»   »  ரஜினி, கமல், விஜய்...மக்கள் மனசுல யாரு : நியூஸ் 7 கருத்துக்கணிப்பு

ரஜினி, கமல், விஜய்...மக்கள் மனசுல யாரு : நியூஸ் 7 கருத்துக்கணிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசியலில் யார் ஜொலிப்பார்கள், ரஜினி, கமல், விஜய் ஆகிய நடிகர்களில் யாருக்கு மக்கள் மனதில் இடம் உள்ளது என்று எடுக்கப்பட்ட மாபெரும் கருத்துக்கணிப்பு நியூஸ் 7 டிவியில் இன்று இரவு முதல் ஒளிபரப்பாக உள்ளது.

திரையுலகிலிருந்து ரஜினி, கமல், விஜய் மூவரில் அரசியலுக்கு அடுத்து யார் வருவார்? வந்தால் மக்களின் ஆதரவு எப்படி இருக்கும்? என்பதை அறிந்துகொள்ளும் வகையில், மாபெரும் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

Rajini, Kamal and Vijay Makkal Manasula Yaru on News 7 TV

புள்ளியியல் வல்லுநர் குழுவின் வழிகாட்டுதலின்படி, 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், மாவட்ட வாரியாக வயது, பாலினம், மதம், கல்வித்தகுதி மற்றும் தொழில் அல்லது பணி அடிப்படையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

நியூஸ்7 தமிழ் மற்றும் குமுதம் குழுமம் இணைந்து நடத்தியுள்ள "மக்கள் மனசுல யாரு" மாபெரும் கருத்துக்கணிப்புக்கான முடிவுகள் இந்தவாரம் 27, 28, 29, 30 ஆகிய தேதிகளில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

English summary
Rajinikanth and Kamal Haasan have been pitted against each other ever since they both expressed an interest in joining politics.News 7 join hands Kumudam survey about Rajin, kamal and Vijay Makkal Manasula Yaru.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil