Raja rani serial: சிங்கப்பூர் போன பிறகாவது சீரியலை ஊத்தி மூடுவீங்களா?
சென்னை: விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் செம்பாவும், கார்த்திக்கும் சிங்கப்பூர் போக இருக்காங்க. கார்த்திக்குக்கு சிங்கப்பூரில் வேலை கிடைச்சு இருக்காம். அதனால, அவன் செம்பாவை அழைச்சுக்கிட்டு இன்னும் நான்கு நாட்களில் சிங்கப்பூர் போக இருக்கான்.
செம்பா குடும்பத்தை மிஸ் பண்றாளாம். பெரிய ஐயா,அண்ணன்கள்,அண்ணிகள்,குழந்தைகள் இவங்களை விட்டுட்டு போக இருப்பதில் செம்பா ரொம்ப வருத்தத்தில் இருக்காளாம்.
செம்பாவும், கார்த்திக்கும் இந்த சீரியலில் நடிக்க ஆரம்பிச்சு,இப்போது உண்மையாவே காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கற நிலைமைக்கு வந்திருக்காங்க. இவங்க திணமும் சந்திச்சுக்கிட்டா என்ன நடக்குமோ அதுதாங்க சீரியல்.

சமையல் தினமாம்
கார்த்திக் செம்பா ஊருக்கு போறதுனால அவளை குஷிப்படுத்த ஆண்கள் தினம்னு சொல்லி, வீட்டிலிருக்கும் ஆண்கள் எல்லாரும் ஒண்ணு சேர்ந்து சமைக்கறாங்க. பெண்கள் எல்லாரும் சாப்பிட்டுட்டு பாராட்டறாங்க. அதுவும், அவங்கவங்க ரூமுக்குள்ளே போய் தங்கள் தங்கள் புருஷனை பாராட்டறாங்க. இதுல லவ் மூட் வருதாம். அவரவர்கள் தங்கள் கணவரை புகழ செம்பா மட்டும், ஒட்டு மொத்தமா ஆண்கள் சமையல் நல்லாயிருந்ததுன்னு புகழறா. அவள் ரொம்ப நல்ல பொண்ணாச்சே!

பறப்பதுவே என்று
நிற்பது, நடப்பது, சாப்பிடறது,ஊருக்கு போறதுன்னு எல்லாத்தையும் ஒரு சீரியலா குவிச்சு, இதை வேலை மெனக்கெட்டு ஷூட்டிங் செய்து,எடிட்டிங் செய்து ஒளிபரப்பு செய்யறாங்கப் பாருங்க.. உண்மையிலேயே ரொம்ப பொறுமைங்க. மனசாட்சி வேண்டாம்..எத்தனை பேர் உழைப்பை இப்படி வீண் செய்கிறோமே என்று. ஏதாவது மெசேஜ் சொல்ல முடியாம எதுக்கு சீரியல் எடுக்கணும்?

மானஸா சஞ்சீவ்
செம்பா கார்த்திக்கா நடிச்ச ரெண்டு பேரும் மானசா, சஞ்சீவா காதலிச்சு இப்போது கல்யாணமும் செய்துக்கப்போறாங்க. இவங்க காதலை என்னவோ ஒளிஞ்சு லைவ்வாபார்க்கற மாதிரி இருக்கு. சரவணன் மீனாட்சி சீரியல்கூட ரெண்டு பேரும் உண்மையாவே லவ் பண்ணின சீரியல்.இப்படியா இருந்துச்சு?

சீரியலில் காமிக்கறீங்க
காலையில எழுந்து காபி குடிக்கறதுல ஆரம்பிக்கற கதை , இரவு அவரவர் பெட்ரூமில் ஏதாவது பேசிக்கறது, செம்பாவும், கார்த்திக்கும் மட்டும் சின்னய்யா சின்னய்யான்னு கொஞ்சறதுன்னு கதை போகுது. இல்லையா ஏதாவது ஒரு ஊருக்கு போயி ஒண்ணுமே இல்லாம கள்ளு குடிக்கறது, இளநீர் குடிக்கறதுன்னு என்ஜாய் பண்றாங்க.
சரி எல்லாம் போகட்டும்.... கார்த்திக் செம்பா சிங்கப்பூர் போனவுடனேவாவது ராஜா ராணி சீரியலை ஊத்தி மூடுவீங்களா?


Click it and Unblock the Notifications











