கதைகள் சொன்ன பாலுமகேந்திரா… ரம்யா

By Mayura Akilan

பாலுமகேந்திரா படத்தில் நடித்தது என் அதிர்ஷ்டம் என்று கூறியுள்ளார் சீரியல் நடிகை நடிகை ரம்யா.

தலைமுறைகள் படத்தில் நடிக்கும் போது பால்ய பருவ நிகழ்வுகளை பகிர்ந்து கொள்வார் பாலுமகேந்திரா...சுயசரிதை எழுதும் அளவிற்கு அந்த சம்பவங்கள் அடங்கியுள்ளன.

ஒருவருடம் தலைமுறைகள் படத்தில் நடித்தேன். இன்னும் கொஞ்சநாள் அந்த படத்தில் நடிக்க மாட்டோமா? என்றிருந்தது என்று கூறியுள்ளார்.

சீரியல், மாடலிங், சினிமா, காதல் திருமண வாழ்க்கை போட்டோகிராபி என வாழ்க்கையில் சுவையான சம்பவங்களை மனம் திறந்து கூறியுள்ளார் ரம்யா.

என் அதிர்ஷ்டம்

என் அதிர்ஷ்டம்

"சினிமாவில் கதாநாயகியாக நடிப்பதற்கு ஏகப்பட்ட போட்டிகள் இருக்கிறது. அப்படியே ஒரு படத்தில் அறிமுகமானாலும் அந்த வாய்ப்பை தொடர்ந்து தக்க வைத்துகொள்வதற்கு சாமர்த்தியத்தைவிட, அதிர்ஷ்டமும் அவசியம் வேண்டும். பாலுமகேந்திராவின் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது என் அதிர்ஷ்டம்.

மாடலிங் சின்னத்திரை

மாடலிங் சின்னத்திரை

நான் எம்.ஏ. பப்ளிகேஷன்ஸ் படித்துள்ளேன். மாடலிங் துறையில் எனக்கு ஆர்வம் அதிகம். சின்னத்திரைக்குள் ‘இது ஒரு காதல் கதை' நான் அறிமுகமான முதல் சீரியல்.

சினிமாவில் மந்திரப்புன்னகை

சினிமாவில் மந்திரப்புன்னகை

அதை தொடர்ந்து கரு. பழனியப்பன் சார் இயக்கி நடித்த ‘மந்திரப்புன்னகை' படத்தில் கதாநாயகனின் சின்ன வயது அம்மாவாக நடித்தேன். எல்லோராலும் பாராட்டப்பட்ட அந்த கேரக்டர் மூலம் பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது.

தடையற தாக்க

தடையற தாக்க

கண்டுபிடி கண்டுபிடி' எனும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தில் சீமான் சார் ஜோடியாக நடித்துள்ளேன். ‘தடையற தாக்க' படம் பார்த்தவர்கள் அத்தனை பேரும் என்னை அடையாளம் கண்டு கொண்டு பாராட்டுகிறார்கள்.

தமிழ் சினிமாவின் கேமரா கவிஞரும், மிகப்பெரிய இயக்குனருமான பாலுமகேந்திரா சார் படத்தில் நடித்ததை மிகப்பெரிய பெருமையாக கருதுகிறேன். எனக்கு போட்டோகிராபியில் ஆர்வம் இருந்ததால் அதைப் பற்றி பாலுமகேந்திராவிடம் நிறைய கேட்டு தெரிந்து கொண்டேன்.

வில்லி வேடம்

வில்லி வேடம்

தலைமுறைகள் படத்திற்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் வருகின்றன. காமெடி, லேடி டான் மாதிரியான கேரக்டர்களின் நடிக்க ஆசை. எனக்கு யாராவது ‘வில்லி' வேடம் கொடுத்தால் அதில் கண்டிப்பாக கலக்குவேன். நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறேன்

சிங்கம் மாதிரி படம்

சிங்கம் மாதிரி படம்

நடிப்பதோடு மட்டுமல்லாது படம் இயக்கவும் ஆசை. போக்கிரி, சிங்கம், மாதிரி கமர்ஷியல் மசாலா படம் இயக்கவேண்டும் என்பதே ஆசை அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளேன் என்கிறார் ரம்யா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X