கண்ணை மூடி மல்லாக்க பார்த்தபடி.. பெருமூச்சுவிட்டு.. பாடாய்ப்படுத்திய ரக்ஷிதா!
சென்னை: சீரியலில் புடவை கட்டி குடும்ப குத்துவிளக்காக ஜொலித்துக் கொண்டிருக்கும் ரக்ஷிதா கடற்கரையில் மாடல் உடையில் அதுவும் பெருமூச்சுவிட்டபடி உருக்கமாக அவர் வெளியிட்ட வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகி என்ன ஆச்சு இவருக்கு திடீரென இப்படி மாறி விட்டாரே என குழம்பிப் போய் இருக்கின்றனர் .
பொதுவாக சினிமா நடிகைகளை விடவும் தற்போது சீரியல் நடிகைகளுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் உருவாகி வந்து கொண்டிருக்கிறது .
அதுவும் ரக்ஷிதா எனும் பெயரைச் சொன்னாலே பலபேர் மனதில் கிராமத்து தேவதையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் முதல் முதலில் தொடங்கி இப்ப வரைக்கும் பாவாடை தாவணிலும் புடவைகளும் அசத்தி வருகிறார்.

அழகால் கட்டி வைத்தவர்
கல்யாணம் முடித்தா இந்த மாதிரி ஒரு பொண்ண தான் கல்யாணம் பண்ணனும் என்று கூறும் அளவிற்கு ரசிகர்களை தன்னுடைய அழகால் கட்டி வைத்திருக்கிறார். இவர் முதல் சீரியலில் அறிமுகமாகும்போது கருப்பாகவும் கருப்பு கிராமத்து தேவதையாக பாவாடை தாவணியில் கலக்கியிருப்பார் .ஆனால் அந்த சீரியலில் அவர் நடிக்கும்போது இந்த அளவிற்கு இவரை ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்.

நேச்சுரல் ப்யூட்டி
நடிகைகள் பலரும் விதவிதமாக மேக்கப் போட்டுக் கொண்டு நடித்தால் தான் அழகு என்று நம்பிக் கொண்டிருக்கும் போது தன்னுடைய அழகையும் குறைத்துக் காட்டி முதல் சீரியலில் பாப்புலர் ஆனவர். அதற்கு பலனாக தான் அந்த சீரியலில் அவருடன் நடித்த சீரியல் கதாநாயகனையே தன்னுடைய வாழ்க்கையில் கதாநாயகனாகவும் மாற்றிக் கொண்டார்.

சூப்பர் வாய்ப்புகள்
திருமணத்திற்குப் பிறகுதான் இவரது வாழ்க்கையில் பெரிய வளர்ச்சி பாதை கிடைத்திருக்கிறது .பல பெண்கள் திருமணத்திற்கு பிறகு எவ்வளவு பெரிய இடத்தில் இருந்தாலும் காணாமல் போய்விடுகின்றனர். ஆனால் இவரது வாழ்க்கையில் அப்படி எதுவும் நடக்கவில்லை. அடுத்ததாக வந்த சரவணன் மீனாட்சி சீரியலில் இவருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் உருவாகிவிட்டது .

செல்ல மீனாட்சி
இந்த சீரியல் மூலமாக இப்ப வரைக்கும் பலர் இவரை மீனாட்சி என்றுதான் கூப்பிட்டு வருகின்றனர். அந்த அளவிற்கு இந்த கேரக்டரில் இவர் செட் ஆகிவிட்டார் .ஒரே சீரியலில் பல கதாநாயகியுடன் பல சீசனில் நடித்தது ஒரே நபர் இவர் மட்டும்தான். பொதுவாக இந்த மாதிரி நடிகர்களுக்கு மட்டும் தான் அமையும் .ஆனால் இவருக்கு மட்டும் விதிவிலக்காக அமைந்திருக்கிறது .அந்த அளவிற்கு மீனாட்சி என்னும் பெயரே இவருக்கு தான் பொருத்தம் என நிரூபித்துக் காட்டிவிட்டார்.

மக்கள் மனசில் மகா
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் மூலமாக மீண்டும் அனைத்து ரசிகர்களின் மனதில் மகாவாக வாழ்ந்து வருகிறார் .இந்த சீரியலில் இவர் முதலில் செட் ஆக வாரா என பலர் எதிர்பார்த்திருந்த நேரத்தில் இவர் தான் இந்த கேரக்டருக்கு பொருத்தம் என தற்போது சொல்லும் அளவிற்கு இந்த சீரியலில் இவர் நன்றாக செட் ஆகிவிட்டார்.
போட்டோஷூட்
இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் போட்டோசூட் மோகம் பிரபலமாகி கொண்டு வருகிறது .அதுவும் நடிகைகளிடம் இந்த மோகம் அதிகமாகவே இருக்கிறது .அதனால்தான் சூட்டிங் ஸ்பாட்டில் சரி வெளியிலும் சரி விதவிதமாக போட்டோக்களை எடுத்து குவித்து வருகின்றனர். போட்டோ ஷூட் நடிகைகள் கிளாமரில் கலக்கினால் தான் ரசிகர்களை கவர முடியும் என கிளாமரில் விதவிதமாக கலக்கி கொண்டிருக்கிறார்.

கலக்குவோம்ல
ஆனால் இவர் மட்டும் எப்போதுமே புடவையிலும் மாடல் உடையாக இருந்தாலும் சரி அதிலும் ஹோம்லியாக தான் போட்டோஸ்கள் எடுத்து வருகிறார் .ஆனால் தற்போது இவர் வெளியிட்டிருக்க வீடியோக்களும் போட்டோக்கள் தான் வைரலாக பரவி வருகிறது. கடற்கரையில் தண்ணீர் ரோடும் கண்களில் காதலோடும் விதவிதமான வீடியோக்களில் எடுத்திருக்கிறார் .

நீண்ட பெருமூச்சு
அதுவும் கடலலையில் நனைந்தபடி பெருமூச்சு விட்டு இவர் எடுத்திருக்கும் போட்டோக்களை பார்த்து பல ரசிகர்கள் மூச்சுவிட முடியாமல் தவித்து வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் இன்னொரு வீடியோவில் பெண்களின் கஷ்டங்களையும் கவலைகளையும் கண்ணீரோடு நடித்துக் காண்பித்து இருக்கிறார் இதைப் பார்க்கும்போது பல திரைப்படங்களின் கதையை ஒரே பாட்டில் பார்த்து முடித்து போல இருக்கிறது என்று ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











