செம கச்சிதம்.. பாலா தோளை உரசியபடி ரம்யா.. வைரஸ் போல பரவும் போட்டோ!
சென்னை: வேஷ்டி சட்டையில் கடும் கச்சிதமாக மாப்பிள்ளை தோரணையில் ரம்யா பாண்டியனின் நெஞ்சோடு அணைத்தபடி பாலாஜி வெளியிட்ட போட்டோவை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த போட்டோஸ்கள் தீ போல பரவி வருகின்றன.
விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பல நிகழ்ச்சிகள் ரொம்பவே பாப்புலர் ஆகிவிடுகின்றன. அந்த மாதிரிதான் பிக்பாஸ் நிகழ்ச்சியும் ஒவ்வொரு சீசனிலும் டாப்பர் டூப்பர் ஹிட்டடித்த விடுகிறது.
இந்த நிகழ்ச்சி பாப்புலராகி விடுவது போல இதில் கலந்துகொள்ளும் கன்டஸ்டன்ட்டும் பெரிய அளவில் பாப்புலராகி விடுகின்றனர் .

ஆணழகன்
அந்த மாதிரிதான் தற்போது நாலாவது சீசன் வெற்றிகரமாக முடிவடைந்தது. இதில் கலந்து கொண்ட பலர் இதற்கு முன்பு யாருக்குமே தெரியாது நிலையில் இருந்தாலும் தற்போது பட்டிதொட்டியெல்லாம் பிரபலம் அடைந்து விட்டனர். அந்த மாதிரிதான் ஆணழகன் போட்டியில் பட்டத்தை பெற்றிருந்தாலும் பாலாஜி என்று சொன்னதும் அந்த அளவிற்கு யாருக்கும் தெரியாமல் இருந்தார்.

திமிருக்கு ரசிகர்கள்
ஆனால் தற்போது இந்த நிகழ்ச்சியின் மூலமாக இவருக்குப் பெரும் ரசிகர்கள் பட்டாளம் உருவாகிவிட்டது .அதுவும் இளைஞர்கள் முதல் குழந்தைகள் வரை பலரையும் ரசிக்க வைத்து விட்டார் .இவருடைய துணிச்சலான திமிரான பேச்சையும் கேரக்டரையும் பலபேர் பிடித்துவிட்டதால் இவருடைய தீவிர ரசிகர் ஆகிவிட்டனர் .இவர் என்ன செய்தாலும் இவருக்கு கமெண்ட் போடும் ரசிகர்கள் தற்போது இவர் வெளியிட்ட போட்டோவை பார்த்து அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.

ரம்யாவுடன் உலா
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இவர் பாப்புலர் ஆனாலும் இந்த வீட்டிற்குள் இவருக்கும் ஷிவானிக்கும் காதல் என்று பெரிய பிரச்சனையும் பிரளயங்களும் வெடித்துக் கொண்டிருந்த நேரத்தில் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு தற்போது இவர் ரம்யா பாண்டியன் உடன் சுற்றிக் கொண்டிருக்கிறார். இதனை சற்றும் எதிர்பார்க்காத இவர்களின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தற்போது கமெண்டுகளை போட்டு வருகின்றனர்.

புடவை வேட்டியில் ஜோடியாக போஸ்
இவர்கள் இருவரும் ஜோடியாக அதுவும் பாலாஜி வேஷ்டி சட்டையில் ரம்யா பாண்டியன் புடவையிலும் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து பல பேர் இவர்களின் திருமணத்திற்கு வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தாலும் சில பேர் இது ஒரு புதுமையான நட்பு மட்டும்தான் என்று இவர்களுக்கு சப்போர்ட் பண்ணி வருகின்றனர்.

நெஞ்சோடு தாங்கி வந்தார்
பாலாஜியும் ரம்யா பாண்டியனும் நாகப்பட்டினத்தில் நடந்த ஒரு கடை திறப்பு விழாவிற்கு சென்றிருந்தனர் .அங்கு பெருமளவில் ரசிகர்கள் கலந்து கொண்டதால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் அந்த கூட்டத்தில் இருந்து ஹீரோ போல ரம்யா பாண்டியனை நெஞ்சோடு அணைத்தப்படியே காப்பாற்றி வெளியே கொண்டு வந்தார். ஆனால் அதன்பிறகு இவர்கள் இருவரும் விதவிதமான போட்டோக்களை எடுத்து குவித்திருக்கின்றனர் .

சூப்பர் வைரல்
அந்த போட்டோக்களை தற்போது வெளியிடவும் இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஏற்கனவே காதலர் தினத்தில் கூட ஷிவானி அருகில் இருக்கும்போது அவருக்கு கேக் ஊட்டாமல் ரம்யா பாண்டியனுக்கு கேக் ஊட்டி பாலாஜி காதலர் தினத்தை கொண்டாடி இருந்தார் .இந்த வீடியோக்களும் வைரலாகி வந்த நிலையில் மீண்டும் இவர்கள் இருவரும் சேர்ந்து போட்டிருக்கும் போஸ்ட்கள் பலபேருக்கு சந்தேகத்தை கிளப்பி வருகின்றது.


Click it and Unblock the Notifications











