இடுப்பு மட்டுமல்ல.. ரம்யாவிடம் டான்ஸும் சூப்பரா தான் இருக்கு!
சென்னை: பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே சிங்க பெண்ணாக வெளியே வந்தார் ரம்யா பாண்டியன் பெண்கள் மத்தியில் ரொம்பவே பிரபலம் ஆகிவிட்டார்.
அதுவும் கல்லூரி முதல் பள்ளி வரைக்கும் இவர் தற்போது கெஸ்ட் ஆக போய் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார் .
இவர் ஸ்கூல் சிறுமிகளுடன் ஆடிய ஆட்டம் தான் தற்போது வைரலாக சோசியல் மீடியாக்களில் பரவி வருகிறது.

நடனத்திலும் பெஸ்ட்
ரம்யா பாண்டியன் இடுப்பழகில் மட்டும் ஃபேமஸ் இல்லை பிக்பாஸிலும் பெரும் பேமஸ் ஆகி விட்டார். பட்டிதொட்டியெல்லாம் கலக்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாலாவது சீஸனில் கடைசி நாள் வரைக்கும் இருந்த ஒரே பெண் இவர் தான். அதனால் தான் இவருக்கு சிங்கப் பெண்ணே பாட்டு போட்டு ஹைலைட் பண்ணி இருந்தாலும் தற்போது இவர் படுகா டான்ஸ் பெண்களுடன் ஆடிய ஆட்டம் வைரலாக பரவி வருகிறது .

கல்லூரி விழா
கோயம்புத்தூரில் நடைபெற்ற கல்லூரியின் பங்ஷனுக்காக ரம்யா பாண்டியன் சென்றிருக்கிறார் .அங்கு கல்லூரி மாணவிகளுடன் ஒரு கலந்துரையாடல் செய்துவிட்டு ஊட்டியில் உள்ள ஒரு ஸ்கூலுக்கும் சென்றிருக்கிறார் .கல்லூரி மாணவிகளுடன் அவர் செல்பி எடுத்து கலக்கலாக தன்னுடைய ஜாலியான எக்ஸ்பீரியன்ஸை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

படுகர் நடனம்
காலேஜ் பங்க்ஷன் முடிஞ்சதும் ஸ்கூல் பங்க்ஷனில் அங்கு உள்ள பழங்குடி பெண்களுடன் படுகா டான்ஸ் ஆடி அங்கிருந்தவர்களை பரவசப் படுத்தி இருக்கிறார். அதுவுமில்லாமல் தானும் இந்த டான்ஸை மறக்க முடியாது எனக்கு இது ரொம்பவே பிடித்திருக்கிறது டான்ஸ் மட்டுமல்லாமல் இந்த உடையும் எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது என்று அவர் பேசிய வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கட்டி இழுக்கிறாரே
இந்த வீடியோக்களில் இருந்தே தெரிகிறது ரம்யா பாண்டியனுக்கு எந்த அளவிற்கு தமிழ் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று. ஸ்கூல் முதல் காலேஜ் வரைக்கும் இவரை அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த அளவிற்கு தற்போது இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமடைந்து இருக்கிறார். திரைப்படங்களில் அறிமுகமாகி அந்த அளவிற்கு பிரபலம் அடையாததால் இன்ஸ்டாகிராமில் போட்டோ ஷூட் நடத்தி பெரும் பிரபலமான இவர் அதற்கு பிறகு குக் வித் கோமாளி என்னும் நிகழ்ச்சி மூலமாக ரசிகர்களை கவர்ந்து இழுத்து கட்டி வைத்திருந்தார்.

ரசனையின் வெறித்தனம்
இந்த நிகழ்ச்சியில் இருந்து திடீரென்று இவர் விலகி பிக்பாஸில் கலந்து கொண்டாலும் இவருடைய ரசிகர்கள் இவருக்கு வெறித்தனமான சப்போர்ட் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அதனால் தான் கடைசி நாள் வரைக்கும் இவர் தனிப்பெண்ணாக இந்த வீட்டிற்குள் இருந்து சிங்கப் பெண்ணாக வெளியே வந்தார் .வெளியே வந்த பிறகு மீண்டும் இவருக்கு ரசிகர்கள் வெறித்தனமாக ஆதரவு கொடுத்து வருகிறார்கள் .

பெரும் ரசிகர் கூட்டம்
அதனால் தான் செல்லும் இடமெல்லாம் இவருக்காக ரசிகர்கள் அலை போல திரண்டு வருகிறார்களாம். கடைசியாக இவரை ஆண் தேவதை திரைப்படத்தில் பார்த்த இவருடைய ரசிகர்கள் தற்போது இவர் மீண்டும் சூர்யாவுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் .இந்த செய்தியை அவரே தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார்.

ரசிகர்கள் படை
தற்போது ரம்யா பாண்டியன் பள்ளி கல்லூரி விழாக்களில் கலந்து கொண்டு மேலும் ரசிகர்கள் படையை திரட்டி வருகிறார். இது இவருடைய ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக தான் இருக்கிறது .அதனால்தான் அவரது வீடியோக்களை சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பி வருகிறார்கள் .இந்த வீடியோக்களுக்கு கமெண்டுகளும் லைக்குகளும் பிச்சுக்கொண்டு போய்க்கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











