ராணியின் பிரிவை வாணி எப்படி தாங்குவாள்?
இரட்டையர்களாக பிறந்து அண்ணன் தம்பிகளை திருமணம் செய்து குழந்தைகள் பெரியவர்கள் ஆகும் வரை ஒரே வீட்டில் வாழ்ந்த வாணி ராணி இடையே இப்போது பிரிவு நேர்ந்துள்ளது.
அதுவும் வாணியின் கணவனால்தான் அந்த பிரிவு எனும் போது ராணி வேறு வழியில்லாமல் அக்கா வாணியை பிரிவை முடிவெடுக்கிறாள்.
அவளிடம் சொல்லாமலேயே இரவோடு இரவாக வீட்டை விட்டு வெளியேறுகிறாள். இந்தப் பிரிவினை வாணியால் தாங்கிக் கொள்ள முடியுமா என்பதுதான் இனிவரும் எபிசோடுகளின் கதை.

வாணி ராணி
பூமிநாதன், சாமிநாதன் அண்ணன் தம்பிகளை மணம் முடித்த சகோதரிகள் வாணி ராணி.

ஒற்றுமையான குடும்பம்
ஒரே வீட்டில் ஒற்றுமையாக குடும்பம் நடத்தினாலும் ராணியின் குடும்பத்தை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பதுதான் பூமிநாதனின் அம்மா, தங்கை ஆகியோரின் முடிவு.

செல்வியின் திருமணம்
எதை சாக்காக வைத்து வீட்டை விட்டு விரட்டலாம் என்று நினைத்த நேரத்தில் செல்வியின் காதல் திருமணம் சரியான சந்தர்ப்பமாக அமைகிறது.

வெளியேறிய பூமிநாதன்
மனைவி வாணிதான் இந்த திருமணத்திற்கு காரணம் என்று கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறி தங்கையின் வீட்டில் போய் தங்கிவிடுகிறான் பூமிநாதன்.

சமாதானம் போன ராணி
பூமிநாதனை சமாதானம் செய்யப் போன இடத்தில் ராணிக்கு அவமானம்தான் கிடைக்கிறது. உங்கள் குடும்பம் வீட்டை விட்டு வெளியேறினால்தான் அந்த வீட்டுக்கு மகனை அனுப்புவேன் என்று பூமிநாதனுடைய அம்மா கூறவே சண்டை போட்டுவிட்டு வருகிறாள் ராணி.

வாணிக்கும் அதே பதில்
கணவரை கூப்பிடப் போன வாணிக்கும் அதே பதில்தான் கிடைக்கவே வரும் போது வரட்டும் என்று விட்டு விடுகிறாள்.

பிடிவாதமான பூமிநாதன்
மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பூமிநாதனை காப்பாற்றுகிறாள் வாணி. ஆனால் எதற்காகவும் நான் வீட்டிற்கு வரமாட்டேன் ராணி குடும்பம் வெளியேறினால்தான் நான் வருவேன் என்று கூறிவிடுகிறான் பூமிநாதன்.

செல்வியின் சோகம்
திருமணமாகி போன வீட்டில் மாமனார் கொடுமைப்படுத்துகிறார். இதனால் கண்ணீருடன் கரைகிறது செல்வியின் வாழ்க்கை. இடையே கணவரின் அத்தைப் பெண் வேறு இடைஞ்சலாக வந்து அமரவே அவளையும் சமாளிக்கவேண்டிய சூழ்நிலை உருவாகிறது.

பூங்கொடியின் பாசம்
இதற்கிடையே பூங்கொடி தனது தாத்தாதான் என்று தெரியாமல் ஒரு பெரியவருடன் பழகுகிறாள். யார் என்று தெரிந்த பின்னர் அவளை ஏற்றுக் கொள்வாரா? அல்லது ஒதுக்கிடுவாரா அந்த தாத்தா?

ராணியின் முடிவு
தன்னால் அக்காவின் வாழ்க்கையில் பிரச்சினை வரக்கூடாது என்று வீட்டை விட்டு வெளியேறும் முடிவுக்கு வருகிறாள் ராணி. யாருக்கும் சொல்லாமல் பணம், கணக்கு நோட்டு, வீட்டு சாவி அனைத்தையும் வாணியின் அறையில் வைத்துவிட்டு கணவர், குழந்தைகளுடன் கண்ணீரோடு வெளியேறுகிறாள் ராணி.

வாணி ஏற்றுக் கொள்வாளா?
ராணியின் பிரிவினை வாணி ஏற்றுக் கொள்வாளா? செல்வியின் வீட்டில் மாமனாரை எப்படி சமாளிப்பாள்? பூங்கொடியின் காதல் என்னவாகும் என்ற சஸ்பென்ஸ் உடன் இனிவரும் எபிசோடுகளில் காணலாம்.


Click it and Unblock the Notifications











