் செம்பாதான் வினோவை அனுப்பி வச்சா. அவளை விசாரிக்கற விதத்துல விசாரிச்சா உண்மை தெரிஞ்சிரும்னு சொல்லித் தர்றா.

Raja Rani: Husband and wife are in difficult times

கார்த்திக் சொல்றான் இல்ல அண்ணி நல்லா விசாரிச்சுட்டேன். அவ உண்மையை சொல்ல மாட்றான்னு சொல்றான். ஆமா, நீ செம்பாவை மடியில போட்டுக்கிட்டு விசாரிச்சு இருப்பே.. அவ உன்னை ஏறி மிதிச்சு இல்லேன்னு சாதிச்சு இருப்பான்னு சின்ன அண்ணி வெறுப்பேத்தறாங்க.

செம்பா காலில் விழுந்தும், புருஷன் கார்த்திக் அவளை நம்பாமல் போனது நாலு சுவருக்கு மட்டுமே தெரியும். அதனால, இல்லை அண்ணி இந்த விஷயத்துல செம்பாவை நான் மன்னிக்கறதா இல்லைனு சொல்றான்.

Raja Rani: Husband and wife are in difficult times

கேட்கறவங்க கேட்டா அவ உண்மையை சொல்லித்தானே ஆகணும். மாமா நீங்க விசாரிங்க செம்பாவை. நம்ம வீட்டு பொண்ணு காணாம போயிருக்கா.. இது நாலு பேருக்கு தெரியாம காதும் காதும் வச்ச மாதிரி வீட்டுக்கு அழைச்சுட்டு வந்துடணும்னு சொல்றாங்க பெரிய அண்ணி.

Raja Rani: Husband and wife are in difficult times

என்னால செம்பாவை விசாரிக்க முடியாதும்மா.. என்னை விட்ருங்கன்னு மாமனார் சொல்ல, எப்பவுமே செம்பாதானே உங்களுக்கு உசுரு.. நானே போயி அவளை விசாரிக்கறேன்னு சொல்லிட்டு மேல போறாங்க மாமியார்.

Raja Rani: Husband and wife are in difficult times

செம்பா பாவம் புருஷன் தன்னை திட்டினதையும், நம்பாம போனதையும் நினைச்சு குலுங்கி குலுங்கி அழுதுகிட்டு இருக்காளே....

எப்படி இருந்த புருஷன் பொண்டாட்டி இப்படி ஆயிட்டாங்களே...இனிமே எப்போ சந்தோஷமா இருந்து ரொமான்ஸ் பண்ணுவாங்களோ போங்க....

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X