எனக்கு பிடிச்ச பன்ச் டயலாக்... 'இது எப்படி இருக்கு'?- ரஜினி
சென்னை: பார்த்தா ஸ்டைல்... நடந்தா ஸ்டைல்... பேசினா ஸ்டைல் என்று சூப்பர் ஸ்டார் ரஜினி பற்றி அவரது ரசிகர்கள் கூறுவார்கள்.
ரஜினி தனது படத்தில் பேசும் பன்ச் டயலாக்தான் அவரது ரசிகர்களின் வேத மந்திரம்.
'நான் ஒருதடவை சொன்னா... நூறு தடவை சொன்ன மாதிரி...''என் வழி தனி வழி' போன்ற வசனங்கள் ரசிகர்களுக்கு பிடித்தமானவை.
ஹீரோவாக நடித்த ரஜினி கூறிய பன்ச் டயலாக்கினை விட அவர் 16 வயதினிலே படத்தில் வில்லனாக நடித்த போது சொன்ன 'இது எப்படி இருக்கு? வசனம் இன்னமும் பிரபலமாக உள்ளது.
இந்த வசனம் ரசிகர்களுக்கு மட்டுமல்ல... ரஜினிக்கும் இதுதான் பிடித்த வசனமாம். இதை ரஜினியே கூறியுள்ளார்.

ஜெயா டிவியில் பேட்டி
தமிழ் புத்தாண்டு தினத்தன்று ஜெயா டிவியில் ரஜினியின் பேட்டி ஒளிபரப்பாகிறது. நடிகர் விவேக் பேட்டி காண்கிறார்.

அதிரடி முன்னோட்டம்
நீண்ட நாட்களுக்குப் பின்னர் ரஜினியின் பேட்டி ஒளிபரப்பாகப்போகிறது என்பதால் ஜெயா டிவியில் முன்னோட்டம் ஒளிபரப்பிவருகின்றனர்.

திரையுலக பயணம்
தன்னுடைய திரையுலக பயணம் பற்றி இந்தப் பேட்டியில் மனம் திறந்துள்ளார் ரஜினி.

கோச்சடையான் பற்றியும்
அனைவராலும் எதிர்பார்க்கப்படும் கோச்சடையான் திரைப்படம் பற்றியும் இந்த பேட்டியில் கூறியுள்ளார்.

பஞ்ச் டயலாக்
ரஜினியின் பன்ச் டயலாக் பற்றி பேசிய விவேக், உங்களோட பன்ச் டயலாக் எல்லோருக்கும் பிடிக்கும். ஒரு டயலாக் பேசுங்களேன் என்று கேட்ட உடன், இது எப்படி இருக்கு? என்று கேட்டு தன் ட்ரேட் மார்க் புன்னகையை உதிர்க்கிறார் ரஜினி.

எனக்கு பிடித்தது
உங்களுக்கு பிடித்த பன்ச் டயலாக் என்ன என்று விவேக் கேட்ட உடன், இது எப்படி இருக்கு? அதுதான் எனக்கும் பிடிக்கும் என்று கூறுகிறார் ரஜினி.

பட்டையை கிளப்பிய பன்ச்
இந்த டயலாக் பேசப்பட்டு 40 வருடங்களை எட்டப்போகிறது. ரஜினி தனது படங்களில் எத்தனையோ பன்ச் டயலாக் பேசிவிட்டார். ஆனாலும் ஹீரோ பேசியதை விட வில்லன் பேசிய பன்ச்தான் எல்லோருக்கும் பிடித்தமானதாக இருக்கிறது. முழு பேட்டியையும் காண ஏப்ரல் 14 வரை காத்திருங்கள் என்கின்றனர் ஜெயா டிவி நிர்வாகத்தினர்.


Click it and Unblock the Notifications











