பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ரம்யா.. இப்போ என்ன செய்கிறார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பாடகி ரம்யா பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து டிவிட்டரில் வெளியிடப்படும் கருத்துக்களை ரீடிவிட் செய்து வருகிறார்.

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பாடகி ரம்யா பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து டிவிட்டரில் வெளியிடப்படும் கருத்துக்களை ரீடிவிட் செய்து வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற 14 போட்டியாளர்களில் ஒருவர் பாடகி ரம்யா. இவர் நடிகர் என்எஸ்கேவின் பேத்தி ஆவார்.

நிகழ்ச்சியின் ஆரம்பம் முதலே நெட்டிசன்களின் வாயில் அதிகம் சிக்காமல் இருந்துவந்தார். மற்றவர்கள் குறித்து புறம் பேசாமல் மிகவும் ஜெனியூனாக இருந்து வந்தார் ரம்யா.

நெட்டிசன்கள் அதிர்ச்சி

நெட்டிசன்கள் அதிர்ச்சி

இந்நிலையில் நேற்றைய எபிசோடில் ரம்யா திடீரென வெளியேற்றப்பட்டார். வைஷ்ணவி, மகத், பாலாஜி, டேனியல் குறித்தெல்லாம் நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வரும் நிலையில் ரம்யா திடீரென வெளியேற்றப்பட்டது நெட்டிசன்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்டென்ட் கொடுக்கவில்லை

கன்டென்ட் கொடுக்கவில்லை

இதனால் வாக்குப்பதிவு நேர்மையாக நடைபெறவில்லை என அவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மாறாக நிகழ்ச்சிக்கு கன்டென்ட் கொடுக்காத காரணத்தினாலேயே அவர் வெளியேற்றப்பட்டதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வீடியோ வெளியிட்ட ரம்யா

வீடியோ வெளியிட்ட ரம்யா

இந்நிலையில் ரம்யா இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் உங்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி நான் உங்கள் அன்பில் மூழ்கி போயிருக்கிறேன். லவ் யூ ஆல் என தெரிவித்துள்ளார்.மேலும் தான் பேசிய வீடியோ ஒன்றையும் என்எஸ்கே ரம்யா டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

வாக்குகளுக்கு மதிப்பில்லை

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கழுவி ஊற்றி பதிவிடப்பட்ட டிவிட்டுகளையும் அவர் ரீடிவிட் செய்து வருகிறார். பிக்பாஸ் வீட்டிலிருந்து உண்மையான போட்டியாளர்களில் ஒருவர் வெளியேற்றப்பட்டார், அதாவது மக்கள் அளிக்கும் வாக்குகளுக்கு எந்த மதிப்பும் இல்லை. உங்களை மக்களின் இதயத்திலிருந்து வெளியேற்ற முடியாது.

சிரிச்சுக்கிட்டே இருங்க

அக்கா நீங்க கவலைப்படாதீங்க.. நாங்க எல்லோரும் உங்களுக்கு ஆதரவா இருக்கோம். அங்கே இருக்கறத விட நீங்க இங்க ஜாலியா இருக்கலாம். உங்களோட கேரக்டர நாங்க பார்த்திருக்கோம் வெரிகுட் அக்கா, சிரிச்சுக்கிட்டே இருங்க, உண்மையிலேயே ஐஸ்தான் வெளியே வந்திருக்கனும். எப்படி உங்கள அனுப்பினாங்கன்னு சுத்தமா புரியவில்லை.

கஷ்டமாக உள்ளது

அந்த செயற்கை வீட்டில் நான் கொண்டாடிய ஒரு நபர் நீங்கள்.. நீங்கள் வெளியே வந்தது கஷ்டமாக உள்ளது. உங்கள் எதிர்காலம் நன்றாக இருக்கட்டும்..

இனி விருப்பமில்லை

மலேசிய மக்கள் உங்களை நேசிக்கிறோம்.. நீங்கள் அருமையான மனிதர். இனி பிக்பாஸ் பார்க்க விருப்பமில்லை.. நீங்கள் மீண்டும் வருவீர்கள் என நம்புகிறோம்.

நித்யா வெளியேறிய போது

நித்யா வெளியேறிய போது

இப்படி தன்னை குறித்த டிவிட்களை ரீடிவிட் செய்து வருகிறார் ரம்யா. ஏற்கனவே நித்யா வெளியேறிய போது நிகழ்ச்சி நேர்மையாக நடத்தப்படவில்லை என கருத்துக்கள் பதிவாகியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X