Raja rani serial: குடும்பத்து குத்து விளக்குகளை கெடுப்பது எப்படி.. டீட்டெய்லா சொல்லித் தர்றாங்களே!

சென்னை: விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் கதை என்ன, மக்களுக்கு என்னத்த சொல்ல வர்றாங்கன்னு எதுவுமே புரியலைங்க. தினமும் நம்ம வீட்டில் என்னென்ன நடக்குமோ, அத்தனையும் ராஜா ராணி சீரியலில் நடக்குது அதுதான் கதை.

வேலைக்காரியா வந்த செம்பா அந்த வீட்டுக்கு மருமகளா ஆகிடறா. அவ குடும்பத்தை எப்படி கவனிச்சுக்கறா, எப்படி பொறுமையை கடைப்பிடிக்கறா, ரொம்ப ரொம்ப வயசுக்கு மீறின பொறுமை இப்படி அசத்தறா செம்பா

தினம் தினம் சமைக்கறது, துணி மடிக்கறது, மாத்திரை சாப்பிட்டீங்களா பெரிய ஐயான்னு கேட்கறது, ஓரகத்திகள் திட்டினாலும், அவங்களுக்கு பிடிச்சதை செய்யறதுன்னு காட்சிகள் நகருது.

ஒரு வாரம் முழுக்க

ஒரு வாரம் முழுக்க

திடீர்னு நிஜமா நிச்சயதார்த்தம் ஆன தம்பதியான செம்பா என்கிற ஆல்யா மானசா, கார்த்திக் என்கிற சஞ்சீவ் இருவரும் ஒத்திகை ஹனிமூன் போக விஜய் டிவியே அரேன்ஞ் பண்ணின மாதிரி சிங்கப்பூர் ட்ரிப் இருந்துச்சு. ஒரு கதையும் இல்லை. ஒரு வாரம் முழுக்க ஜோடிகள் சிங்கப்பூரில் முகாமிட்டு, என்ஜாய் பண்ணிட்டு வந்துட்டாங்க. அது மட்டுமா காக்டெயில் பார்ட்டின்னா என்னன்னு விஜய் டிவி பார்க்கற குடும்ப குத்து விளக்கு பெண்களுக்கு கற்றும் கொடுத்தார்கள்.

குல சாமி கோயில்

குல சாமி கோயில்

சிங்கப்பூரில் இருந்து திரும்பி வந்து, கிராமத்து குலசாமி கோயிலுக்கு குடும்பமா போனாங்க. ஒரு வராம் இப்படி பூஜை, பொங்கல் வைக்கறது, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்னு போனது. அங்கே ஒரு டிவிஸ்ட் வச்சாங்க. செம்பா அப்பா, செம்பாவின் நண்பர். அவர் சாவுக்கு காரணம் செம்பாவின் மாமனார் என்று. இதில் செம்பா கிராமத்திலிருந்து அப்செட்டாகி வர்றா.

செம்பா மூட் அவுட்

செம்பா மூட் அவுட்

செம்பா மூட் அவுட், மாமனார் பதற்றம் என்று அதில் ஒரு வாரம் போனது. கார்த்திக் வேலைக்காக மும்பை சென்ற நேரம் என்பதால், செம்பாவை வைத்தும், மாமனாரை வைத்தும் மற்ற இரண்டு மருமகள்கள் கேம் விளையாடறாங்க. மாமனாரை செம்பா ஆள் வச்சு மிரட்டுவது போல போன் செய்து, அவரை மிரள வைக்கிறார்கள். இப்படி ஒரு வாரம் கதை போனது.

வேலைக்காக சிங்கப்பூர்

வேலைக்காக சிங்கப்பூர்

திடீர்னு கார்த்திக்குக்கு சிங்கப்பூரில் வேலை கிடைக்குதாம். குடும்பத்தோட வந்து தங்க வீடும் அவங்களே கொடுத்துடறாங்க. கூட போகணும்னு ஆசை வரல செம்பாவுக்கு. கொஞ்ச நாள் அவங்களோட தங்கிட்டு அப்புறமா புருஷன் கூட சிங்கப்பூர் போகலாம்னு ரொம்ப தவிக்கறா. இல்லை ஒண்ணாத்தான் போகணும்னு கார்த்திக் சொல்ல, குடும்ப வரவு செலவு கணக்குகளை ஒண்ணொண்ணா சொல்லிச் சொல்லி ஒப்படைக்கறா.

இதுதான் ராஜா ராணி சீரியல் கதை. புதுசா கல்யாணமானவங்க எப்படி குடும்பம் நடத்தறதுன்னு பார்த்து கத்துக்கலாம். ஆனால், செம்பா அளவுக்கு பொறுமையா இருக்கணும்னா அது மட்டும் பார்த்துக்கோங்க... எப்படி சொல்றது.. கஷ்டம்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X