ராதிகா சரத்குமார் - ரம்யா கிருஷ்ணன் இடையே கடும் போட்டியாமே?

Recommended Video

சரத்குமாரின் மனைவி ராதிகா, விஷால் வெளியிட்ட வீடியோவை விமர்சித்துள்ளார்.

சென்னை: நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் நடிகை ரம்யா கிருஷ்ணன் இடையே தமிழ் - தெலுங்கு இன்டஸ்ட்ரியில் கடும் போட்டி நிலவி வருவதாகத்தான் இப்போதைய பேச்சுக்கள்.

ராதிகா, ரம்யா ரெண்டு பேருமே எந்த மாதிரி கதாபாத்திரம் என்றாலும் நடிப்பின் உச்சத்தை தொட்டு வந்து விடுவார்கள். இருவருக்குமே அவரவர் குரலும் பிளஸாகத்தான் இருக்கிறது.

இந்த குவாலிஃபிகேஷன் சுலபமாக எல்லா நடிகைகளுக்கும் இருப்பதுமில்லை, இது எந்த வயதிலும் கை கொடுத்து காப்பாத்தியதும் இல்லை.

திறமை அத்தனையும்

திறமை அத்தனையும்

தங்களுக்கு வரும் கதாபாத்திரங்களை உள் வாங்கிக்கொண்டு அதை இயக்குனர் எதிர்பார்ப்பதை விட இரு மடங்கு அதிகமாக நடித்து புகழின் உச்சியைத் தொட்டவர்கள். ஆனால், ராதிகா மாதிரி ரம்யா ஆரம்பத்தில் இருந்து புகழின் உச்சத்தை தொட்டவராக இருக்கவில்லை. முதல் வசந்தம் படத்தில் நல்ல புகழை அடைந்த ரம்யாவால் தொடர்ந்து அந்த இடத்தைத் தக்க வச்சுக்க முடியலை.

அவ்வப்போது ரம்யாவுக்கு

அவ்வப்போது ரம்யாவுக்கு

கேப்டன் பிரபாகரன் போன்ற வெற்றி படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிச்சு இருந்தாலும், ரொம்ப வருஷங்களுக்குப் பிறகு படையப்பா அவரின் நடிப்புக்கு மகுடம் சூட்டி அழகு பார்த்தது. ரம்யா கிருஷ்ணனுக்கும் மார்க்கெட் தமிழிலும், தெலுங்கிலும் கொடிக் கட்டிப் பறந்தது. மிக முக்கியமாக குணசித்திர வேடங்களுக்கு கூப்பிடுங்கள் ரம்யாவை எனும்படி நிலைமை மாறிப்போனது.

ஏற்கனவே இதில்

ஏற்கனவே இதில்

இதில் ஏற்கனவே உச்சத்தில் இருந்த ராதிகாவுக்கு நிகரான போட்டியாக வந்தவர்தான் ரம்யா கிருஷ்ணன். ஆனால், எந்தவித போட்டியும் இல்லாமல் சுமுகமாக போயிக்கொண்டு இருந்த நிலையில்தான் பாகுபலி ராதிகாவை வெகுவாக பாதித்து விட்டது. பாகுபலியில் .ரம்யா கிருஷ்ணன் கேரக்டருக்கு முதலில் ராஜமவுலி அணுகியது நடிகை ஸ்ரீதேவியைத்தானாம். ஸ்ரீதேவி அளவுக்கு அதிகமான நினைச்சு பார்க்க முடியாத தொகையைக் கேட்டாராம்.

ராதிகா அடுத்து

ராதிகா அடுத்து

ராஜமவுலி அடுத்து பேச நினைத்து, ரடான் அலுவலகத்தில் தவம் கிடந்தது ராதிகாவை புக் பண்ண. ஆனால்,இதோ இப்போ,அப்போ என்று ராஜமவுலியை இழுத்தடிச்சு கடைசி வரைக்கும், இவர் ராதிகாவை சந்திக்கவே முடியலையாம். அந்த அலுவலகத்தில் இப்படி தேவுடு காத்து கிடந்த போது சட்டென்று நினைவுக்கு வந்தவர் ரம்யா கிருஷ்ணன். அப்புறம் என்ன,முதல் பாகம் வெளியான உடனேயே, ரெண்டாவது பாகத்தில் நாங்கள் நடிக்கிறோகிம் என்று ஸ்ரீதேவி, ராதிகா போட்டி போட்டுக்கொண்டு போன் செய்தார்கள்.என்று ராஜமவுலி அலுவலகத்தில் சொல்றாங்க.

அதிகமான வாய்ப்புக்கள்

அதிகமான வாய்ப்புக்கள்

குணசித்திர வேடங்கள் என்றால் இப்போது இயக்குநர்களுக்கு ராதிகா, ரம்யாதான் நினைவுக்கு வருகிறார்கள் என்று கூறும் இயக்குநர்கள், அவர்களுக்குள்ளும் ஒரு ஆரோக்கியமான போட்டி நடக்கறதா நாங்களே நம்பறோம்.ஏன்னா...கதை கேட்கும்போதே இதுக்கு என்னைத்தான் முதலில் கேட்கறீங்களான்னு கேட்டுக்கறாங்களாம் ரெண்டு பேருமே. மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் என்கிற ஒரு படத்தில் லேடி டானாக நடிக்க கதை கேட்ட ராதிகா அசந்து போயி,என்கிட்டத்தான் முதலில் கால்ஷீட் கேட்டு வரீங்களான்னு கேட்டாராம்..!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X