அந்த வெக்கத்துக்கே கப்பு கொடுத்திருக்க வேணாமா.. போச்சே.. ரம்யாவுக்கு இல்லாம போச்சே!

சென்னை: நடிகை ரம்யா பாண்டியன் ஆரம்பத்தில் குறும்படங்கள் நடித்து வந்தாலும், ஜோக்கர் படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகம் ஆனார். அதன் பிறகு ஒன்றிரண்டு படங்கள் என்று நடிச்சு இருந்தாலும், விஜய் டிவியில் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் உலகப் புகழ் பெற்றார்.

அடிக்கடி போட்டோ ஷூட் செய்து ஹாட் புகைப்படங்கள் வெளியிடுவதென்ன...பத்திரிகைகளில் நேர்காணல் என்ன என்று ரசிகர்களை அசத்தி வந்தார். குக்கு வித் கோமாளியின் 20 பிளஸ் போட்டியாளர் இவர் மட்டும்தான். இதனால் புகழ், பாலா, ரக்ஷன் என்று பலரும் நிகழ்ச்சியில் இவரிடம் ஜொள்ளு விட்டபடிதான் இருந்தனர்.

என்ன சொன்னாலும் பதிலுக்கு வெட்க சிரிப்பை மட்டுமே கோமாளிகள் மற்றும் ரக்ஷனுக்கு பதிலாக கொடுப்பார்.அசத்தலான உடைகள், புடவைகள் என்று அணிந்து, அனைவரையும் நிகழ்ச்சியில் கவர்ந்து வந்தார் ரம்யா பாண்டியன்.

நடிகர் விஜய் ரசிகை

நடிகர் விஜய் ரசிகை

தான் தளபதி விஜயின் ரசிகை என்று கூறிக்கொள்ளும் ரம்யா, துப்பாக்கி படத்துக்குப் பிறகு விஜய் ஸ்டைல் மன்னனாக மாறி இருக்கார், அது தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் கூறி இருக்கார். அழகழகான காட்டன் புடவைகள் உடுத்திக்கொள்ள மிகவும் பிடிக்கும் என்று கூறிய ரம்யாவின் அண்மைய போட்டோ ஷூட் காட்டன் புடவையில் கண்ணுக்கு கவர்ச்சியாக அசத்தலாக இருந்தது.

இடுப்பு மடிப்பு

இடுப்பு மடிப்பு

இடுப்பில் வரி வரியான சின்ன சின்ன மடிப்புக்கள் அழகாக தெரிய இவர் கொடுத்த போஸ் ஒன்றுக்கு ரசிகர்கள் அடிமையானார்கள். அதோடு, வயிற்றை எக்கியபடி ஒரு போஸும் கொடுத்து, பலரின் தூக்கத்தைக் கெடுத்தவர் ரம்யா. குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிகள் பாலா, புகழ் இருவரும் ரம்யாவுக்கு ஜோடியாக வர வேண்டும் என்று கிட்டத்த்தட்ட அடிச்சுக்காத குறைதான். என்னதான் இவரை இவர்கள் சுற்றி சுற்றி வந்தாலும், வெட்கப் புன்னகையை பதிலாகத் தந்து சமாளிப்பதில் ரம்யா கில்லாடி.

நடிக்க தெரியாது

நடிக்க தெரியாது

ரம்யா பாண்டியன் ஃபைனலிஸ்ட் ஆனதில் வனிதா விஜயகுமார், ரம்யா சைலன்ட் கில்லர். அவர் டைட்டில் வின் பண்ணினாலும் ஆச்சரிய படுவதற்கில்லை என்று கூறி இருந்தார். ப்ளீஸ் இதை கொஞ்சம் செய்து தரீங்களா, இதை கொஞ்சம் எடுத்து தரீங்களா என்று என்னால் பொறுமையா இருக்கற மாதிரி நடிக்கத் தெரியாது என்று நடிகை ரேகா இவரை மனதில் வைத்து பேசியதோடு, எனக்கு கோமாளிகள் செய்யும் குறும்புகளுக்கு கோவம் வந்துரும் என்றும் கூறி இருந்தார்.

ரம்யா பாண்டியன் கூல்

ரம்யா பாண்டியன் கூல்

என்ன நடந்தாலும், கூல் கூல் சில் சில் என்று ரொம்ப நிதானமாக இருப்பர் ரம்யா. அவர் கொஞ்சம் அவசரமாக கோமாளிகளை விரட்டினார் என்று நிகழ்ச்சியில் இல்லை என்றாலும், ஃபைனலில் புகழ் எதிர்பார்த்தபடியே ரம்யாவுக்கு பேராக வந்தார். அப்போதுதான் சீக்கிரம் சீக்கிரம் என்று அவசரப்படுத்தினார்... மற்றபடி கூல் கூல் சில்சில்தான் ரம்யா. இவர் டைட்டில் வின் பண்ண வேண்டுமென்கிற நினைப்பில் வாயைத் திறந்து உட்கார்ந்து நிகழ்ச்சியைப் பார்த்த ரம்யா ரசிகர்களுக்கு வட போச்சே!

காத்து இருக்கு கலக்கப் போவது யாரு

காத்து இருக்கு கலக்கப் போவது யாரு

ரசிகர்களுக்கு இன்னும் விருந்தளிக்க விஜய் டிவி ரம்யா பாண்டியனை கலக்கப் போவது யாரு 9 சீசனுக்கு ஜட்ஜாக அறிவித்து இருக்க ரம்யா விரைவில் ரசிகர்களை மகிழ்விக்க இருக்கார். இன்னும் சிங்கிள்தான் என்று கூறும் ரம்யாவுக்கு தனது கேரியரை டெவலப் செய்து, வாழ்க்கையில் நல்ல நிலைமைக்கு வருவதுதான் இப்போதைக்கு தனது லட்சியம் என்று சொல்லி இருக்கார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X