காப்பி அடிப்பதிலும் ஒரு நியாயம் வேணாமாடா.
சென்னை: டி.ஆர்.பி. பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் டிவி சேனல்கள் ஏதாவது ஒன்று போட்டி போட்டுக்கொண்டு செய்து வருகின்றன.
சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என முன்னணி சேனல்கள் வித விதமான தளங்களில் சீரியல்களை களமிறக்கி வருகின்றன. ஒரு சேனலில் ஒளிபரப்பாகும் சீரியலை போன்றே இன்னோரு சேனலிலும் ஆரம்பிப்பதில் இவர்களுக்குள் பாரபட்சமில்லை.
இன்றிலிருந்து (23.9.19) சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள சீரியல் ராசாத்தி. இதுவரை கதையையும், கதாநாயகியை மட்டுமே கை வைத்த சன் டிவி இந்த முறை ஒரு படி மேலே போய் வெள்ளித்திரையை கையில் எடுத்துள்ளது.

பருத்தி வீரனை காப்பி அடித்து
இந்த சீரியலுக்காக ஒளிபரப்பாகும் ப்ரொமோ அப்படியே பருத்தி வீரன் படத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ப்ரைம் டைம் எனப்படும் 9 மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பாகிறது. 9 மணிக்கு ஒளிபரப்பான ரன் 10 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.

பவானி ரெட்டி
சரண்யாவை தொடர்ந்து, பவானி ரெட்டியும் விஜய் டிவியிலிருந்து சன் டிவியில் கால் பதிக்கிறார். சட்டென இந்த சீரியலின் ப்ரோமோவை பார்த்தால் நமக்கே ஒரு நிமிடம் சந்தேகம் வந்து விடும். நாம் பார்ப்பது சீரியல் ப்ரோமோவா அல்லது சினிமா ப்ரோமோவா என்று.

விசித்ரா
அத்தனை பேரும் சினிமா நட்சத்திரங்கள். விஜயகுமார், செந்தில், விசித்ரா என பல வெள்ளித்திரை நட்சத்திரங்கள் இதில் உள்ளனர். இதிலும் விசித்ரா 18 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

சினிமா போலவே
அதேபோல பல கிராமத்து படங்களில் நடித்து மிரட்டிய நடிகர்களும் இதில் காணப்படுகின்றனர். இந்த புது சீரியலின் வரவும், ரன் சீரியலின் கால மாற்றமும் சன் டிவிக்கு கை கொடுக்கிறதா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











