Kalyana veedu serial: மக்கர் பண்ணாம அனுசுயா காலில் ராம் விழுந்துட்டானே!

சென்னை:சன் டிவியின் கல்யாண வீடு சீரியலில் அனுசுயா தான் சொன்னபடி கணவன் ராமை தனது காலில் விழ வைத்துவிட்டாள். இது ஒரு சாதாரண பெண்ணால் முடியாத காரியம். அதை சாதித்து காண்பித்து இருக்கிறாள் அனுசுயா.

கல்யாண வீடு ,சீரியல் கலகலப்பாகவும், சென்டி மென்டாகவும் , சோகமாகவும், அதிரடியாகவும், அடாவடியாகவும் விஷயங்களுடனும் ரொம்ப நல்லாவே ஒளிபரப்பாகிட்டு வருது..

கோபியின் பெரிய தங்கை அனுசுயாவுக்கு கல்யாணம் செய்து வச்ச ராம் என்கிற மாப்பிள்ளை, சுகந்தி என்கிற பெண்ணுடன் தனியாக வாழ ஆரம்பிச்சு அவளையே திருட்டு கல்யாணமும் செய்துக்கறான்.

விவாகரத்து வாங்க

விவாகரத்து வாங்க

விவாகரத்து பெற, கோர்ட்டில் ராம் வழக்கு தொடுக்கிறான்.அனுசுயா விவாகரத்து தர மறுக்கிறாள்.இந்த விவாகரத்தை பெற அனுசுயா குடும்பத்தையே ஆட்டிப் படைக்கிறான் குடும்பமே ராமால் படாத பாடு படுகிறார்கள். குழந்தையை கடத்துதல், மனைவியை ரவுடியை விட்டு மிரட்டுதல், கோபி குடும்பத்தையே ரவுடிகளை வைத்து டெல்லியை விட்டே விரட்டி அடித்தது என்று பல அதிரடிகள் செய்தும் அனுசுயா விவாகரத்து தரவில்லை.

அரசு வேலையை

அரசு வேலையை

இதுக்கு நடுவில் டெல்லியில் தான் பார்த்து வந்த அரசு வேலையை ராஜினாமா செய்துவிட்டு, சுகந்தியுடன் பாண்டிச்சேரி வந்து வசிக்கறான். அப்படியும் அனுசுயா, விவாகரத்து தராமல் திருட்டு கல்யாணம் செய்ததை நிரூபித்து ரெண்டு பேரையும் ஜெயிலுக்கு அனுப்பி வைக்கிறாள். உன்னை என் காலில் விழ வைக்கிறேண்டின்னு அப்போ. பொண்டாட்டி அனுசூயாவை பார்த்து சபதம் போடறான் ராம்.

ராம் சுகந்தி

ராம் சுகந்தி

சுகந்தியும் ராம் செய்யும் காரியத்தால் போலீஸ் ஸ்டேஷன் கோர்ட் என்று அலைந்து துன்பம் அனுபவிக்கிறாள். இனிமேல் தான்னால் முடியாது என்கிற பட்சத்தில் எப்படியாவது மியூச்சுவல் புரிதலில் பிரிய அனுசுயாவிடம் பேசு... என்னாலே போலீஸ் ஸ்டேஷன் கோர்ட் என்று அலைய முடியலைன்னு சுகந்தி சொல்றா. ஆனால், அனுசூயாவிடம் எந்த பாட்சாவும் பலிக்கவில்லை.

பேசி பார்க்கலாம்

பேசி பார்க்கலாம்

வா அனுசூயாவிடம் பேசிப் பார்க்கலாம் என்று, சுகந்தி ராமை அழைச்சுட்டு வந்து அனுசூயாவைப் பார்த்து, அவள் காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்கறா. கோபி வீட்டில் எல்லாரும் சுகந்தியைத் திட்ட, என் கூடப் பழகும்போது ராம் தனக்கு கல்யாணம் ஆயிருச்சுன்னு சொல்லலை. அதனாலதான் நான் பழகினேன்.இப்போ எனக்கு இவனை விட்டா யாருமில்லை.தயவு செய்து கேஸ் வாபஸ் வாங்குங்கன்னு கேட்கறா..

விழ சொல்லு

விழ சொல்லு

நீயும் தப்பு பண்ணி இருக்கே... ஆனால், என் பொண்ணை இவன்கிட்டே இருந்து காப்பாத்த எனக்கு உதவிசெய்து இருக்கே. ஆனாலும், இவன் கூட வாழ எனக்கு பிடிக்கலை.உனக்காக விட்டுத் தரேன்.அவன் என்னை காலில் விழ வைப்பேன்னு சபதம் போட்டானே... இப்போ அவன் என் காலில் வந்து விழட்டும். அப்போ கேஸை வாபஸ் வாங்கறேன்னு சொல்றா.

இதோ விழுந்துட்டானே அனுசுயா காலில் ராம். பெண் சபதம் போட்டால் இப்படி ஜெயிக்கணும்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X