நைட்டியுடன் ‘வித் லவ்’ பட பாடலுக்கு டான்ஸ் ஆடிய பிக் பாஸ் பியூட்டி.. சும்மா லைக்ஸ் அள்ளுது!

சென்னை: சின்னத்திரை நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான ரவீனா தாஹா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த மாதம் வெளியாகி வெற்றிப் பெற்ற 'வித் லவ்' படத்தின் பாடலுக்கு நைட்டியுடன் டான்ஸ் ஆடியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

செளந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் மதன் இயக்கத்தில் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடிப்பில் கடந்த பிப்ரவரி 6ம் தேதி வெளியான 'வித் லவ்' திரைப்படம் தான் பாக்ஸ் ஆபீஸில் இந்த ஆண்டு வெளியான படங்களில் தலைவர் தம்பி தலைமையில் திரைப்படத்துக்குப் பிறகு வெற்றிப் பெற்ற படம் என்கின்றனர்.

Raveena Daha dance with Nighty for With Love movie song
Photo Credit:

இந்த மாதம் தியேட்டர் ஓனர்களை கொஞ்சம் சந்தோஷத்தில் ஆழ்த்தியதும் இந்த படம் மட்டுமே என்கின்றனர். இந்த வாரம் புதிய படங்கள் பெரிதளவில் வராத நிலையில், அஜித்தின் துணிவு, விஜய்யின் கில்லி ரீ ரிலீஸை வைத்து தமிழ் சினிமாவை ஓட்டிக்கொண்டிருக்கின்றனர்.

வெற்றி பெற்ற 'வித் லவ்': டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை இயக்கி அதில் ஒரு சிறிய வேடத்தில் நடித்த அபிஷன் ஜீவிந்துக்கு முதல் படமே 90 கோடி வரை சர்ப்ரைஸ் ஆக வசூல் ஈட்டிக் கொடுத்து மிகப்பெரிய வெற்றியை தந்தது. ஜூனியர் பிரதீப் ரங்கநாதன் என்றே கோலிவுட்டில் சிலர் அபிஷன் ஜீவிந்தை கூப்பிட ஆரம்பித்துள்ள நிலையில், அவரை போலவே இயக்கத்தை விட்டு விட்டு ஹீரோவாக மாறிவிட்டார். அவர் ஹீரோவாக நடித்த வித் லவ் திரைப்படமும் இதுவரை உலகளவில் 26 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நைட்டியுடன் ஆட்டம் போட்ட ரவீனா தாஹா: பூஜை, ஜில்லா, புலி, ராட்சசன், எனிமி, பீட்சா 3 உள்ளிட்ட படங்களிலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து பிரபலமான ரவீனா தாஹா பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றார். இந்நிலையில், நைட்டியுடன் 'வித் லவ்' படத்தில் இடம்பெற்ற "அய்யோ காதலே" பாடலுக்கு நடனமாடியபடி டிரெஸ் சேஞ்சையும் செய்து அசத்திய வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார். அனஸ்வரா ராஜனுக்கு பதில் நீங்களே நடித்திருக்கலாம் என அவரது ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். இது போல நல்ல படங்களை செலக்ட் பண்ணி நடிங்க என்றும் அட்வைஸ் பறந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X