ராக்கி கட்டிக்கிட்டீங்களா அண்ணே?

By Mayura Akilan

சில விளம்பரங்கள் ரசிக்க வைப்பவை. சில விளம்பரங்கள் நெகிழவைப்பவை... சில விளம்பரங்கள் சிந்தனையை தூண்டக்கூடியவை.

இதுபோன்று நெகிழ்ச்சியூட்டும் ஒரு விளம்பரம் கடந்த சில தினங்களாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பிவருகிறது.

சகோதரப்பாசத்தை உணர்த்தும் ரக்ஷா பந்தன் பண்டிகையை கொண்டாடும் வகையில் செல்போன் நிறுவனம் ஒன்று ஐடியாவாக விளம்பரப்படுத்தி வருகிறது.

எப்படி போகனும்?

எப்படி போகனும்?

சாலையில் டிராபிக் ஒழுங்கு படுத்தும் போலீஸ்காரரிடம் வழி கேட்கிறாள் ஒரு இளம்பெண்.

ரைட்ல போங்க சிஸ்டர்

ரைட்ல போங்க சிஸ்டர்

அப்படியே ரைட்ல போங்க சிஸ்டர்... என்று கூறுகிறார் அந்த போலீஸ்காரர்.

ராக்கி கட்டிக்கிட்டீங்களா அண்ணே?

ராக்கி கட்டிக்கிட்டீங்களா அண்ணே?

அது அந்த இளம் பெண்ணின் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தவே, நீங்க ராக்கி கட்டிக்கிட்டீங்களா அண்ணே என்று கேட்கிறாள்.

வேலை அதிகம்…

வேலை அதிகம்…

காலையில இருந்து டியூட்டியில இருக்கேன் என்று போலீஸ்காரர் சொல்லவே, கையை நீட்டுங்க என்று உரிமையோடு சொல்லி ராக்கி கயிறு கட்டிவிடுகிறாள் அந்த பெண். ரக்ஷா பந்தன் வாழ்த்துக்களை தெரிவிக்கிறாள்.

ஏதாவது கொடுக்கணுமே!

ஏதாவது கொடுக்கணுமே!

ராக்கி கட்டிவிட்ட சகோதரிகளுக்கு ஏதாவது பரிசு கொடுப்பது சகோதரர்களின் வழக்கம். அந்த போலீஸ்காரரும், உங்களுக்கு ஏதாவது பரிசு கொடுக்கணுமே என்று கூறிவிட்டு என்னோட போன் நம்பரை நோட் பண்ணிக்கங்க ஏதாவது பிரச்சனைனா உடனே எனக்கு போன் பண்ணுங்க என்று சொல்லுகிறார்.

போலீசுக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான இணையற்ற பந்தம் ஒன்று உருவாகிறது.

மிகவும் அற்புதமாக உணர்வுப்பூர்வமாக எடுக்கப்பட்ட மிகச்சிறந்த விளம்பரம் இது என்றே எனக்கு தோன்றுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X