முப்பெரும் தேவியரின் இடுப்பழகு போட்டி.. கதிகலங்கிப் போன இன்ஸ்டா!

By Velsamy

சென்னை: மீண்டும் இன்ஸ்டாகிராமில் போட்டியை துவங்கி விட்டனர் சீரியல் நடிகைகள். வெறித்தனமான போஸ்ட்டுகளைப் பார்க்க முடிகிறது.

இப்படியே இருந்தால் போதாது இன்னமும் புகுந்து விளையாடுங்கள் என்று ரசிகர்களும் ஒரு பக்கம் சூடேற்றி உசுப்பேற்றி வருகிறார்கள்.

விடுவாங்களா நம்மாளுங்க.. ரசிகர்களுக்காக வெறித்தனமாக போஸ்ட் போட்டு கலக்க ஆரம்பித்துள்ளனர் ஷிவானி நாராயணன் , தர்ஷா குப்தா மற்றும் ரம்யா பாண்டியன் உள்ளிட்டோர்.

குவியும் ரசிகர்கள்

குவியும் ரசிகர்கள்

சமூக வலைத்தளங்களில் ஒவ்வொரு நடிகர்களுக்கும் ஒரு ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது .அதில் சிலர் இவர் போஸ்ட் போடும் போது இவருடைய ரசிகராகவும் இன்னொரு நடிகை போஸ்ட் போடும் போது அவருடைய ரசிகை ஆகவும் மாறிவிடுகிறார்கள். ஆனால் நம்முடைய ரசிகர்கள் நம்மை தவிர வேறு எங்கும் போகக்கூடாது என்று போட்டி போட்டுக்கொண்டு இன்ஸ்டாகிராமை கதிகலங்க வைத்திருக்கின்றனர்.

முப்பெரும் தேவியர்

முப்பெரும் தேவியர்

தர்ஷா குப்தா ,ஷிவானி, ரம்யா பாண்டியன் அதுவும் அவர்கள் சொல்லிவைத்தது போல ஒருவர் வெள்ளை கலரில் கலக்கியிருக்கிறார். ஒருவர் சிவப்பு கலரில் செய்யப்பட்டிருக்கிறார். இன்னொருவர் இரண்டும் கலந்து கொள்ளை கொள்கிறார். அதுவும் தற்போது இவர்கள் மூவருக்குமே பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது .ஆனாலும் இவர்கள் தங்களுடைய ரசிகர்கள் தங்களை விட்டுப் போய் விடக்கூடாது என்பதற்காக போஸ்ட் போட்டு ரசிகர்களை தன் வசப்படுத்தி வருகிறார்கள்.

போட்டா போட்டி

போட்டா போட்டி

ஆனால் இன்று அனைவரும் சொல்லிவைத்தது போல ஒரே டைமில் ஒருவருக்கு ஒருவர் போட்டியாகவும் போஸ்ட் போட்டு ரசிகர்களை குழப்பி இருக்கிறார்கள் .அதிலும் சில ரசிகர்கள் ஒருவருக்கு போட்ட கமெண்டை இன்னொருவருக்கும் காப்பியடித்து போட்டிருக்கிறார். இதைப்பார்த்த நெட்டிசன் கமெண்டுகளை போடும் ரசிகர்களையும் கலாய்த்து வருகிறார்கள்.

ஷிவானியின் இடுப்பழகு

ஷிவானியின் இடுப்பழகு

முதலில் ஷிவானி வெள்ளை கலரில் டிரஸ் போட்டுக்கொண்டு இடுப்பு தெரிய என்னுடைய பெருத்து போன இடுப்பைச் சிறுசாக்கி விட்டேன் என்று ரசிகர்களை பரவசப்படுத்தி இருக்கிறார். அடுத்ததாக தர்ஷா குப்தாவும் தன்னுடைய பங்குக்கு சிவப்பு கலரில் மினுமினுக்கும் உடையோடு ரசிகர்களின் கண்களுக்கு குளுமையாக நானும் பளப்பளப்பாக தான் இருக்கிறேன் என்று போஸ்ட் போட்டு இருக்கிறார்.

ரம்யமான பாண்டியன்

ரம்யமான பாண்டியன்

அடுத்ததாக ரம்யா பாண்டியன் உங்க எல்லாருக்கும் நான் சீனியர் என்று தன்னுடைய அழகான இடுப்பில் செயின் போல ஒட்டியாணம் போட்டு ரசிகர்களின் கண்களை அந்தப் பக்கம் இந்தப் பக்கம் நகர விடாமல் கட்டி வைத்திருக்கிறார். அதுவும் சும்மாவே இன்ஸ்டாகிராமில் தவம் கிடக்கும் இவர்களுடைய ரசிகர்கள் இந்த மாதிரி ஆளாளுக்கு போட்டி போட்டு போஸ்ட் போட்டதும் ஜில்மாவாகி விட்டனர்.

தூக்கம் போச்சேப்பா

தூக்கம் போச்சேப்பா

பலர் தூக்கத்தை கெடுத்து இவர்களை போட்டோக்களை பார்த்து கொஞ்சி கொஞ்சி கமெண்டுகளை போட்டு வருகிறார்கள் .ரசிகர்கள் மட்டுமல்லாமல் நெட்டிசன்களும் தங்களுடைய பங்குகளுக்கு மாற்றி மாற்றி இவர்களை முடிந்த அளவிற்கு கலாய்த்து தள்ளி வருகிறார்கள். எப்படியோ பிக் பாஸ் முடிந்த கையோடு இன்ஸ்டாகிராமை ஒரு வழி செய்ய ஆரம்பித்து விட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X