twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரிமோட்தான் சீரியல்களின் வில்லன்: கருத்தம்மா ராஜஸ்ரீ

    By Mayura Akilan
    |

    சன் டிவியின் வம்சம் தொடரில் அண்ணாச்சி வீட்டு மூத்த மருமகளாக வலம் வருகிறார் கருத்தம்மா ராஜஸ்ரீ. ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சீரியலில் நடிக்கிறார். அழகாய், அம்சமாய், அமைதியான கதாபாத்திரம்.

    பாரதிராஜாவின் கருத்தம்மா படத்தில் அறிமுகமாகி சேது, நந்தா, ரன், மனசெல்லாம், வேட்டையாடு விளையாடு உட்பட தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் 57 படங்களில் நடித்துள்ளார்.

    சினிமாவைத் தொடர்ந்து ஆலயம், அகல் விளக்கு, மந்திர வாசல், சிவமயம் போன்ற டி.வி தொடர்களிலும் நடித்திருக்கிறார். திருமணத்திற்குப் பின்னர் சினிமாவே வேண்டாம் என்று திரையுலகை விட்டு விலகிய கருத்தம்மா ராஜஸ்ரீ தற்போது மீண்டும் சின்னத்திரையில் உற்சாகமாக வலம் வருகிறார். அவருடைய சினிமா சின்னத்திரை பயணங்களை நம்மிடையே பகிர்ந்து கொண்டார் படியுங்களேன்.

    வாழ்வின் திருப்புமுனை

    வாழ்வின் திருப்புமுனை

    என்னுடைய இயற்பெயர் மாதவி. கருத்தம்மாவில் பாராதிராஜா சார் மூலம் அறிமுகம் ஆனேன். அந்த அறிமுகம் என் வாழ்வில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது. கன்னடம், மலையாளம், தெலுங்குன்னு நிறைய படங்கள்ல நடிச்சிருக்கேன்.

    திருமணத்திற்குப் பின்னர் பீல்டிலிருந்து ஒதுங்கியிருக்கலாம்ன்னு நினைச்சு ஒதுங்கிட்டேன். திடீரென்று சீரியல், சினிமான்னு வாய்ப்புகள் வந்தது. நல்ல இடங்களிலிருந்து வந்ததால் மீண்டும் இந்த பீல்டுக்கு வந்திருக்கேன்.

    சீரியல் பயணம்

    சீரியல் பயணம்

    சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்த இதயம் சீரியலில் நடித்தேன் இப்போது ஜெயா "டிவி'யில் "இதயம் தொட்ட கதைகள்' சீரியலிலும் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. ஒரு நடிகையை பற்றிய கதை அது. பிடிச்சிருந்தது. நடித்தேன்.
    இப்போது சன் டிவியில் வம்சம் தொடரில் நடித்து வருகிறேன்.

    திறமையான புதியவர்கள்

    திறமையான புதியவர்கள்

    சினிமாவிலும் சரி, டி.வி.யிலும் சரி இப்ப வந்திருக்கிற புதிய டைரக்டர்களிடம் நிறைய விஷயமிருக்கு. பிரண்ட்லியா பேசி அவுங்க நினைச்ச மாதிரி ஈசியா வேலை வாங்கிடறாங்க. புதுமுக இயக்குனர்களிடம் நிறைய விஷயமிருக்கு. அவுங்களோட திறமையை மதிச்சு தயாரிப்பாளருங்க வாய்ப்பு கொடுத்தால் சினிமாவில் நிறைய பேர் ஜொலிப்பார்கள்.

    சந்தோசமா இருக்கு

    சந்தோசமா இருக்கு

    சினிமா, டி.வி.யில் வருபவங்களுக்கு எளிதாக நல்ல அறிமுகம் கிடைச்சிடுது. சின்ன குழந்தைகூட நடிகர், நடிகரை அடையாளம் தெரிஞ்சுக்கிடறது. இந்த பீல்ட்டை நான் செலக்ட் பண்ணி வந்தது சரிதான்னு சொல்வேன். சந்தோஷமா நினைக்கிறேன்.

    டிவி சீரியல் கஷ்டம்தான்

    டிவி சீரியல் கஷ்டம்தான்

    சினிமாவை விட டி.வி.யில் நடிப்பது கஷ்டம். ஒரு நாளைக்கு 2, 3 எபிசோட் கூட எடுப்பாங்க. நிறைய எடுக்கறாங்க, ஏதோ நடிச்சா போதும்ன்னு நடிச்சுட்டு போயிட முடியாது. டி.வி. சேனல்களில் ரியாலிட்டி ஷோக்களும், வித்தியாசமான சீரியல்களும் போட்டி போட்டு வந்திட்டிருக்கு.

    ரிமோட் இருக்கே

    ரிமோட் இருக்கே

    தியேட்டருக்கு போறவங்க படம் சரியில்லைனா பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிருக்கோம். கடைசி வரை போவோம்ன்னு இருந்து பார்ப்பாங்க. டி.வி.யில் இந்நிலை இல்லை. சீரியல் பிடிக்லைன்னா மன்னிப்பே கிடையாது. கையில் வைத்திருக்கும் ரிமேட்டை ரசிகர்கள் வில்லனை போல பயன்படுத்தி அடுத்த சேனலுக்கு மாறிடுவர். சீரியலை ரசிகர்கள் முழுத்திருப்தியோடு ரசிக்க வைக்க நடிகர், நடிகைகள் 100 சதவீதம் நடிச்சாத்தான் ரசிகர்களிடம் எடுபடும் என்று சொல்லிவிட்டு சூட்டிங் போக தயாரானார் ராஜஸ்ரீ.

    English summary
    TV actress Rajashree has blamed that TV remotes play villain to serials' success.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X