தங்கள் சீரியல்களை தாங்களே கலாய்த்துக்கொண்ட தனியார் தொலைக்காட்சி.. என்ன கோபமோ!

சென்னை :ஒவ்வொரு சேனலும் தங்களது ரசிகர்களை அவர்களது மனங்களை வெற்றிக் கொள்ள நிகழ்ச்சிகள், சீரியல்கள் என பல கட்டங்களில் பல செயல்பாடுகளை செய்து வருகிறது.

இதில் நிகழ்ச்சிகளை காட்டிலும் அதிகமாக ரசிகர்களை குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களை, சமயங்களில் ஆண்களைக்கூட வெற்றிக் கொண்டு வருகின்றன சீரியல்கள்.

ஆனால் நிகழ்ச்சிகளை காட்டிலும் காட்சி அமைப்புகளுக்காக மிகுந்த மெனக்கெடல்களை செய்ய வேண்டியுள்ளதால் ஒரு சில சீரியல்கள் லாஜிக் மீறல்களை கூட கவனத்தில் கொள்ளாமல் காட்சிகளை அமைத்து வருகின்றன.

 ரசிகர்களை கவரும் சேனல்கள்

ரசிகர்களை கவரும் சேனல்கள்

ரசிகர்களை அவர்களது உள்ளங்களை கொள்ளைக் கொண்டு தங்களது டிஆர்பிக்களை ஏற்றிக் கொள்ள ஒவ்வொரு சேனலும் பிரம்ம பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றன. இதில் நிகழ்ச்சிகளாகட்டும், சீரியல்களாகட்டும் இரண்டிற்குமே சமமான அளவில் தான் உழைப்பை போட வேண்டியுள்ளது.

ரசிகர்களை கவர்ந்த சீரியல்கள்

ரசிகர்களை கவர்ந்த சீரியல்கள்

இந்நிலையில் விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. இதன் பல சீரியல்கள் தொடர்ந்து டிஆர்பியில் முன்னணியில் இருந்து வருகின்றன. குறிப்பாக பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட முக்கியமான தொடர்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

ராஜு வூட்ல பார்ட்டி ஷோ

ராஜு வூட்ல பார்ட்டி ஷோ

இந்நிலையில் விஜய் டிவியில் கடந்த இரு வாரங்களாக ஒளிபரப்பாகிவரும் ராஜு வூட்ல பார்ட்டி நிகழ்ச்சியில் இந்த சீரியல்களை கலாய்த்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவர்களது சீரியல்களை அவர்களே கலாய்த்து கொண்டது ரசிகர்களிடையே சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜுதான் இதை செய்துள்ளார்.

சிறப்பான ப்ரமோ

சிறப்பான ப்ரமோ

ராஜு வூட்ல பார்ட்டி நிகழ்ச்சியில் டிவியில் பாடலைப் போட்டு ஆடிக்கொண்டிருக்கும் வேளையில் அவரது பாட்டி, சீரியலை போடுகிறார். சீரியலில் தொடரும் போட்டதையடுத்து என்ன நடந்ததோ என்று அங்கலாய்க்கிறார். இதையடுத்து சீரியலை இயக்குபவர்களுக்கும் என்ன நடந்தது என்பது தெரியாது என்று கலாய்க்கிறார் ராஜு.

சீரியல்களை கலாய்க்கும் ராஜு

சீரியல்களை கலாய்க்கும் ராஜு

தொடர்ந்து, ஒரு நபர் இரண்டு பெண்களின்மீது ஆசைப்பட்டால் அது பாக்கியலட்சுமி என்றும், ஒரு நபர்மீது இரு பெண்கள் ஆசைப்பட்டால் அது முத்தழகு என்றும் வகைப் படுத்துகிறார் ராஜு. புருஷன் படிக்காமல் இருந்து மனைவி படித்திருந்தால் அது ராஜா ராணி என்றும் கூறுகிறார்.

அடுத்தடுத்த சீரியல்களை கலாய்த்த ராஜு

அடுத்தடுத்த சீரியல்களை கலாய்த்த ராஜு

அடுத்ததாக, பொண்டாட்டி -புருஷன் இருவரும் படிக்காமல் இருந்தால் அது தமிழும் சரஸ்வதியும், அவன் -இவனை கல்யாணம் பண்ணி, எவன் எவன்கூட இருக்கான்னு தெரியாமல் இருந்தால் அது ஈரமான ரோஜாவே, இவங்க அவங்களை கல்யாணம் பண்ணி, அவங்க யாரை கல்யாணம் செய்வது என்று தெரியாமல் இருந்தால் அது சிப்பிக்குள் முத்து என்றும் கலாய்த்து முடிக்கிறார்.

ராஜுவை வம்பிழுத்த பிரியங்கா

ராஜுவை வம்பிழுத்த பிரியங்கா

இதையடுத்து ராஜுவை யாருமே சீரியலில் நடிக்க கூப்பிடுவதில்லை தானே என்று பிரியங்கா கலாய்க்க, ஆமாம் இப்படி பேசினால் எப்படி கூப்பிடுவாங்க என்று அவரே அவரை கலாய்த்துக் கொள்கிறார். இப்படியாக அந்த நிகழ்ச்சியின் ப்ரமோ காணப்படுகிறது.

தங்கள் சீரியல்களையே கலாய்த்த நிகழ்ச்சி

தங்கள் சீரியல்களையே கலாய்த்த நிகழ்ச்சி

எப்போதும் சீரியல் பார்ப்பவர்களுக்கு அது ஆத்மார்த்தமான விஷயமாக மாறிவிடுகிறது. ஆனால் சீரியல்களில் கமிட்டாகாதவர்கள் வைக்கும் விமர்சனங்களையே தற்போது ராஜுவும் கூறியுள்ளார். ஆனால் இதில் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால் தங்களது சேனலில் இருக்கும் தொடர்களையே அவர் கலாய்த்துக் கொள்கிறார். மற்ற சேனல்களின் சீரியலை கையில் எடுப்பதில் சிக்கல் இருக்கும்தானே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X