பிக் பாஸ் டைட்டிலை வெல்லப் போவது யார்?: சொல்கிறார் ரம்யா

By Siva

சென்னை: இந்த முறை பிக் பாஸ் டைட்டிலை யார் வெல்வார் என்று பாடகி ரம்யா தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் 2 வீட்டில் இருந்தவர்களிலேயே ரொம்ப கூலான நபர் என்று பெயர் எடுத்தவர் ரம்யா. அவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே அனுப்பியதை பார்த்து பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ரம்யாவோ சந்தோஷமாகத் தான் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து ரம்யா கூறியதாவது,

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததில் மகிழ்ச்சியாக உள்ளது. இது வாழ்வில் ஒரு முறை கிடைக்கும் அனுபவம் என்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆர்வமாக இருந்தேன். முதல் சில நாட்கள் நன்றாகத் தான் இருந்தது. டேனி மற்றும் பாலாஜி அண்ணா ஆகியோர் ஜோக்கடித்துக் கொண்டே இருந்தார்கள்.

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

அந்த வீட்டில் உள்ள நெகட்டிவிட்டையை என்னால் ஏற்க முடியவில்லை. எப்பொழுது பார்த்தாலும் சண்டை போடுவதும், புறம் பேசுவதுமாக உள்ளனர். ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறினால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டேன். கடந்த ஆண்டு ஒருவருக்கு எதிராக அனைவரும் சேர்ந்து கொண்டனர். ஆனால் இந்த ஆண்டோ ஒவ்வொரு போட்டியாளருக்கும் மற்ற போட்டியாளரை பிடிக்கவில்லை. அதனால் தான் சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

முடியவில்லை

முடியவில்லை

நான் மற்றவர்கள் முன்பு அழ மாட்டேன். நான் அழுது ஒரு சிலரே பார்த்துள்ளனர். பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற நான்காவது நாளே அழுதுவிட்டேன். என்னால் அங்கு இருக்கவே முடியவில்லை. அதனால் தான் அழுதேன். போட்டியாளர்கள் அழுவது பொய் இல்லை. அவர்களும் வெளி உலக தொடர்பு இல்லாமல் சோர்ந்து போயுள்ளனர்.

போலி

போலி

இசையால் எனக்கும், வைஷ்ணவிக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. நாங்கள் இருவரும் சேர்ந்து நிறைய பாடல்கள் பாடினோம். போட்டியாளர்கள் அனைவரும் நடிக்கிறார்கள் என்று பிறர் சொல்வதை ஏற்க முடியாது. அனைவரும் நடிக்கவில்லை. ஒவ்வொரு வாரமும் வீட்டிற்கு வந்த விருந்தாளிகளும் எங்களை பார்த்து போலியாக உள்ளீர்கள் என்றார்கள். அதனால் தான் சினேகன் சார் எங்களை பார்த்து போலி என்றதும் எனக்கு கோபம் வந்துவிட்டது.

மும்தாஜ்

மும்தாஜ்

மும்தாஜ் என்னிடம் அன்பாக நடந்து கொண்டார். நான் அவரை மம்மி என்றே அழைத்தேன். திருடன் போலீஸ் டாஸ்கின்போது அவர் ஏமாற்றியதாக நினைத்ததால் எனக்கு அவர் மீது கோபம் வந்தது. அதன் பிறகு அவருடன் 2 நாட்கள் நான் பேசவில்லை. பின்னர் நானே சென்று அவரை கட்டிப்பிடித்தேன். ரித்விகா, ஷாரிக் அல்லது ஜனனி பிக் பாஸ் டைட்டிலை பெறக்கூடும். மும்தாஜ் தனது கோபத்தை கட்டுப்படுத்தினால் அவர் கூட ஜெயிக்கலாம் என்கிறார் ரம்யா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X