பிரஜினின் வாய்ஸ் நோட்.. லீக் செய்த ரம்யா ஜோ.. சாண்ட்ராவுக்காக இவ்வளவு பிளானா?
சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 முடிந்து இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டது என்றாலும் போட்டியாளர்களுக்கு இடையிலான பஞ்சாயத்து என்பது இன்னும் தீர்ந்தபாடில்லை. ஒருபுறம் ரெட் கார்டு வாங்கிய விஜே பார்வதி மற்றும் கமருதீன் ரசிகர்களைச் சந்திக்கிறார்கள். இதில் பார்வதி சக போட்டியாளர்களை கடுமையாக விமர்சிக்கிறார், இன்னும் சொல்லப்போனால் அவர்களை காலத்திற்கும் மன்னிக்க மாட்டேன் என்கிறார். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாள் அன்று இப்படியான விமர்சனங்களை முன் வைக்கவில்லை.
இது ஒரு புறம் இருக்க, ரம்யா ஜோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாண்ட்ரா எமியை போட்டு பிளந்து வருகிறார் என்று தான் கூற வேண்டும். குறிப்பாக சாண்ட்ராவின் பேட்டி, அதற்கு அவரது ரிப்ளை எல்லாம் ஒரு புறம் இருக்க, இப்போது சாண்ட்ராவிடம் பிரஜன் பகிரச் சொன்ன தகவல் குறித்து பிரஜின் ரம்யா ஜோவுக்கு அனுப்பிய ஆடியோவை ரம்யா ஜோ வெளியிட்டு பரபரப்பை பற்ற வைத்துள்ளார்.

அதாவது ரம்யா ஜோவுக்கு பிரிஜின் அனுப்பிய ஆடியோவானது, " ரம்யா நீ எப்போது மீண்டும் உள்ளே போகிறாய்? நீ போகும் போது சண்ட்ராவை நான் பணப்பெட்டியை எடுக்க சொல்லிவிடு என்று சொன்னேன் அல்லவா? அதை நீ சாண்ட்ராவிடம் சொல்ல வேண்டாம். சாண்ட்ராவை பணப்பெட்டியை எடுக்க வேண்டாம் என்று சொல்லிவிடு. பணப்பெட்டியை அவர்களுக்குள் யாரோ ஒருவர் எடுத்துக் கொள்ளட்டும்" என்று கூறுகிறார்.
பிரஜின் இவ்வாறு கூறும் ஆடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இது மட்டும் இல்லாமல் ரம்யாவுக்கு பிக்பாஸில் மீண்டும் செலிபிரேஷன் வீக்கில் உள்ளே சென்ற போதே சாண்ட்ரா தன்னைப் பற்றி மிகவும் தவறாக விமர்சித்ததை நேருக்கு நேர் கேட்டு விளாசிவிட்டார். அது மட்டும் இல்லாமல் மற்ற சக போட்டியாளர்கள் இடமும் சாண்ட்ரா குறித்து தனது காட்டமான விமர்சனத்தை முன் வைக்கவும் செய்தார். இப்படி இருக்கையில் சாண்ட்ராவின் பேட்டி சமீபத்தில் இணையத்தில் வேகமாக பரவ, ரம்யா ஜோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், " எப்ப பாரு மத்தவங்கள குறை சொல்வதை விட்டுவிட்டு, நம்ம ஒழுங்கா இருக்கணும்னு பார்த்துக்கிட்டா நல்லது.
அவங்க வீட்டுலயே தோசை ஊற்றும் தவா ஓட்டையா இருக்கும் போது பக்கத்து வீட்டில் தோசை ஓட்டையா இருப்பதை எட்டிப் பார்ப்பார்களாம். என்ன ஒரு கேவலமான ஜென்மம். டெடிகேட்டட் டூ நடிப்பு அரக்" என்று பதிவிட்டதுடன், இது யாராக இருக்கும் என்று எனக்கு நேரடியாக மெசேஜ் செய்யுங்கள் பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த பதிவும் சாண்ட்ராவை அட்டாக் செய்வதாகத்தான் இருக்கிறது என்று ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











