twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜெயலலிதாவின் பொன்மனச் செல்வி... ரஜினி முருகன்... ஜீ தமிழ் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள்

    2017ம் ஆண்டு புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ரஜினி முருகன் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.

    By Mayura Akilan
    |

    சென்னை: விடுமுறை தினம் என்றாலே தொலைக்காட்சி ரசிகர்களைக் கட்டிப்போட சேட்டிலைட் சேனர்கள் பல சிறப்பு நிகழ்ச்சிகளையும், புத்தம் புதிய திரைப்படங்களையும் ஒளிபரப்பும்.

    அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன. திரைப்படங்கள், திரை நட்சத்திரங்களின் பேட்டி ஆகியவை ஒளிபரப்பாக உள்ளன.

    மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அஞ்சலி நிகழ்ச்சி, நடிகர் சூர்யாவின் பேட்டி, நடிகை காஜல் பேட்டி ஆகியவைகளை ஒளிபரப்ப உள்ளது ஜீ தமிழ் தொலைக்காட்சி.

    டாப் 10 2016

    டாப் 10 2016

    காலை 8 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள ‘டாப் 10' நிகழ்ச்சியில் இந்தியத் திரையுலகில் கடந்தாண்டு நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை கண்டு மகிழலாம். உலக வினோதங்கள், மெய்சிலிர்க்க வைத்த சாகசங்கள் மற்றும் அரிய விளையாட்டுச் சாதனைகளையும் ஒரு மணி நேரத்திற்கு விறுவிறுப்பாக இந்த நிகழ்ச்சி மூலம் காணலாம்.

    பொன்மனச் செல்வி

    பொன்மனச் செல்வி

    இந்திய அரசியலில் தனி முத்திரை பதித்த இரும்புப் பெண்மணி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில், காலை 9 மணிக்கு ‘பொன்மனச் செல்வி' எனும் சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

    மாப்ள சிங்கம்

    மாப்ள சிங்கம்

    காலை 11 மணிக்கு புத்தாண்டு தின சிறப்பு திரைப்படமாக ‘மாப்ள சிங்கம்' திரைப்படம் ஜீ தமிழில் திரையிடப்படவுள்ளது. ராஜசேகர் இயக்கத்தில் காதல் மற்றும் காமெடி கதைக்களத்தில் தயாரான இப்படத்தில், விமல், அஞ்சலி, சூரி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

    காஜல் பேட்டி

    காஜல் பேட்டி

    பிற்பகல் 2 மணிக்கு ‘கனவு தேவதை காஜல்' எனும் சிறப்பு நிகழ்ச்சி ஜீ தமிழ் நேயர்களை மகிழ்விக்க உள்ளது. லட்சக்கணக்கான ரசிகர்களின் கனவு தேவதையான காஜல் அகர்வால் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று தம்மைப் பற்றிய இதுவரை ரசிகர்கள் அறிந்திராத ருசிகர சம்பவங்களை வெளியிட உள்ளார்.

    எஸ் 3 சூர்யா பேட்டி

    எஸ் 3 சூர்யா பேட்டி

    புத்தாண்டில் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமாக பெயர் பெற்றுள்ள சூர்யாவின் ‘எஸ் 3' படக்குழுவினர் பங்கேற்கும் சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சியான ‘சீறும் சிங்கம் சூர்யா' நிகழ்ச்சி பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

    ரஜினி முருகன்

    ரஜினி முருகன்

    கடந்தாண்டின் முதல் ப்ளாக் பஸ்டர் படமான ‘ரஜினி முருகன்' புத்தாண்டு தின சிறப்பு படமாக, மாலை 4 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. பொன்ராம் இயக்க, சிவகார்த்திகேயன், சூரி, கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி, ராஜ்கிரண் உள்ளிட்ட பிரபலங்கள் இதில் நடித்துள்ளனர்.

    பாருங்க... ரசியுங்கள்

    பாருங்க... ரசியுங்கள்

    ப்ளாக் பஸ்டர் திரைப்படங்கள், நட்சத்திரப் பேட்டிகள் மற்றும் பல சிறப்பு நிகழ்ச்சிகளை தொகுத்து ஒளிபரப்ப இருக்கும் ஜீ தமிழின் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகளை காணத் தவறாதீர்கள் என்று கூறி அழைப்பு விடுத்துள்ளனர் தொலைக்காட்சி நிலையத்தினர்.

    English summary
    Zee Tamil Television telecast new year special program and movies on January 1,2017. Jayalalithaa's Ponmana selvi, Sivakarthikeyan's Rajini Murugan movie on New year day.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X