தலையை தரையில் ஊன்றி.. காலைத் தூக்கி போக்கஸ் செய்த ரம்யா பாண்டியன் .. செம!
சென்னை : தலை கீழே நின்றபடி யோகாசனம் செய்து அசத்தியுள்ள ரம்யா பாண்டியனின் வீடியோவை பார்த்ததும் ரசிகர்கள் மெய்மறந்து மீண்டும் மீண்டும் பார்த்து வருகின்றனர்.
காலைத்தூக்கி இவர் கொடுத்த போஸ் பார்த்து விறுவிறுத்து போன ரசிகர்கள். பார்த்து பார்த்து கீழே விழுந்துவிட போறீங்க என பாசம் காட்டவும் தவறவில்லை.
யோகா செய்வதில் நிபுணியாக திகழும் ரம்யா பாண்டியன், இந்த தலைகீழ் யோகா மூலம் ரசிகர்களிடையே வைரலாகியுள்ளார்.

சூப்பர் நாயகி
ஜோக்கர் திரைப்படத்தில் அறிமுகமாகி இன்ஸ்டாகிராம், ட்விட்டரை கலக்கோ கலக்கு என்று கலக்கிக் கொண்டிருக்கும் ரம்யா பாண்டியனுக்கு சினிமா வட்டாரத்தை தாண்டியும் சமூக வலைத்தளத்தில் பெரும் ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது .இவருடைய ஒரு போஸ்ட் க்காக அவருடைய ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர் .அந்த அளவிற்கு ரசிகர்களின் மனநிலை அறிந்து அவர்களுக்காக பல போட்டோக்ஸ்களை எடுத்து குவித்து வருகிறார்.

ரசிகர்களின் பாசம்
இவர் ரசிகர்களின் மீது வைத்திருக்கும் பாசத்தை பார்த்து தான் இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் கூடி வருகின்றனர் .அதுவும் தற்போது இவருக்கு இன்ஸ்டாகிராமில் 2.3 மில்லியன் பாலோவர்ஸ் இருக்கின்றனர் .இவர் 560 போஸ்ட் போட்டிருந்தாலும் ஒவ்வொரு போஸ்ட்க்கும் மில்லியன் தாண்டி லைக் களும் கமெண்ட்களும் வந்துவிடுகிறது. அதனால்தான் இவர் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.

சூப்பர் குக்
இவர் திரைப்படத்தில் அறிமுகமாகி இருந்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பட்டிதொட்டியெல்லாம் பிரபலமாகிவிட்டார் .ஏற்கனவே இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது .இவருடைய க்யூட்டான சிரிப்பை ரசிப்பதற்காகவே பலர் டிவி முன்பு தவம் கிடக்கின்றனர்.

புன்னகை பேரழகி
குக் வித் கோமாலி நிகழ்ச்சியின் மூலமாகவும் சமூக வலைத்தளத்திலும் இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பார்த்து தான் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது .கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்து மேலும் இந்த நிகழ்ச்சி மூலமாகவும் ரசிகர்களை பெருகிவிட்டார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பெண் ரசிகர்களிடம் இவருக்கு பெரும் ஆதரவு ஏற்பட்டிருக்கிறது .

பிக் பாஸின் சிங்கப் பெண்
அதனால்தான் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவரை சிங்கப் பெண் ரம்யா பாண்டியன் என்று பலர் அழைத்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக இவர் டைட்டிலை வின் பண்ணவில்லை என்றாலும் ரசிகர்களின் மனதினை வென்று விட்டார் .அதனால் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு அதிகமான கடை திறப்பு விழாக்களிலும், ஸ்கூல் பங்ஷனில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்து வருகின்றனர் .

விடாமல் போட்டோஷூட்
தற்போது இவர் மீண்டும் புது படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருந்தாலும் போட்டோ ஷூட்டை விட்டபாடில்லை. இவர் சினிமாக்களில் நடித்து கிடைக்காத பெயரை போட்டோஷூட்டில் பெற்றுவிட்டார் .அதுபோல தற்போதும் தன்னுடைய உடம்பை மெயின்டெய்ன்ஸ் பண்ணி வருவதில் இவருக்கு நிகர் இவர்தான். அதனால்தான் இவர் தற்போது யோகா கிளாஸில் சேர்ந்து இருக்கிறார் .

யோகாசனம்
அங்கு செய்யும் யோகாக்களை அவ்வப்போது வீடியோஸ் களாகவும் போட்டோஸ்களாகவும் எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் ,டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் .அதுபோல தற்போது தலைகீழாக நின்றப்படி கலக்கலான ஒரு மோட்டிவேஷனல் சாங்க் போட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோவில் இவரை பார்த்ததும் ரசிகர்கள் சிங்க தலைவி என்று மேலும் வெறி ஏற்றி வருகின்றனர்.

புடிடா புடிடா
ஆனால் நெட்டிசன்களும் இந்த வீடியோவை பார்த்து நன்றாக கலாய்த்து வருகின்றனர் .இவர் மூச்சைப் பிடித்தபடி தலைகீழாக நின்று கொண்டிருப்பதைப் பார்த்ததும் சிலர் புடிடா ..புடிடா.. கீழே விழுந்துட போகுது என்று கலாய்த்து வருகின்றனர் .அதுவும் தற்போது இவர் போஸ்ட் வெளியிட்ட ஐந்து நிமிடங்களுக்குள் கமெண்ட்டுகளும் ஆயிரங்களை தாண்டி லைக்களும் மலைபோல உயர்ந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











