அடுத்தடுத்து புது புது சீரியல்.. மனதில் இடம் பிடித்த ராமன் தேடிய சீதை.. சூடு பிடித்த கெட்டிமேளம்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று ஜீ தமிழ் தொலைக்காட்சி. இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் , அண்ணா சீரியலுக்கு என்று நல்ல வரவேற்பு உள்ளது. தொடர்ந்து மக்களிடம் இருந்து வரும் வரவேற்பால் வரும் நாட்களில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அதிரடியான மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இருந்து புதுப்புது தொடர்களை ஒளிபரப்ப தொடங்கி வருகின்றன, அந்த வகையில் மதியம் மனசெல்லாம் என்ற சீரியலும், இரவில் கெட்டிமேளம் போன்ற சீரியல்கள் சமீபத்தில் ஒளிபரப்பாக தொடங்கிய நிலையில், திங்கள் முதல் ராமன் தேடிய சீதை என்ற புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. கன்னடத்தில் வெற்றி பெற்ற சீதா ராமன் என்ற சீரியலின் டப்பிங் சீரியலாக இது ஒளிபரப்பாக உள்ளது. திங்கள் முதல் சனி வரை மதியம் 2:30 மணிக்கு ஒளிப்பரப்பாக இருப்பாகி வருகிறது. இதுவரை மதியம் 2:30 மணிக்கு ஒளிபரப்பாக வந்த மனசெல்லாம் சீரியல் இனி 3 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. மேலும் நானே வருவேன் சீரியல் இனி 3:30 மணிக்கு ஒளிபரப்பாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமன் தேடிய சீதை: பிறப்பிலேயே சக்கரை வியாதியால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையுடன் தனியாளாக வாழ்ந்து வரும் சீதையின் வாழ்க்கையில் ராமனின் வருகை எப்படியான தாக்கத்தை ஏற்படுத்த போகிறது? ராமனின் வருகையால் சீதையின் வாழ்க்கை வண்ணமயமாகுமா? என்பது தான் இந்த சீரியலின் கதைக்களம் ஆகும். கணவனை இழந்த பெண் குழந்தைகளை வளர்க்க எப்படி கஷ்டப்படுகிறாள் என்பது தான் இந்த சீரியலின் கதை ஆகும். கன்னடத்தில் பலரின் பேவரைட் சீரியலாக இடம் பிடித்து வெற்றி பெற்ற இந்த சீரியல் தமிழ் டப்பிங்கான ராமன் தேடிய சீதை உருவாகி உள்ளது. திங்கள் கிழமை முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் இல்லத்தரசிகளுக்கு நிச்சயம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கெட்டி மேளம்: கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜீ தொலைக்காட்சியில் புதியதாக கெட்டிமேளம் என்ற மெகா தொடர் ஒளிபரப்பானது. இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பான இந்த தொடர் சாயா சிங், விராத், பொன்வண்ணன், பிரவீனா, ரோஜா சீரியல் நடிகர் சிபு சூர்யன், சௌந்தர்யா ரெட்டி ஆகியோர் நடித்துள்ளனர். ஆரம்பத்தில் மெதுவாக சென்ற இந்த தொடர் தற்போது சூடு பிடித்துள்ளது.


Click it and Unblock the Notifications











