இந்தாளு யாரு நமக்கு அட்வைஸ் பண்ண: சினேகன் மீது ரம்யா, வைஷ்ணவி கோபம்
சென்னை: சினேகன் அறிவுரை கூறியது பிக் பாஸ் 2 வீட்டில் உள்ளவர்களுக்கு பிடிக்கவில்லை.
பிக் பாஸ் 2 வீட்டில் உள்ளவர்கள் போலியாக நடிப்பதாக பார்வையாளர்கள் தெரிவித்து வருகிறார்கள். ஏன், அவர்கள் போலியாக இருப்பதாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல் ஹாஸன் கூட கூறினார்.
இந்நிலையில் கவிஞர் சினேகனும் அதையே தெரிவித்துள்ளார்.

சினேகன்
பிக் பாஸ் 2 வீட்டில் டாஸ்க் ஒன்றில் கலந்து கொள்ள கவிஞர் சினேகனை அழைத்து வந்துள்ளனர். போட்டியாளர்கள் பள்ளி மாணவர்களாகவும், சினேகன் ஆசிரியராகவும் நடந்து கொள்கிறார்.

போலி
தயவு செய்து நீங்கள், நீங்களாக இருங்க, யாரும் நீங்களாக இல்லை என்ற உண்மையை போட்டியாளர்களிடம் கூறினார் சினேகன். கமல் சொன்னபோது சிரித்துக் கொண்டே இருந்த போட்டியாளர்கள் சினேகன் கூறியதும் சீறுகிறார்கள்.
வைஷ்ணவி
அது எப்படி அந்த ஆளு நமக்கு அறிவுரை கூறலாம் என்று வைஷ்ணவி, ரம்யா ஆகியோர் கோபம் அடைந்துள்ளனர். அம்மாடிகளா, சினேகன் சொன்னது தான் உண்மை.
அசிங்கம்
பிக் பாஸ் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்க சினேகனை அழைத்து வந்துள்ளனர். வந்த இடத்தில் சினேகன் அசிங்கப்பட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











