ஹீரோவாக களமிறங்கும் ராஜா ராணி சித்து சித்.. விஜய் டிவியில் இருந்து இன்னொரு ஹீரோ ரெடி!

சென்னை: சின்னத்திரை,வெள்ளித்திரை என்ற பாகுபாடு பார்க்கும் காலம் மாறி, எந்த தளமாக இருந்தாலும் மக்களுக்கு பிடித்துவிட்டால் அவர்களை கொண்டாடி வருகிறார்கள்.

Recommended Video

Raja Rani 2 சீரியலில் நடக்க போகும் மிகப்பெரிய மாற்றம்

சின்னத்திரை மூலம் மக்களால் கொண்டாடப்பட்ட பலர் தற்போது வெள்ளித்திரை நட்சத்திரங்களாக ஜொலித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சின்னத்திரையில் முன்னணி நடிகராக இருக்கக்கூடியவர் தான் சித்து சித். இவரை பற்றிய பல ஸ்வாரஸ்யத்தகவல்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றது.

 பிரபலமான தொடர்கள்

பிரபலமான தொடர்கள்

பல தொலைக்காட்சிகளில் பல தொடர்கள் ஒளிபரப்பானாலும், விஜய் டிவி தொடர்களுக்கென்று பல ரசிகர்கள் உள்ளனர். பல தொடர்கள் இரண்டாம் பாகம் கூட வெற்றி பெற்று கொண்டு இருக்கின்றது. அந்த வகையில் ராஜா ராணி தொடரின் முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாம் பாகம் தற்போது ஒளிபரப்பாகிக்கொண்டு இருக்கின்றது. இதில் ஹீரோவாக நடித்து கொண்டு இருப்பவர் தான் சித்து சித்.

 ராஜா ராணி தொடர்

ராஜா ராணி தொடர்

'திருமணம்' என்ற தொடர் மூலம் நடிகராக அறிமுகம் ஆன சித்து சித், தற்போது 'ராஜா ராணி 2' தொடரில் ஹீரோவாக நடித்து வருவதோடு, தமிழ் ரசிகர்களின் பேவரைட் சின்னத்திரை ஹீரோவாகவும் உயர்ந்துள்ளார். சுமார் 6 வருடங்களாக நடன கலைஞராக பணியாற்றிய பிறகே நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார், இவர் நடித்த திருமணம் தொடர் மூலமாக பல ரசிகர்களை பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 தேடி வரும் பட வாய்ப்புகள்

தேடி வரும் பட வாய்ப்புகள்

பல சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து, தற்போது தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கிவைத்துள்ளார். இவர் நடிக்கும் தொடர்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில், இவரை வெள்ளித்திரையில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலோடு ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள். சின்னத்திரையில் வெற்றி பெற்ற சித்து சித், தனது அடுத்த இலக்காக வெள்ளித்திரையை நோக்கி பயணிக்க ரெடியாக இருப்பதோடு, சில திரைப்பட வாய்ப்புகளும் அவருக்கு கிடைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

 வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள்

வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள்

பல பட வாய்ப்புகள் இவரை தேடி வருகின்றதை தொடர்ந்து, விரைவில் வெள்ளித்திரையில் சித்து சித் ஹீரோவாக களம் இறங்குவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. சமூகவலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கக்கூடிய இவர், பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. பட வாய்ப்புகள் கிடைப்பதை தெரிந்த ரசிகர்கள் சித்து சித்துக்கு வாழ்த்துக்களை கமெண்டுகள் மூலம் பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X