ராஜ்கிரனை அவமானப்படுத்திய ஜீ தமிழ்..இப்படி செய்திருக்கக் கூடாது.. விமர்சிக்கும் நெட்டிசன்கள்!
சென்னை : நடிகர் ராஜ்கிரனை அவமானப்படுத்தும் வகையில் ஜீ டிவி இப்படி ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பலாமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
பிரபல வில்லன் நடிகர் சண்முகராஜாவின் தம்பி, முனிஸ் ராஜா. நாதஸ்வரம் தொடர் மூலம் பிரபலமான இவர், திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவரும் நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் ஜீனத் பிரியாவை காதலித்து பதிவு திருமணம் செய்து செய்து கொண்டனர்.
இந்த தகவலை முனிஸ் ராஜா இன்ஸ்டாகிராமில் வீடியோவாக வெளியிட்டு இருந்தார். இதனால், செய்தி சோஷியல் மீடியாவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

நடிகர் ராஜ்கிரண்
இதையடுத்து, நடிகர் ராஜ்கிரண் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், எனக்கு திப்பு சுல்தான் மற்றும் நைனார் முஹம்மது என்ற ஒரே ஒரு மகனைத்தவிர, வேறு பிள்ளைகள் கிடையாது. இந்து மதத்தைச்சேர்ந்த ஒரு பெண்னை தங்கள் சொந்த மகளாக வளர்ந்து வந்தோம். அவரை வளர்ப்பு மகள் என்று நான் யாரிடமும் இதுவரை சொல்லியதே இல்லை.

வளர்ப்பு மகள்
முகநூல் மூலம் அவருடன் நட்பு ஏற்படுத்திக்கொண்ட சீரியல் நடிகர், என்னென்ன முறையிலோ அந்தப்பெண்ணை, தன் வசப்படுத்தி, கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என பல திட்டங்களை போட்டு, திருமணம் செய்து கொண்டார். எனவே ஜீனத்திற்கும் எனக்கும் என் குடும்பத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நடிகர் ராஜ்கிரண் தெரிவித்து இருந்தார். இந்த செய்தி சோஷியல் மீடியாவில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

சிறப்பு நிகழ்ச்சி
இந்நிலையில், ஜீதமிழ் தொலைக்காட்சி ஆயுத பூஜை பாண்டியை முன்னிட்டு புதுமண தம்பதிகளான ஜீனத் பிரியா மற்றும் முனீஸ் ராஜாவை வைத்து சிறப்பு நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. அந்த நிகழ்ச்சியில் இருவருக்கும் திருமணம் செய்துவைத்தனர். இவர்களின் திருமணம் யாருக்கும் தெரியாமல் இருந்த நிலையில், அதை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளனர்.

இப்படி செய்யலாமா?
இந்த நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்கள், வளர்ப்பு மகள் ரசிய திருமணம் செய்து கொண்டதை நினைத்து ராஜ்கிரண் மற்றும் அவரது குடும்பத்தினர் மன வருத்தத்தில் இருக்கும் போது, அவரது மன வருத்தத்தை அதிகரிக்கும் வகையில் ஜீ தொலைக்காட்சி இப்படி ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பலாமா என்றும் ராஜ்கிரணை அவமானப்படுத்தி விட்டீங்களே என்றும் நெட்டிசன்ஸ் ஜீ தமிழ் தொலைக்காட்சியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











