twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாதியிலேயே அத்து விட்டுட்டாங்களே ராஜகுமாரியை… அடுத்து வருது ‘வம்சம்’

    By Mayura Akilan
    |

    சன் டிவியில் ரம்யா கிருஷ்ணன் தயாரித்து நடித்த ராஜகுமாரி தொடர் இன்றுடன் முடிகிறது. இதற்குப் பதிலாக இரவு 8.30 மணிக்கு வம்சம் தொடர் தொடங்குகிறது.

    நூறு எபிசோடு கூட முற்றுப் பெறாமல் அவசர கதியில் முடிக்கப் படுகிறது ராஜகுமாரி தொடர். முந்தைய தொடரான தங்கம் தொடருக்குக் கிடைத்த வரவேற்பு கூட ராஜகுமாரி தொடருக்குக் கிடைக்கவில்லை என்பதாலேயே அவசரம் அவசரமாக முடித்துவிட்டனர் ரம்யா கிருஷ்ணன் குழுவினர்.

    ராஜகுமாரியை முடித்துவிட்டு அதற்கு பதிலாக வம்சம் என்ற புதிய தொடரை தயாரித்து நடிக்கிறார் ரம்யா கிருஷ்ணன். இதில் தங்கம் தொடரில் நடித்த முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர்.

    நீலம்பரியான ரம்யா கிருஷ்ணன்

    நீலம்பரியான ரம்யா கிருஷ்ணன்

    ராஜகுமாரி தொடர் மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. இதில் ரம்யா கிருஷ்ணன் பெயர் ராஜகுமாரி என்ற நீலாம்பரி.

    காசியில் தொடங்கிய தொடர்

    காசியில் தொடங்கிய தொடர்

    தொடரின் ஆரம்பமே காசியில் தொடங்கியது. சரத்பாபு, கிட்டி, கீதா போன்ற பிரபல நடிகர்கள் நடித்தனர். ஆனாலும் வலுவான கதை இதில் அமையவில்லை.

    மூன்று சகோதரிகள்

    மூன்று சகோதரிகள்

    பங்காளிச் சண்டை... மூன்று சகோதரிகள் என இதிலும் தங்கம் தொடரின் சாயல் தெரிந்தது.

    சரத்பாபு – கிட்டி

    சரத்பாபு – கிட்டி

    அண்ணன் தம்பிகளாக சரத்பாபு, கிட்டி நடிக்க ரம்யா கிருஷ்ணன் பெற்றோர்களாக கிட்டி, கீதா நடித்தனர். இதில் பத்து எபிசோடுகளுக்கு உள்ளாகவே கிட்டி படத்துக்கு மாலை போட்டு மங்கலம் பாடி விட்டனர்.

    சுவைக்காத காதல்

    சுவைக்காத காதல்

    அண்ணன் சரத்பாபுவின் மகன் காதல் ஜெயிக்க சொத்து முழுவதையும் அவர் குடும்பத்திற்கு எழுதிவைத்துவிட்டு காசியில் மூழ்கி செத்துப் போகிறார் தம்பி கிட்டி. கீதா மூன்று பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு நடுத்தெருவிற்கு வருகிறார்.

    ஆரம்பம் முதலே அழுகைதான்

    ஆரம்பம் முதலே அழுகைதான்

    தொடரின் ஆரம்பம் முதலே அழுகை என்பதால் டிஆர்பி படுபாதாளத்திற்கு போய்விட்டது. இதில் நளினி செய்த வில்லத்தனம் கொஞ்சம் கூட ஒத்துக் கொள்ளும் படியாக இல்லை.

    எப்படி நகர்த்துவது

    எப்படி நகர்த்துவது

    கதையை எப்படி கொண்டு போவது என்று தெரியாமல் முழித்த இயக்குநர் 100 எபிசோடுகளுக்கு முன்பாகவே முடித்துவிடலாம் என்று முடிவுக்கு வந்துவிட்டனர். 94 எபிசோடுகளுடன் ராஜகுமாரிக்கு மங்கலம் பாடிவிட்டு புதிய தொடராக வம்சம் தொடரை வரும் திங்கட்கிழமை முதல் தொடங்க உள்ளனர்.

    விஜயகுமார் - சீமா

    விஜயகுமார் - சீமா

    வம்சம் தொடரில் விஜயகுமார், சீமா, வடிவுக்கரசி, காவேரி, போன்ற நடிகர்கள் நடிக்கின்றனர். தங்கம் தொடரில் நடித்த முக்கிய நடிகர்களும், ராஜகுமாரியில் நடித்த நடிகர்களும் இணைந்து வம்சம் தொடரில் நடிக்கின்றனர்.

    நான்கெழுத்து சென்டிமென்ட்

    நான்கெழுத்து சென்டிமென்ட்

    சன் டிவியில் கலசம் என்ற தொடரில் அறிமுகமானார் ரம்யா கிருஷ்ணன். பின்னர் தனது சொந்த தயாரிப்பில் தங்கம் தொடரில் நடித்தார். 800 எபிசோடுகள் வரை ஒளிபரப்பான அந்த தொடருக்குப் பின்னர் ராஜகுமாரியை தொடங்கினார். ரம்யா கிருஷ்ணனுக்கு ஐந்தெழுத்து செட் ஆகவில்லை எனவே ‘வம்சம்' என்று மீண்டும் நான்கெழுத்துக்கு மாறிவிட்டார்.

    இந்த தொடராவது ஹிட் ஆகுமா?

    இந்த தொடராவது ஹிட் ஆகுமா?

    தொலைக்காட்சி சீரியலைப் பொருத்தவரை இல்லத்தரசிகளிடம் கிடைக்கும் வரவேற்பினை பொருத்துதான் ஹிட் ஆகும். டி.ஆர்.பி ரேட்டிங் வரும், அதற்கேற்ப விளம்பரம் கிடைக்கும். எனவே புதிய தொடரையாவது ஹிட் தொடராக தருவரா ரம்யாகிருஷ்ணன் என்பது எதிர்பார்ப்பாகும்.

    English summary
    Ramya Krishnan’s Rajakumari serial end on today. A New serial Vamsam to start on June 10th on Sun TV.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X