ரம்யா பாண்டியனோட சிரிச்ச முகத்தை வச்சு.. கெத்து தலைவி.. கொஞ்சும் ரசிகர்கள்!

சென்னை: சினிமா நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு ரம்யா பாண்டியனுக்கு அவருடைய ரசிகர்கள் அவரை வைத்து பாட்டு பாடி அவருக்காக உருவாக்கிய பாடல் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதுவும் கெத்து தலைவி என அவரது சிரித்த முகத்தை வைத்து அவருக்காகவே உருவாக்கி இருப்பதால் அவருடைய ரசிகர்கள் இந்த பாடலை ரொம்பவே வைரலாக்கி வருகின்றனர்.

எத்தனை புதுமுக நடிகைகள் வந்தாலும் ரம்யா பாண்டியன் இடத்தில் யாரும் வர முடியாது .அவர் தான் எங்களுடைய கெத்து தலைவி என அவருடைய ஃபேன்ஸ் அவருக்காக வேற லெவல் சாங் எழுதி பாட்டு பாடி அசத்தி இருக்கிறார்கள்.

கெத்து தலைவி

கெத்து தலைவி

அதுவும் சிரிக்கும் சிங்கம் ரம்யா பாண்டியன் என பாட்டின் தலைப்பு வேற லெவலில் வைத்திருக்கிறார்கள் . "அடிக்கடி பேரு அவர் பெயரை சொன்னால் அதிரும் ஊரு கெத்து தலைவி நான் செம மாஸ்சு மா. ஸ்டைல் ன்னா ஸ்டைலு அவா சிங்கிள்ஸ ஸ்டைல் மா... ஆர்பி ஸ்டார்ட்ஸி அது வேற லெவல் மா.... வாடி எல் லேடி நீ தங்கமான பூ டி நீயா இல்லை நானா என் மனதை பிடித்த ராதை பொண்ணா வாடி என் ரம்பம் நான் ஒன்னாவே வச்சேன் என் உசுரு முழுக்க உன்ன நெனச்சேன் காதல் புறாவை நான் கண்டுபிடிச்சேன் உன்னை பார்த்ததும் மனச தொலைச்சேன் ரம்யா என் தங்கம் உன்னை காத்துக்கொள்ள சிங்கம் பல்லவி நீ வேணும் வேண்டும் நல்ல காதலி.. எனத் தொடங்கி ஒரு ஆல்பம் சாங் ரம்யாவுக்கு ஆக உருகி உருகி எழுதி இருக்கிறார்கள் .

ரசித்த ரம்யா

ரசித்த ரம்யா

இந்த பாடலை பார்த்ததும் மயங்கி போன ரம்யா பாண்டியன் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் இதை போஸ்ட் பண்ணி இருக்கிறார். சினிமாக்களில் நடித்து கிடைக்காத பெயரும் புகழும் ரம்யா பாண்டியனுக்கு இன்ஸ்டாகிராமில் மூலமாகத்தான் கிடைத்திருக்கிறது. இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் வட்டாரம் நாளுக்கு நாள் இவருக்கு பெருகி வருவதால் இவருக்கு ஆக்டிவாக இருக்கும் நடிகையாக கருதி வருகின்றனர்.

ரசிகர்கள் கெத்து

ரசிகர்கள் கெத்து

ஆனாலும் இவருக்கு இந்த அளவிற்கு ரசிகர்கள் இருப்பார்கள் என யாரும் எதிர்பார்க்கவில்லை. தற்போது ரம்யா பாண்டியன் ரசிகர்கள் செய்த செயல் தான் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது .ரம்யாவுக்கு அவரது ரசிகர்கள் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இருக்கும்போதுகூட அதிகமான சப்போர்ட் பண்ணி கொண்டிருந்தார்கள்.

பிக் பாஸ் பிரபலம்

பிக் பாஸ் பிரபலம்

அதனால்தான் அவரால் கடைசி நாள் வரைக்கும் அந்த வீட்டிற்குள் இருக்க முடிந்தது .தனி பெண்ணாக இவர் கடைசி நாள் வரைக்கும் காலடி எடுத்து வைத்து பிக்பாஸ் டைட்டிலை அவர் ஜெயிக்கவில்லை என்றாலும் அவர் ரசிகர்களின் மனதை ஜெயித்துவிட்டார். ரம்யா பாண்டியன் அண்ணா பல்கலைக்கழகத்தில் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் படித்துவிட்டு வணிக மேம்பாட்டு மேலாளராக வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது தான் இவருக்கு குறும் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

முக அழகு

முக அழகு

குறும்படங்களில் இவர் நடிப்பை பார்த்ததும் கிராமத்து சாயலிலும் பார்த்ததும் பக்கத்து வீட்டு பெண் போல இருக்கும் முக அழகை வைத்து தான் இவருக்கு ஜோக்கரின் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது .இந்த படத்தில் இவர் கிராமத்து தேவதையாக நடித்திருந்தாலும் இந்த படத்தை பார்த்துதான் சமுத்திரக்கனி தன்னுடைய ஆண் தேவதை படத்தில் நடிக்க விருப்பமா என கேட்டிருக்கிறார் .

மொட்டை மாடி

மொட்டை மாடி

இவரும் கதையை கேட்டு பிடித்துப்போக ஆண்தேவதை படத்தில் வேலைக்கு சென்று கொண்டே குழந்தைகளை கவனிக்கும் ஒரு குடும்பத்தலைவியாக நடித்திருந்தார் .ஆனால் திரைப்படங்களில் இவரது நடிப்பிற்கு கிடைக்காத அங்கீகாரம் இவருக்கு சமூக வலைத்தளங்களில் கிடைத்திருக்கிறது. மொட்டைமாடியில் முதல்முறையாக இவர் போட்டோசூட் எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிடவும் இந்த அளவிற்கு ரெஸ்பான்ஸ் கிடைக்கும் என அவரும் ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லை.

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி

அவர்களுடைய ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லை ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட பேரழகியாக இவர் வலம் வருவதால் தான் இவருக்கு பெரும் ரசிகர் பட்டாளம் இருந்து வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி புகழுடன் இவர் சேர்ந்து இறுதிவரையில் இருந்து மூன்றாவது இடத்தை பிடித்து இருந்தாலும் இந்த நிகழ்ச்சி மூலமாகவும் இவருக்கு பெரும் ரசிகர்கள் உருவாகி விட்டனர் புகழுடன் சேர்ந்து எத்தனை கதாநாயகிகள் சமையல் நிகழ்ச்சியில் களமிறங்கி இருந்தாலும் ரம்யா பாண்டியன் இடத்தில் யாரும் வர முடியவில்லை

செம ஜாலி

செம ஜாலி

அந்த அளவிற்கு இவர்கள் இருவரின் கலகலப்பும் ஜாலியும் அனைவருக்குமே பிடித்திருந்தது .பிக்பாஸ் நாலாவது சீசனில் 3 ஆவது ரன்னர் அப் ஆனார். இவரின் இன்ஸ்டாகிராமில் இவருக்கு இருக்கும் ரசிகர்களை பார்த்து தான் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதுவரைக்கும் இவருக்கு இரண்டு மில்லியன் பாலோ வர்ஸ்கள் இருக்கின்றனர்.

மாடலிங்

மாடலிங்

516 போஸ்ட்கள் போட்டிருந்தாலும் இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து கொண்டிருக்கின்றனர். ஆரம்பத்தில் விளம்பர மாடல்களாக போட்டோ ஷூட் நடத்தி கொண்டிருந்த இவர் தற்போது கிடைக்கும் நேரங்களில் எல்லாம் ரசிகர்களுக்காக போட்டோக்களை எடுத்து குவித்து வருகிறார் . அதிலயும் சிறப்பு என்னவென்றால் இவருடைய ரசிகர்கள் இவருக்கு ஆக இந்த அளவிற்கு செய்வார்கள் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

மேடம் பிசி

மேடம் பிசி

பிக்பாஸ் வீட்டிற்குள் இவர் இருக்கும்போது இவருக்காக ஓட்டு அழிப்பவர்களுக்கு துணிக்கடையில் சிறப்பு தள்ளுபடி எல்லாம் வழங்கி இவருடைய ரசிகர்கள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது இவர் மீது வைத்திருக்கும் பாசத்தை ரசிகர்கள் பாட்டின் மூலமாகவும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள் .இந்த ஆர் பி கெத்து சாங்ஸ் என ரம்யா பாண்டியனின் ரசிகர்கள் வெளியிட்டிருக்கும் பாடலைப் பார்த்து திரைத்துறையினரும் ரம்யா பாண்டியன் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X