பிக் பாஸுக்காக காதலர்கள் போன்று நாடகமாடும் ஷாரிக், ஐஸ்வர்யா?
சென்னை: பிக் பாஸ் வீட்டில் நடந்து வரும் ஒரு விஷயம் பற்றிய உண்மையை தெரிவித்துள்ளார் ரம்யா.
பிக் பாஸ் 2 வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ரம்யா மகிழ்ச்சியாக உள்ளார். 24 மணிநேரமும் சண்டை நடந்து கொண்டிருக்கும் இடத்தில் இருந்து வெளியேறியதில் அவர் சந்தோஷமாக உள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஷாரிக் தன்னை விட 9 வயது பெரியவரான ஐஸ்வர்யா தத்தாவை காதலிப்பதாக காட்டினார்கள்.

காதல் ஜோடி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் காதல் ஜோடி உருவாவதும், பின்னர் அவர்கள் பிரிவதும் இந்தியில் பார்த்தது தான். ஷாரிக்கிற்கு காதலி இருப்பது தெரிந்து ஐஸ்வர்யா அவருடன் சண்டை போட்டு ஓவர் சீன் போட்டது எல்லாம் தனிக் கதை. கடந்த சில வாரங்களாக ஷாரிக்கும், ஐஸ்வர்யாவும் அடக்கி வாசிக்கிறார்கள்.

ஐஸ்வர்யா
ஷாரிக்கிற்கும், ஐஸ்வர்யாவுக்கும் இடையே காதல் இல்லை என்று ரம்யா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது, நிகழ்ச்சிக்காக இப்படி காதலிப்பது போன்று நடந்து கொள்ளாதீர்கள் என்று போட்டியாளர்கள் அனைவரும் ஷாரிக் மற்றும் ஐஸ்வர்யாவிடம் பேசினோம். உண்மையிலேயே காதலிப்பதாக இருந்தால் இதை எல்லாம் வெளியே வைத்துக் கொள்ளுங்கள் என்று அறிவுரை வழங்கினோம் என்றார்.

யாஷிகா
பிராச்சி மிஸ்ராவை காதலிக்கும் மகத் யாஷிகாவுடன் சேர்ந்து ஆட்டம் போடுவது பற்றி கமல் ஒரு வார்த்தை கூட கேட்காமல் இருப்பது பார்வையாளர்களை வருத்தம் அடைய வைத்துள்ளது. ரம்யா சொல்வதை பார்த்தால் அந்த இரண்டு பேர் செய்வது தவறு என்று சக போட்டியாளர்களுக்கும் கூட தோன்றவில்லை போன்று.

ஓவியா
பிக் பாஸ் வீட்டில் ஓவியாவின் காதலை ஏற்காத ஆரவ் மீது பலரும் கோபம் அடைந்தனர். தற்போது ஆரவும், ஓவியாவும் ஒன்றாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தாய்லாந்தில் ஊர் சுற்றியபோது எடுத்த புகைப்படங்கள், வீடியோ வெளியாகி வைரலானது. பிக் பாஸ் வீடு என்றால் காதல் இல்லாமலா?


Click it and Unblock the Notifications











