கண்ணை மூடி சொக்கி போன ரம்யா பாண்டியன் .. உற்றுப் பார்த்து உச்சு கொட்டும் ரசிகர்கள்
சென்னை: பிளாக் மேக்கப்பில் பிளாக் பியூட்டி ஆக கண்ணை மூடி சூப்பர் போஸ் கொடுத்துள்ளார் ரம்யா பாண்டியன். இதைப் பார்த்து சொக்கிப் போய் வருகின்றனர் ரசிகர்கள்.
பள பளனு இருக்கும் தேகத்தில் கருப்பு மேக்கப் போட்டு கலக்குறீங்களே என்றும் ரசிகர்கள் வர்ணித்து தள்ளுகின்றனர்.
வர வர எல்லாமே கருப்பா காட்டி மிரட்டறீங்களே என்றும் சிலர் டபுள் மீனிங்கில் கலாய்க்கின்றனர்.

குக் வித் கோமாளி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அது தொடர்ந்து பல சீசன் களாக ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் முதல் சீசனில் கலந்துகொண்ட ரம்யா பாண்டியன் ரசிகர்களை நன்றாகவே ரசிக்க வைத்துவிட்டார் .இந்த சீசனில் இவர் கலந்து கொண்டதும் இவரும் புகழும் சேர்ந்த செய்த சேட்டைகளை பார்ப்பதற்காகவே பலர் இதை தொடர்ந்து பார்த்து வந்தனர்.

சூப்பர் ஜோக்கர்
ரம்யா பாண்டியன் சீரியலுக்கு வருவது வருவதற்கு முன்னர் முதல்முதலில் ஜோக்கர் திரைப்படத்தில் அறிமுகமாகி இருக்கிறார் .இந்த படத்தில் கிராமத்து தேவதையாக வந்திருப்பார் .புடவையிலும் கருப்பான கிராமத்து பைங்கிளி ஆக இவர் நடித்து இருப்பார். ஆனால் முதல் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை கொடுக்கவில்லை .
இந்தத் திரைப்படத்திற்கு பிறகு வேறு விதமாக ரசிகர்களை கவரலாம் என யோசித்துக் கொண்டிருக்கும் போது தான் அப்படியே கேமராமேனை வைத்து இவருக்குப் பிடித்த மாதிரி அனைவரும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வகையில் மொட்டமாடி போட்டோக்களை எடுத்து சமூக வலைத்தளத்தில் அதிர வைத்து விட்டார்.

பிரபலமான போட்டோஸ்
இவருடைய போட்டோஸ்கள் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமாகிவிட்டது. நெட்டிசன்கள் கையில் கிடைத்ததால் அவர்கள் தங்கள் பங்குகளுக்கு மீம்ஸ் போட்டு வேற லெவல் வைரலாக்கி விட்டனர். இந்த போட்டோ சூட்டுக்கு பிறகு இவருக்கு பெரும் ரசிகர்கள் குவிய தொடங்கிவிட்டனர் .இவருடைய ரசிகர்களின் பட்டாளத்தை பார்த்து தான் இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நான்காவது சீசனில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.
Recommended Video

சிங்கப் பெண்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு இவருக்கு மேலும் ரசிகர்கள் பெருகத் தொடங்கிவிட்டனர். அதற்கு முன்னர் வரைக்கும் இவருக்கு ஆண் ரசிகர்கள் தான் அதிகமாக இருந்தனர். ஆனால் பெண் ரசிகர்களும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு கட்டவுட் வைக்கும் அளவிற்கு அதிகமாகி விட்டனர் . இவரை சிங்கப் பெண் என்று அழைத்து வருகின்றனர் .

பிக் பாஸ் பிரபலம்
இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடைசிவரைக்கும் இருந்தது அவருடைய ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக தான் இருக்கின்றது. இவருக்கு பிக் பாஸ் டைட்டில் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை கடைசி வரைக்கும் அந்த வீட்டிற்குள் தில்லாக இருந்ததே போதும் என்றுதான் ரசிகர்கள் கூறி வந்தனர். தற்போது இவர் புது படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் மாடலிங்கும் பண்ணிக் கொண்டிருக்கிறார் .

ரசிக்கும் ரசிகர்கள்
அதற்காக போட்டோஷூட்களை மீண்டும் எடுத்துக் கொண்டிருக்கிறார் .அந்த மாதிரி தான் தற்போது ப்ரீ கேரோடு கண்ணை மூடி இவர் ரசித்தபடி இருக்க இவரை ரசிகர்கள் அணுஅணுவாக ரசித்து வருகின்றனர் .அதுவும் கண்களுக்கு மேட்சாக கருப்பு மேக்கப் போட்டு இருப்பது கூடுதல் அழகாக இருக்கிறது என ரசிகர்கள் கொஞ்சி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











