முட்டிக்கு மேல் ஏற்றிக் கட்டிய லுங்கி.. மலையாளப் பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட ரவீனா!
சென்னை: முட்டிக்கு மேல லுங்கியை தூக்கிக்கட்டி வெறித்தனமாக ஆட்டம் போட்டு பார்ப்பவர்களை ஸ்வீட் ஷாக்காக்கியுள்ளார் ரவீனா தாஹா.
நாக்கை மடித்து இறங்கி குத்திய குத்தை பார்த்து அசந்து போய் விட்டனர் நம்ம ரசிகர்கள்.
ஆட்டம்னா ஆட்டம் இதுதான், வெறித்தனமாக இருக்கு . லுங்கி டான்ஸ் க்கு பிறகு இனி இதுதான் டிரெண்டிங் என ரசிகர்கள் செம என்ஜாய் செய்து கொண்டுள்ளனர்.

சக்தி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌனராகம் இரண்டாவது சீசனில் சக்தியாக நடித்துக்கொண்டிருக்கும் ரவீனா டாடா தற்போது இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் சீரியலில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்தில் டிரெண்டிங்கில் இருந்து வருகிறார் .இன்று இவருக்கு பன்னிரண்டாம் வகுப்பு ரிசல்ட் என்பதை மறந்து இவர் போட்ட ஆட்டத்தை பார்த்து ரசிகர்கள் நன்றாக என்ஜாய் பண்ணி வருகிறார்கள்.

டாப் சீரியல்
ரவீனா நடித்து வரும் மௌனராகம் சீரியல் தற்போது டிஆர்பி யில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் இவருடைய நடிப்பு .அதுவும் இதுவரைக்கும் குழந்தை நட்சத்திரமாக பார்த்து வந்த இவர் தற்போது கதாநாயகியாக மாறி இருக்கிறார். இவர் தற்போது 12-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார் .இந்த நிலையில் சீரியலில் கதாநாயகியாகவும் அந்த சீரியலில் இவருக்குத் திருமணமும் முடிந்து விட்டது .

மீம்ஸ் குவியல்
இதனால் நெட்டிசன்கள் கையில் மாட்டி இருக்கும் இவருடைய போட்டோஸ்கள் இன்ஸ்டாகிராம், ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை கலக்கி வருகிறது .இவரை வைத்து மீம்ஸ் களால் தெறிக்க விட்டு வருகின்றனர். இவர் சீரியலில் நடிக்க வருவதற்கு முன்னரே குழந்தை நட்சத்திரமாக சினிமாக்களிலும் நடித்துக்கொண்டிருக்கிறார்.

ஜில்லாவில் ஒரு சீன்
ஜில்லா படத்தில் விஜயுடன் ஒரு சீனில் வந்திருப்பார் .அவருடன் முதல் முதலாக நடிக்கும் போது இவருக்கு ரொம்பவே சந்தோஷமாக இருந்திருக்கிறது .அதுவரைக்கும் டிவியில் பார்த்த இவரை முதன் முதலாக பக்கத்தில் பார்க்கும்போது பேசவே வார்த்தை வரவில்லையாம். விஜய்தான் இவரிடம் என்ன படிக்கிறாய், உனக்கு என்ன பிடிக்கும் என்று எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார் .
Recommended Video

சகஜமான பேச்சு
என்னுடைய படத்தில் கடைசியாக எதை பார்த்தாய் அதில் ஏதாவது உனக்கு புடிச்சிருந்தா என்று கேட்டிருக்கிறார். அதற்கு பிறகுதான் இவர் அவரிடம் சகஜமாகப் பேச ஆரம்பித்திருக்கிறார். ஜில்லா படத்தில் அந்த ஹாஸ்பிட்டலில் இருந்து கீழே விழும் குழந்தையாக இவர்தான் நடித்திருக்கிறார் .அந்த சீனில் நடித்துக் கொண்டிருக்கும்போது உண்மையிலேயே விஜய் அழுவதைப் பார்க்கும்போது இவருக்கே கஷ்டமாக இருந்ததாம்.

ராட்சசனில் அசத்தல்
அதுமட்டுமில்லாமல் ராட்சசன் படத்திலும் முதலில் இவருக்கு அந்த படத்தில் என்ன கேரக்டர் என்றே தெரியாமல் தான் நடிக்க ஓகே சொல்லி இருக்கிறார் .அங்கே கதை சொல்லும்போதுதான் இவரிடம் ஆசிரியர் தப்பாக நடந்து கொள்வதை பற்றி சொல்லியிருக்கிறார்கள் .அவரும் நடிப்பு என்றால் எல்லா கேரக்டரையும் பண்ண வேண்டும் என்று ஓகே சொல்லிவிட்டாராம் .

பளார்னு அறை
அப்போது இவரது கன்னத்தில் இன்பராஜ் சார் ஓங்கி அடிப்பது போல சீன் இருக்கும் அதில் உண்மையாகவே இவரது கன்னத்தில் அடித்து விட்டாராம். அந்த ஷாக்கில் இருந்து இவர் சிறிது நேரம் மீளவே இல்லையாம். இவர் முதலில் சினிமாக்களில் நடிக்கிறார் என்று சொன்னதும் இவர் அம்மாவும் அப்பாவும் சப்போர்ட் செய்தாலும் தாத்தா பாட்டி எல்லாம் மறுத்திருக்கிறார்கள்.

நமக்கெல்லாம் செட்டாகாது
சினிமா எல்லாம் நம்ம குடும்பத்துக்கு செட்டாகாது என்று கூறியிருக்கிறார்கள் .ஆனால் அதற்குப் பிறகு இவர் நடித்த சீரியல்களை பார்த்ததும் தற்போது இவருக்காக தொடர்ந்து சீரியல்களை பார்க்க ஆரம்பித்து விட்டார்களாம் .இவர் நடித்து வரும் மௌனராகம் சீரியல் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் இவருக்காக அவ்வளவு நேரம் முழித்து இருந்து சீரியலை பார்த்து வருகிறார்கள் ரசிகர்கள்.

விடாமல் ரசிக்கும் ரசிகர்கள்
அடுத்த நாள் நேற்றைய சீரியல் நன்றாக இருந்தது என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். தற்போது இவர் பனிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருப்பதால் இன்று இவருக்கு ரிசல்ட் இந்த நிலையில் இவர் ஆட்டம் போட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்ததும் நெட்டிசன்கள் பாப்பா இன்னைக்கு ரிசல்ட் ஞாபகம் இருக்கா என்று மிரட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











