Don't Miss!
- Automobiles
காரா? இல்ல கப்பலா? டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் புதிய அவதாரத்தை கண்டு மிரளும் போட்டி நிறுவனங்கள்!
- News
இருக்குற சிக்கல்ல பேனா நினைவு சின்னம் எதுக்கு? உருப்படியா ஏதாவது செய்யுங்க.. சீமானுக்கு சசிகலா ஆதரவு
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ராஜு வூட்ல பார்ட்டி நிகழ்ச்சியின் ஸ்பெஷல் கெஸ்ட்.. ஹின்ட் கொடுத்த ராஜு.. கலக்கல் ப்ரமோ வெளியீடு!
சென்னை : விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார் ராஜு ஜெயமோகன்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்த சீசன் 5ன் டைட்டிலை வென்றவர் ராஜு. விரைவில் இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் துவங்கவுள்ளது.
இந்நிலையில் தற்போது ராஜு வூட்ல பார்ட்டி என்ற நிகழ்ச்சியை விஜய் டிவியில் இவர் நடத்தி வருகிறார்.
துல்கர்
சல்மானின்
'சீதா
ராமம்’
தமிழ்
ட்ரெய்லர்
ரிலீஸ்:
யார்
தான்
அந்த
சீதா?
எகிறும்
எதிர்பார்ப்பு!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017 முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி தற்போது 5 சீசன்களை கடந்துள்ளது. விரைவில் 6வது சீசன் துவங்கவுள்ளது. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கவுள்ளார். விரைவில் இந்த நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ராஜு
முன்னதாக விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் நிகழ்ச்சி மூலம் இவர் என்ட்ரி கொடுத்திருந்தார். தொடர்ந்து ஆண்டாள் அழகர் உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார். இதையடுத்து நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்தில் முக்கியமான கேரக்டரில் இவர் நடித்துள்ளார். இதையடுத்தே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

டைட்டில் வின்னர் ராஜு
இந்த நிகழ்ச்சியின் 5வது சீசனில் சிறப்பாக பங்கேற்று பலரது கவனத்தையும் கவர்ந்தவர் ராஜு ஜெயமோகன். டைட்டிலையும் வெற்றி கொண்டார். இவர் இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களையும் பட வாய்ப்புகளையும் பெற்றுள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் டான் படம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

ராஜு வூட்ல பார்ட்டி நிகழ்ச்சி
இதற்கான ப்ரமோக்கள் சிறப்பான வகையில் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்தன. இந்த நிகழ்ச்சி கடந்த வாரம் மிகவும் சிறப்பாக ரசிகர்களை கவரும் வகையில் அமைந்தது. இந்நிலையில் இந்த வார நிகழ்ச்சிக்கான ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் பேசும் ராஜு, நிகழ்ச்சி குறித்து பேசும் ராஜு, இந்த வாரத்தின் ஸ்பெஷல் கெஸ்ட் குறித்து ஹின்ட் கொடுக்கிறார்.

சிறப்பான ப்ரமோ
இதற்கான ப்ரமோக்கள் சிறப்பான வகையில் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்தன. இந்த நிகழ்ச்சி கடந்த வாரம் மிகவும் சிறப்பாக ரசிகர்களை கவரும்வகையில் அமைந்தது. இந்நிலையில் இந்த வார நிகழ்ச்சிக்கான ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் பேசும் ராஜு, நிகழ்ச்சி குறித்து பேசும் ராஜு, இந்த வாரத்தின் ஸ்பெஷல் கெஸ்ட் குறித்து ஹின்ட் கொடுக்கிறார்.

விஜய், தனுஷுடன் நடித்த நடிகை
இந்த வாரம் நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஸ்பெஷல் கெஸ்ட் விஜய், தனுஷுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் என்று ராஜு தெரிவித்துள்ளார். மேலும் சமையல் அறையில் நாம் உபயோகிக்கும் ஒரு பொருள் இவரது பெயருக்கு அடுத்ததாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். அவரது பெயரை கண்டுபிடித்து கமெண்ட் பாக்சில் போடும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.

சரியாக கண்டுபிடித்த ரசிகர்கள்
இதற்கு ஏராளமான ரசிகர்கள் ரியாக்ட் செய்துள்ளனர். அதிகமான பேர் அது அமலா பால் என்பதை சரியாக கண்டுபிடித்துள்ளனர். இந்த வாரம் அமலா பால் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளது இதையடுத்து உறுதியாகியுள்ளது. இந்த வாரம் நிகழ்ச்சியும் களைகட்டும் என்று எதிர்பார்க்கலாம்.